• பா.ஜ.க. - அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும். - ஜே.பி. நட்டா
அ.இ.அ.தி.மு.க.வுக்கு 20 இடங்கள் ஒதுக்குவீர்களா? அல்லது அதற்கும் குறைவாகவா?
• உலகப் பிரச்சினைகளையெல்லாம் இந்தியா தீர்த்து வைத்திருக்கிறது. - மோடி
கடந்த ஆண்டு நீங்கள் உலகப் பயணமே போகவில்லையே! அதுதான் ‘ஜி’ காரணம்!
• புரட்சித் தலைவி அம்மா உயிருடன் இருந்திருந்தால்கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது.
- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
இந்தப் பொன்மொழியை அங்கேயே ஒரு கல்வெட்டில் செதுக்கி, எவரும் இடித்து விடாமல் பாதுகாக்க அங்கேயே உட்கார்ந்துக்குங்க.
• நான் எதற்கு கருவறைக்குள் போக வேண்டும்? அதற்குரிய தகுதி உள்ளவர்கள்தான் போக முடியும். - பா.ஜ.க. தலைவர் முருகன்
பா.ஜ.க. தலைவராக இருக்க உங்களுக்கு முழுத் தகுதி இருக்கிறது என்பதை நிரூபிச்சுட்டீங்க.
• தேசியக் கொடி அவமதிப்பால் தேசம் அதிர்ச்சி அடைந்துள்ளது. - மோடி பேச்சு
அதை சரி செய்யத்தான் தேசத்தைப் பாதுகாக்க பன்னாட்டு கம்பெனிகளிடம் விற்கிறீங்க போல...
- விடுதலை இராசேந்திரன்