periyar 450 copyயோக்கியர்களே அரசியல் பொது வாழ்வுக்கு வரும்படியான நிலையை இன்னமும் நம்முடைய நாடு எய்தவில்லை. பணக்காரனுக்குப் போனது போக மீதிதான் பணக்காரன் அல்லாதவர்களுக்குக் கிடைக்கிறது.

அப்படி மற்றவர்களுக்கு கிடைக்கும் ஸ்தானங்களும் பணக்காரத் தன்மைக்கு எவ்வளவு அயோக்கியத்தனம், நாணயக்குறைவு, துரோக புத்தி வேண்டி இருக்கிறதோ அவ்வளவும், அதற்கு மேலும் உள்ளவர்களுக்குத்தான் பெரிதும் கிடைக்கிற மாதிரியில் இருக்கிறது.

ஏதோ சிலர் யோக்கியர்களும் இருக்க நேரலாம்; என்றாலும் அவர்கள், யோக்கியமாய் நடந்து கொள்ள முடியாத சூழ்நிலையும், யோக்கியமாய் நடந்தாலும் பயன் ஏற்படாத சூழ்நிலையும், இருந்துவருவதால் யோக்கியமாய் நடந்து கொள்வது முட்டாள்தனம் என்று கருதும்படியாக நேரிட்டுவிடுகிறது.

‘விடுதலை’ 23.07.1952

- பெரியார்