தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்தும் இலக்கியப் போட்டி 2011

அறிவிப்பு

23-வது ஆண்டாக இவ்வாண்டும் படைப்பாளிகளுக்குக் கீழ்க்கண்ட இலக்கிய வகைகளுக்குப் போட்டி அறிவிக்கப்படுகிறது.

பரிசுகள்

1 சிறந்த ஆய்வு நூலுக்கான நா.வானமாமலை நினைவுப் பரிசு.

2. சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான தொ.மு.சி.ரகுநாதன் நினைவுப் பரிசு.

3. சிறந்த நாவலுக்கான அழகிய நாயகி அம்மாள் நினைவுப் பரிசு.

4. சிறந்த சிறுகதை நூலுக்கான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவுப் பரிசு.

5. சிறந்த சிறுவர் நூலுக்கான தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு.

6. சிறந்த நாடக நூலுக்கான அறந்தை நாராயணன் நினைவுப் பரிசு.

7. சிறந்த கவிதை நூலுக்கான கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் நினைவுப் பரிசு.

8. சிறந்த கட்டுரை நூலுக்கான என்சிபிஎச் இராதாகிருஷ்ணமூர்த்தி நினைவுப் பரிசு.

விதிமுறைகள்

1. பரிசுக்கான (1-6) நூல்கள் 2007-க்கு முன் வந்தவையாக இருக்கலாகாது.

2. பிற பரிசுகளுக்கான (7, 8) நூல்கள் 2010, 2011-களில் வெளிவந்தவையாக இருக்க வேண்டும்.

3. நூல்கள் அச்சுப்படிகளாகவோ கையெழுத்துப் படிகளாகவோ இருக்கலாம்.  கையெழுத்துப் படிகள் அச்சில் 90 பக்கங்கள் வருமாறு இருப்பது நல்லது.

4. படைப்பாளி இப்போட்டிகளில் 2005-க்குப் பிறகு பரிசு பெற்றவராக இருக்கலாகாது.

5. போட்டிக்கெனத் தனி நுழைவுப் படிவம் இல்லை.  படைப்பாளி முகவரி, தன் குறிப்பு, நூல் குறித்த சிறு குறிப்பு ஆகியவற்றுடன் நூலின் இரு படிகள் அனுப்புக.  தொலைத் தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி தெரிவிக்க.

6. நூல்கள் 15-7-2011-ற்கு முன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புக.

செந்தீ நடராசன்

மாநிலச் செயலர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,

122, கல்படித் தெரு, நாகராசா கோவில் அருகில்,

நாகர்கோவில் 629001 பேச: 9441 38856, 04652- 228856

7. வெற்றிபெறும் படைப்பாளிகளுக்கு செப்டம்பர் 2011-இல் எட்டயபுரத்தில் நடைபெறும் பாரதி விழாவில் பரிசுகள் வழங்கிப் பெருமை பெறுவோம்.

                                                                      இரா.காமராசு   செந்தீநடரான                                                                     

மாநிலப்பொதுச்செயலாளர்                              

மாநிலச் செயலாளர்

ஆ.சிவசுப்பிரமணியன்

மாநிலத் தலைவர்

Pin It