வினாக்கள்... விடைகள்...!

1) நடிகர்களை நம்பி பா.ஜ.க. கட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. - தமிழிசை சவுந்தரராஜன்

அப்படியா? ரஜினி, பா.ஜ.க.வுக்கு வர மாட்டேன்னு தனது முடிவை உறுதியா தெரிவிச்சுட்டாரா?

2) அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்னை “பினாமி முதல்வர்” என்று கூறுகிறார்கள். - ஓ. பன்னீர்செல்வம்

நியாயமான பேச்சு! ‘முதல்வர்’ என்று கூறுவதையே ஏற்க மறுக்கும் ‘முதல்வரை’ பினாமி முதல்வர் என்று எப்படிங்க சொல்லலாம்?

3) இந்தியாவில் சிறைச் சாலைகள் அனைத்தும் கல்விச் சாலைகளாக மாறவேண்டும். - கிரண்பேடி

அது முடியாது என்பதால்தான் கல்விச் சாலைகளையாவது சிறைச் சாலைகளாக மாத்துவோமேன்னு தீவிரமா, முயற்சி செஞ்சுகிட் டிருக்கோங்க!

4) வாக்காளர்களுக்கு எந்த காலத்திலும் பணம் கொடுக்க மாட்டோம் என்று தமிழகத்திலுள்ள கட்சிகள் வாக்குறுதி அளிக்க வேண்டும். - மருத்துவர் இராமதாசு

வாக்குறுதிதானே! ஓ, தாராளமாக தரலாமே!

5) புதுவை முதல்வர் டெல்லி மாநாட்டில் பங்கேற்கவில்லை. அன்றைய தினம் அழுக்கு சாமியார் குரு பூஜையில் கலந்து கொண்டார். -செய்தி

மோடியை சந்திச்சு என்ன கிடைச்சுடப் போவுது? சாமியாரிடம் ஆசியாவது கிடைக்கும்னு முடிவு செஞ்சுட்டார் போல.

6) பழனி கோயிலுக்கு பக்தர் வாங்கிய 1000 கோடி சொத்து, கணக்கில் வரவில்லை. - செய்தி

எதுக்கும், சுவிஸ் வங்கியில் முருகப் பெருமான் பெயரில் கணக்கு இருக்குதான்னு விசாரிச்சுப் பாருங்க.
7) சர்ச்சைக்குரிய ‘இராமன் பிள்ளைகள்’ பேச்சினைப் பேசிய பெண் அமைச்சர், கிராமத்துப் பெண் என்பதைப் பார்க்க வேண்டும். - மோடி
அதனால்தான் பா.ஜ.க. பேச விரும்பி, பேசத் தயங்கி மறைப்பதை வெளிப்படையாக போட்டு உடைச்சுட்டார் போலிருக்கு.