“இந்துவாக இருப்பவர் ஒழுக்கவாதி; ‘இந்துத்துவா’வை ஏற்றுக் கொண்டவர், பலே பலே ஒழுக்கவாதி” என்று நாம் சொன்னால், அண்ணாமலைக்கு கோபம் வந்து விடும். “யாரடா அப்படி சொன்னது? நீ எந்த ஊடகம்பா? மரியாதையாகப் பேசு; மான நஷ்ட வழக்கு போடுவேன்” என்று பொங்கிடுவார். ஏதோ, கிண்டலுக்காக நாம் எழுதவில்லை. அவரது பேச்சை ‘தினமலர்’ (டிசம்.12) வெளியிட்டிருப்பதிலிருந்துதான் கூறுகிறோம். அண்ணாமலைக்கு எல்லாவற்றுக்கும் ஆதாரம் வேண்டுமே!

“திராவிட இயக்கங்களில் இருப்பவர்களே அஞ்சி வெட்கப்படும் அளவிற்கு பாலியல் குற்றச்சாட்டுகள் நம்மோடு இருப்பவர்கள் மீது பரபரப்பாக எழுகிறது. ஒழுக்கக் கேடானவர்களுக்கு பா.ஜ.க.வில் இடம் இல்லை. அவர்கள் கட்சியிலிருந்து விலகி விடலாம்” என்று கண்டிப்பாகக் கூறியிருக்கிறார். அதாவது பாலியல் குற்றச்சாட்டிலும் பா.ஜ.க.வை அடிச்சுக்கவே முடியாது; அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று மகிழ்ச்சியை அல்ல; வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

என்ன சார் இது - இதெல்லாம் ஒரு பிரச்சினையா... நம்ம இந்து தர்மத்தில் பகவான் கிருஷ்ணன், இந்திரன், சிவன் போன்ற பிரமுகர்கள் வாழ்ந்து காட்டியதைத் தானே நாங்களும் பின்பற்றுகிறோம். இதுல ஒழுக்கக் கேடு எங்கிருந்து வருகிறது? அண்ணாமலை இப்படி எல்லாம் நமது புராணங்களைப் படிக்காமலேயே பேசுவது நமது பகவான்களையே அவமதிப்பது இல்லையா?” என்று கேட்கிறார், ஓர் உண்மையான பா.ஜ.க. இந்து பக்தர். நியாயம் தான்!

ஆனாலும், மக்கள் இதை எல்லாம் வெறுக்க மாட்டார்களா? என்ற நியாயமான கேள்வி எழவும் வாய்ப்புகள் உண்டு. எனவே அண்ணாமலை யாருக்கு அவரது கட்சி நலன் கருதி சில இலவச ஆலோசனைகளை வழங்குகிறோம். ஏற்பதும் புறந்தள்ளுவதும் உங்கள் மத உரிமை!

இன்னும் ஏராளமான யோசனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்துக்களுக்கான பாரதத்தை பாரத மாதா தலைமையில் உருவாக்கி ஆன்மீகத்தையும் ஒழுக்கத்தையும் காப்பாற்ற இப்போதைக்கு இதுவே போதும் என்பது அடியேன் கருத்து.

இந்த ‘குருnக்ஷத்திரத்தில்’ அண்ணாமலை ‘ஜி’ - ‘ஜெயம்’ பெற அடியேனின் அநேகக் கோடி ‘பிரார்த்தனைகள்’; வாழ்க ‘காசி புண்ணிய nக்ஷத்திர’ தமிழ்; வளர்க பாரத மாதாவின் இந்து ஒற்றுமை! ஒழிக ஒழுக்கமற்ற இந்துக்கள்!

- கோடங்குடி மாரிமுத்து