இந்தியாவில் தூக்குத் தண்டனையை சட்டப்புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள்உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் மீண்டும்வலியுறுத்தியுள்ளார். பச்சன்சிங் வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு, பெரும்பான்மை அடிப்படையில்தூக்குத் தண்டனைக்கு சட்ட அங்கீகாரம்வழங்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

30ஆம் தேதி தூக்கிலிடுவதற்கு பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாக்கூப்மேமனுக்கு தேதி குறித்த நிலையில் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இராஜீவ்கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன்தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றநீதிபதி கே.டி. தாமஸ், பதவி ஓய்வுக்குப் பிறகு தூக்குத்தண்டனைக்கு எதிராக கருத்துகளை வலியுறுத்திவருகிறார். தற்போது யாக்கூப் மேமன் பிரச்சினையில்தூக்குத் தண்டனைக்கு எதிராக தனது கருத்தைப்பதிவு செய்துள்ளார்.

ஒரு நீதிபதி தூக்குத் தண்டனைவிதிக்கக்கூடிய குற்றம் என்று கருதுவதால் மட்டுமேதூக்குத் தண்டனை விதித்திடக் கூடாது என்றுகூறியுள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, சமூகப்பார்வையை மய்யமாகக் கருதி செயல்பட வேண்டும்.சட்டத்தின் நிர்பந்தம், சூழ்நிலையை மட்டுமேநீதிபதிகள் கருத்தில் கொள்ளக்கூடாது. மக்கள்உணர்வுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டுமேதவிர, நீதிபதிகள் தங்களின் முடிவுகளை மட்டுமேசார்ந்திருக்கக் கூடாது என்றும் நீதிபதி கே.டி. தாமஸ்கூறியுள்ளார்.

யாக்கூப் மேமனுக்கு கருணை அடிப்படையில்மன்னிப்பு வழங்க வேண்டும் என்று இந்த வழக்குவிசாரணையில் முனைப்புடன் செயல்பட்ட இந்தியஉளவு நிறுவன (‘ரா’) அதிகாரி பி. இராமன்வெளியிட்ட கருத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

பி. இராமன் கருத்து, இப்போது இணையதளங்களில் இருக்கிறது. நீதிமன்றமே தாமாக முன் வந்துஇவரது கருத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றும், கே.டி. தாமஸ் கூறியுள்ளார்.பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கில், பல முக்கியதகவல்களை விசாரணையில் யாகூப் மேமன்தெரிவித்துள்ளதோடு, பாகிஸ்தானுக்கு தொடர்புஇருக்கிறது என்பதற்கான பல முக்கிய தகவல்களையும் கூறியிருக்கிறார். விசாரணை நடத்தியஉளவுத் துறை இந்த வழக்கிலிருந்து அவரைக்காப்பாற்ற, உறுதியளித்திருக்கக்கூடும். இந்தநிலையில் தானாக முன்வந்து சரணடைய வந்தஒருவரை, கையில் சிக்கியவர் என்பதால், தூக்கிலிடக்கூடாது என்று பிரபல வழக்கறிஞரும் மாநிலங்களவைஉறுப்பினருமான கே.டி. எஸ். துள்சி கூறியுள்ளார்.

தண்டனையைக் குறைக்க கழகம் கோரிக்கை

 “யாகூப் மேமனின் மரணதண்டனையை கருணை அடிப்படையில் இரத்து செய்துதண்டனை குறைப்பு வழங்க வேண்டும்” என்று திராவிடர் விடுதலைக் கழகம்வலியுறுத்துகிறது.“மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முதன்மையான குற்றவாளிகள் இருவர் வெளிநாடுகளுக்குதப்பி சென்று விட்ட நிலையில், குற்றவாளியின் தம்பியான யாகூப் மேமன் தானாக முன் வந்துதன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டார். அவ்வாறு தன் மீது குற்றம் இல்லை எனதானாகவே முன் வந்தவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் தூக்குகயிற்றின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போது மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளநிலையில் இருக்கும் யாகூப் மேமனை தூக்கிலிடப் போவதாக அறிவித்திருப்பது ஏற்புடையதுஅல்ல.

உலகம் முழுவதும் மரணதண்டனைக்கு எதிராக அனைத்து மனித உரிமை ஆர்வலர்களும் குரல்எழுப்பிக் கொண்டுள்ள நிலையிலும், பல நாடுகள் மரணதண்டனையை இரத்து செய்துவிட்டநிலையிலும் மனித நேயமுள்ள நாகரீக சமுதாயத்தை நோக்கி உலக நாடுகள் சென்றுகொண்டிருக்கும் இந்தச்சூழலில் இந்தியாவில் இப்படி ஒரு மரணதண்டனை அறிவிப்புவந்திருப்பது மிகவும் வருந்ததக்கதாகும்.

ஆகவே இந்த மரணதண்டனையை இரத்து செய்து யாகூப் மேமனுக்கு தண்டனை குறைப்புவழங்க வேண்டும் என கோருகிறோம்” என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

Pin It