1) ‘வாஸ்து’ நம்பிக்கையால் டெல்லியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில்70 எம்.பி.க்கள் குடியேறவில்லை - செய்தி

விடாதீங்க... டெல்லிக்குப் போகும் விமானத்துலயும் வாஸ்துப்படி இருக்கைகேளுங்க! இல்லாவிடில் டில்லிக்கும் போகாதீங்க!

2) தில்லை நடராசன் கோபுரத்தை மறைத்து கட்டிடம் கட்டுகிறார்கள், தீட்சதர்கள்.- செய்தி

கோபுரத்தை இடிச்சுட்டு ‘பிளாட்’ போட்டுக்கூட விப்பாங்க; அதுக்கெல்லாம்உச்சநீதிமன்றத்துல சு.சாமி அதிகாரம் வாங்கிக் கொடுத்திருக்காரு!

3) கோயில்களில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வது ஆகமத்துக்கு எதிரானது.- இந்து அமைப்புகள் எதிர்ப்பு

சூரிய பகவானையும் ‘சூத்திரர்’ பட்டியலில் சேர்த்துட்டேளா?

4) திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக ரீதியாக எடுக்கும் முடிவுகளால்‘புரோக்கர்’களுக்குத் தான் பயன். - ‘தினமலர்’

விடுங்கய்யா... ஏழுமலையான் புரோக்கர்களான அர்ச்சகர்கள் மட்டும்தான்காலம்காலமாய் பயனடைய வேண்டுமா என்ன?

5) அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம். - செய்தி

மண்சோறு உண்டார்; மண்ணில் உருண்டார்; ‘மந்திரி’யும் இழந்தார்!

6) கடவுள் பெயர்களை வணிக நிறுவனங்கள் வர்த்தகத்துக்குப் பயன்படுத்த தடைஇல்லை. - டெல்லி உயர்நீதிமன்றம்

வர்த்தகத்துக்குப் பயன்படுத்தலாம்; வர்த்தக மோசடிக்கும் பயன்படுத்தலாம்; கடவுள் வந்து கேட்கவா போறாரு!

Pin It