நிருபமா போய் ராஜபக்சேவைச் சந்தித்துவிட்டு வந்து, அந்த சந்திப்பை வைத்து, எல்லாம் திருப்தியளிக்கிறது என்று தில்லி தமிழக அரசுகள் சொன்ன பிறகும் மீண்டும் சிங்கள கடற்படை தமிழக மீனவர்களைக் கைது செய் துள்ளது. இது என்னதான் நடக்கிறது கடலில் என விதம் விதமான சந்தேகங்களை எழுப்புகிறது.

இந்தியா ராணுவ பலத்தில் உல கின் நான்காவது இடத்தில் உள்ள ஒரு நாடு. இதை நோக்க சுண்டைக்காய் நாடு இலங்கை.

தமிழக மீனவர்கள் தாக்கப்படு கிறார்கள் என்றால் இந்தியா ‘மீண்டும் இப்படி நேர்ந்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்கவேண்டி நேரும்’ என்று சிங்கள அரசுக்கு ஓர் எச்சரிக்கை செய்யக்கூடாதா. ஏன் செய்யவில்லை? இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான் சீனா வரும் என்று அஞ்சுகிறதா? அதற் காக இலங்கையோடு நல்லுறவு தொடர்ந்தால் போதும் என்று கருதுகிறதா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா? இப்படியெல்லாம் யோசிக்கும் போதுதான் இது எண் ணற்ற சந்தேகங்களை எழுப்புகிறது.

1. இந்தியக் கடற்பகுதியைப் பாதுகாக்க இந்தியக் கப்பற்படை, கடலோரக் காவல்படை என வங்கக் கடலில் எதாவது இருக்கிறதா? இல்லை.

2. தமிழக மீனவர்கள் மீது இவ்வளவு தாக்குதலும் நடக்க, கப்பல், காவல் படைகள் என்ன செய்து கொண்டிருந்தன? செய்தியைப் பார்த் தால் கடலில் சிங்களக் கப்பற்படை மட்டுமே இருப்பதாகத்தான் தெரி கிறதே தவிர இந்தியப் படை என ஒன்று இருப்பதாகவே தெரியவில் லையே ஏன்?

3. சிங்கள கப்பற்படை இவ்வளவு அட்டூழியங்களையும் எந்தத் தெம்பில், தைரியத்தில் செய்கிறது? தமிழக மீன வர்கள் கேட்பாரற்ற அனாதைகள், இந்திய தமிழக அரசுகள் அவர்களுக் காக வராது, எதுவும் செய்யாது என்கிற எண்ணத்திலா?

4. சிங்களக் கப்பற்படை தானாக இந்தத் தாக்குதல்களை நடத்துகிறதா, அல்லது இந்திய அரசின் வழிகாட்டு தலில் நடத்துகிறதா? அதாவது வங்க, இந்து மாக்கடல் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, மீனவர்களை அச்சுறுத்தி வைக்க, அங்கு வேறு எதுவும் நடமாட்டம் இல்லாமல் இருக்க இப்படிப்பட்ட நடவடிக்கை களை மேற்கொள்கிறதா?

5. நிருபமா ராஜபக்சேவைச் சந்தித்தபோது, நிருபமா என்ன கேட் டுக் கொண்டார், அதற்கு ராஜபக்சே என்ன சொன்னார்? இதற்குப் பிறகும் கைது நடக்கிறது என்று சொன்னால் என்ன பொருள்? ஒரு வேளை இது தேர்தல் நேரம், தமிழக மீனவர்களைத் தாக்கவோ கொல்லவோ வேண்டாம், கைது மட்டும் செய்யுங்கள், அதை வைத்து நாங்கள் அரசியல் நடத்திக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்தாரா?

6. இல்லாவிட்டால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போதெல் லாம் கடிதம் மட்டும் எழுதி விட்டோ, தமிழக மீனவர்கள் கைகள் மீன் மட்டும் பிடித்துக் கொண்டிருக்காது என்று வழக்கமான வெத்துவேட்டு அறிக்கைகள் விட்டோ ‘பயாஸ்கோப்’ காட்டிக் கொண்டிருந்த தி.மு.க. இப்போது திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறதே. மீனவர்கள் மீது என் றைக்குமில்லாத அக்கறை இன்று என்ன திடீரென்று வந்துவிட்டது? இது என்ன ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்கவும், தமிழக வாக்கு வங்கிகளைக் கவரவும் சிங்கள அரசோடு சேர்ந்து முன்கூட் டியே ஏற்பாடு செய்து கொண்டு நடத்திய திட்டமிட்ட நாடகமா?

இப்படியெல்லாம் கேள்விகள் எழுகின்றன. அர்த்த சாஸ்திரம் படித்து அரசியலில் சாணக்கிய விருது பெற்ற ஆட்சியாளர்கள் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், பாதுகாக்க வும் எப்படிப்பட்ட சூழ்ச்சிகளிலும் ஈடுபடுவார்கள். யாரையும் பலி கொடுப்பார்கள். இதில் எந்த ஈவு இரக்கமும் பார்க்கமாட்டார்கள் என்பதுதானே வரலாறு. அந்த சூழ்ச்சி களில் முனைவர் பட்டம் வாங்குவது தானே ‘சாணக்கியத்தனம்’.

ஆகவே தமிழக வாக்காளர்கள் இது விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். ஆதிக்கங்களின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் தமிழின விரோதிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவதில், அவர்களுக்கு எதிராக மக்களை விழிப்பூட்டுவதில் கவனமாக இருக்கவேண்டும்.

இத்தோடு ஒன்று, தமிழக மீன வர்களை சிங்களவர் பிடித்துச் செல்கிறார்கள் என்பதற்காக, இந்தியக் கப்பற்படை பதிலுக்குச் சிங்கள மீனவர் களைக் கைது செய்து தமிழகத்துக்குக் கொண்டு வந்து, தமிழக மக்களுக்குப் படம் காட்டி, அவர்களுக்கு ‘ஆத்ம சுகம்’ அளிக்கும் நோக்கிலும் இந்திய அரசு செயல்படத் தேவையில்லை.

நாம் கோருவதெல்லாம், யாரும் யாரையும் கைது செய்ய வேண்டிய தில்லை. தாக்க வேண்டியதில்லை. பொருள்களைக் கைப்பற்றத் தேவை யில்லை.

தமிழக, சிங்கள மீனவர்கள் இரு தரப்பாரும், அச்சமின்றி பிரச்சினை யின்றி சுதந்திரமாக மீன் பிடிக்க இரு அரசுகளும் உத்திரவாதம் தரவேண்டும். இதற்கு இந்திய கப்பற்படை, சிங்களக் கப்பற்படை இரண்டும் பாதுகாப்பு வழங்கவேண்டும்.

பிரச்சினை எது வந்தாலும், கப்பற் படையினரிடம் முறையிட்டு, குடிமை நிர்வாக அடிப்படையில்தான் அதற்குத் தீர்வு காணவேண்டுமே யல்லாது, எந்தத் தரப்பும் தாக்குதலில் ஈடுபடக் கூடாது என்கிற ஏற்பாட்டையும் செய்ய முயலவேண்டும்

Pin It