தமிழகத்தின் உரிமைகளை மீட்க, தமிழகத்தின் தனித்தன்மையை காக்க திமுக அணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திருச்சி செயலவை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, திமுக அணியின் வேட்பாளர்களை ஆதரித்து கழகத் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாவட்டக் கழகம் சார்பில், ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து கடந்த 20.03.2021 முதல் தொடர்ந்து தினமும் பிரச்சாரம் கழகத் தோழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட, மக்கீஸ் கார்டன், பட்டுக்கோட்டை அழகிரி நகர், தாமஸ் ரோடு பகுதிகளிலுள்ள குடியிருப்புகள், சுதந்திர நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக துண்டறிக்கை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

23.03.2021 அன்று சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிர மணியத்தை ஆதரித்து சுப்பு பிள்ளை தோட்டம், கண்ணமாபேட்டை காந்திபுரம் ஆகிய பகுதிகளிலிலும், 24.03.2021 அன்று தியாகராயர் நகர் தொகுதி வேட்பாளர் ஜெ.கருணாநிதியை ஆதரித்தும் சென்னை மாவட்ட கழகத் தோழர்களால் துண்டறிக்கை பிரச்சாரம் நடைபெற்றது.

கோவை கழகத் தோழர்களின் சார்பில், கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் பையா ஆர். கிருஷ்ணன், சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக், தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன், கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் ஆகியோரை ஆதரித்து துண்டறிக்கை பிரச்சாரங்களை அந்தந்தத் தொகுதிகளில் வீடு வீடாக கழகத் தோழர்கள் செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்ட கழகம் சார்பில், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, திருச்சி வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு ஆகியோரை ஆதரித்து துண்டறிக்கை பிரச்சாரம் கழகத் தோழர்களால் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

அவினாசி தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, ஆதித் தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமானை ஆதரித்து மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா, அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் ஆர்.இளங்கோ ஆகியோரை ஆதரித்து, கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரை சாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் பரப்புரை செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடாசலத்தை ஆதரித்து பள்ளி பாளையம் கழகத் தோழர்களும், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It