கேள்வி: ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்கிறீர்கள். ஆனால், நீங்கள் எழுதி வெளியிட்ட ‘ராஜீவ் காந்தி கொலை - விடை கிடைக்காத வினாக்களும், கேட்கப்படாத கேள்விகளும்’ என்ற புத்தகத்தில் ராஜீவ் படுகொலைக்குக் காரணமே ‘சோனியா, அவருடைய அம்மா பவ்லோமைனா, அர்ஜுன் சிங், மார்க்ரெட் ஆல்வா ஆகிய நான்கு பேர்தான். அவர்களை விசாரிக்க வேண்டும்’ என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்களே? எது உண்மை?

சுப்பிரமணியசாமி: “ஆமாம். அப்படித்தான் எழுதியிருந்தேன். அதை எப்போதும் கூறுவேன். ராஜீவ் படுகொலைக்குக் காரணமே, அதைத் திட்டமிட்டுச் செய்ததே சோனியா தான். இதில் சோனியாவின் அம்மா பவ்லோமைனா, அர்ஜுன்சிங், மார்க்ரெட் ஆல்வா ஆகியோரது பங்கும் இருக்கிறது. இந்த நால்வரையும் சி.பி.ஐ. முறையாக விசாரித்தாலே உண்மைகள் வெளிவந்துவிடும். இதில் கூலிப் படையாகச் செயல்பட்டது மட்டுமே விடுதலைப்புலிகளின் பங்கு. சோனியாவிடம் ஏராளமான பணத்தை வாங்கிக் கொண்டு அந்தக் கொலையைச் செய்தார்கள். இதுதான் உண்மை. இதை நான் மறுக்கவில்லையே. புலிகள் கொலை செய்தார்கள். செய்யச் சொன்னது சோனியா.” சுப்ரமணியசாமி பேட்டி - ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ (26.2.09)

சோனியாவை சேலை கட்டிய முசோலினி என்று பேசியதற்காக, நாஞ்சில் சம்பத் மீது ஓராண்டுக்கு வெளியே வர முடியாத தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த - கலைஞர் கருணாநிதி, சோனியாவின் உருவப் பொம்மையை எரித்தால் கைது செய்ய ஆணையிடும் - கலைஞர் கருணாநிதி, ராஜீவ் காந்தியின் கொலைக்கே திட்டமிட்டது சோனியாதான் என்று சுப்பிரமணியசாமி பேட்டி அளித்துள்ளாரே, இதற்காக சு.சாமி மீது தி.மு.க. அரசின் சட்டங்கள் பாயாதது ஏன்? ‘சூத்திரர்கள்’ மீது பாயும் அடக்கு முறை சட்டங்கள் பார்ப்பனர்கள் மீது பாயாதா?