கடும் பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கித் தவிக்கிறது. ஆனால், பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் சொத்து மதிப்பு மட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
மார்ச் 2017லிருந்து டிசம்பர் 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு 6 மடங்கு உயர்ந்துள்ளது. 5.37 பில்லியன் ரூபாயிலிருந்து 34 பில்லியனாக உயர்ந்துள்ளது.
கொரானா பாதிப்பு காலமான 2020 ஜூன் மாதத்திலிருந்து மட்டும் 3.5 மடங்கு உயர்ந்துள்ளது. அம்பானியின் சொத்து மதிப்பு மே 2017லிருந்து டிசம்பர் 2020 வரை 2.8 மடங்கு, அதாவது 26.6 பில்லியனிலிருந்து 74.4 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஜூன் 2020க்குப் பிறகு 1.3 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 39 சதவீத சொத்துகள் ஒரு சதவீதத் தினரிடம் மட்டுமே குவிந்துள்ளன. இதே காலகட்டத்தில் சீனா, அமெரிக்கா நாடுகளில் பணக்காரர்களின் வளர்ச்சியைவிட இது பல மடங்கு அதிகம்.
50 மில்லியன் ரூபாய்க்கு மேல் 2019 இறுதியில் சொத்து சேர்த்த பணக்காரர்கள் 4593 பேர்; இந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்தவர்கள் 58 பேர்.
- ஆதாரம்: பூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீடு
தகவல்: ‘இந்து’ ஆங்கில நாளேடு, டிசம்.7, 2020
- விடுதலை இராசேந்திரன்