மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிகள்
ஏற்பின் மெய்ம்மையும் மறுப்பின் மாயையும்:

பிரித்தானிய ஆட்சியில் 1871 இல் தொடங்கப்பட்டு பத்தாண்டு களுக்கு ஒரு முறை என எடுக்கப்பட்டு வரும் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இந்த 2011 ஆம் ஆண்டு மிகுந்த சர்ச்சைக் குள்ளாகி யிருக்கிறது. இக்கணக்கெடுப்பை சாதிவாரியாக எடுக்க வேண்டும் என ஒரு சாராரும், அப்படி சாதி வாரியாக வெல்லாம் எடுக்கக் கூடாது என மற் றொரு சாராரும் கோரி வருகின் றனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக் கில் அந் நீதிமன்றம் கணக்கெடுப்பை சாதிவாரியாகவே எடுக்க வேண்டும் என தீர்ப்பும் அளித்துள்ளது.

இந்நிலையில் தில்லி அரசு இக் கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்து வதா வேண்டாமா என முடிவு செய்ய அமைச்சர் குழு ஒன்றை நியமித்து அதன் பரிந்துரைகளின் பேரில் இது பற்றி முடிவு செய்ய இருப்பதாகத் தெரி வித்து அக்குழுவிற்கான  உறுப் பினர் பட்டியலையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்த சிந்தித்து கருத்து கூறவேண்டியது சமத்துவ சிந்தனையாளர்கள், சமுக நீதி ஆர்வலர்களது முக்கிய கடமையாகி றது. இதில் முதலில் சாதிவாரி யான கணக்கெடுப்பே வேண்டும் என்பவர் கள் முன் வைக்கும் வாதங்களைக் கேட்போம்.

1. இந்திய சமூக அமைப்பே சாதிவாரியாகத்தான் பிரிந்திருக்கிறது. இதனால்தான், சமூகத்தில் தாழ்த்தப் பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும் கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய பங்குபெற வேண்டும் என்கிற நோக்கிலேயேதான் இட ஒதுக்கிடு முறை கொண்டு வரப்பட்டது. ஆனால்,  மக்கள் தொகைக் கணக் கெடுப்பு சமூகத்தை தாழ்த்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அல்லாதோர் என்று இரு பிரிவினராக மட்டுமே பார்த்து அதை மட்டுமே பதிவு செய்கிறதே தவிர இதில் பிற்படுத்தப்பட்ட மக்கள்  என்று  எந்த தனித்த பிரிவும் இல்லை. இது பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப் படும் அநீதியாகும்.

2. பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் இட ஒதுக்கிடு பற்றிய ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மக்கள் தொகையில் பிற்படுத்தப் பட்டோர் விழுக்காடு எவ்வளவு என்பதை அறிய சாதிவாரிக் கணக் கெடுப்பு நடத்தாத நிலையில் அவர் களுக்கு எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவீர்கள்  எனக் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே அவ்விழுக் காடு எவ்வளவு என்பதை அறிய சாதி வாரிக் கணக்கெடுப்பு கட்டாயம் தேவை.

3. சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது சுதந்திரத்திற்கு முந்தைய பிரித்தானிய ஆட்சியில் 1931 மக்கள்  தொகைக் கணக்கெடுப்பின் போது எடுக்கப்பட்டதுதானே தவிர, அதன் பிறகு சாதிவாரிக் கணக்கெடுப்பே  எடுக்கப்படவில்லை. 1947 இல் சுதந்திரம் பெற்ற இந்தியா 1948 இல் இந்திய மக்கள் தொகைக் கணக் கெடுப்புச் சட்டத்தை இயற்றி அதன் படியான முதல் கணக்கெடுப்பை 1951 இல் நடத்தியது. இச்சட்டத்தின்படி தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப் பட் டோர் அல்லாதார் என்பதாகத் தான் கணக்கெடுக்கப் படுகிறதே தவிர,மற்ற படி பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர் எனும் மக்கள் பிரிவினர்க்கு எந்தப் பதிவும் கணக் கெடுப்பில் இல்லை. 1931க்குப் பிறகு 80 ஆண்டுகள் கடந்து விட்ட நிலை யில் தற்போது சமூகத்தில் பிற்படுத்தப் பட்ட சாதிகளின் இருப்பும், அவற்றின் தகுநிலையும் அறிந்து அப்பிரிவு மக்களுக்கும் உரிய இடம் வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆகவே அதற்கு இந்த சாதி வாரிக் கணக் கெடுப்பு மிகவும் அவசியம் .

இதற்கு எதிராக சாதிவாரிக் கணக்கெடுப்பே வேண்டாம் என்ப வர்கள் முன் வைக்கும் ஒரே வாதம் சாதி வாரிக் கணக்கெடுப்பு சாதிய உணர்வுகளைத் தூண்டிவிடும், அவற் றைக் கூர்மைப்படுத்திவிடும், என்ப தோடு அது மக்களிடையே பிரிவினை எண்ணத்தை ஏற்படுத்தி இந்தியன் என்கிற கருத்தாக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். ஊறு விளைவிக்கும், இந்திய ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்பதுதான்.

சரி. இந்த இரு தரப்பு வாதங்க ளையும் நாம் சற்று சீர்தூக்கி ஆராய் வோம்.

இந்திய சமுகம் என்பதே சாதி களாகத்தான் பிரிவு பட்டிருக்கிறது. இதுவும் படிநிலை ஏற்றத்தாழ்வு களுடனேயே அதாவது படிநிலை ஆதிக்கமும் படிநிலை அடிமைத் தனமும் கொண்டதாகவே இருக்கிறது. இப்பிரிவுகளில் சாதிகளின் எண் ணிக்கை எத்தனையானாலும் சமூக இருப்பு மற்றும் தகுநிலை நோக்கில் அவற்றை தாழ்த்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் அல்லாதார் எனவும், தாழ்த்தப்பட்டோர் அல்லாதோரில் பிற்படுத்தப்பட்டோர், உயர்சாதியினர், எனவும் பிற்படுத்தப் பட்டோரிலும் சில சாதியினர் மிகப் பிற்படுத்தப் பட்டோர் எனவும் தனியாக வகைப் பிரிவு செய்யப்பட்டு அதன் அடிப்ப டையிலேயே கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கிடு வழங்கப் பட்டு  வருகிறது.

இத்தொகுப்பிலும் உள் பிரிவு களில் உள்ள மக்களுக்கு உரிய நியா யம் கிடைக்கவில்ல என்றுதான் இதில் உள் ஒதுக்கீடு கோரிக்கையும் எழுப்பப் படுகிறது. இந்நிலையில் இப்படிப்ட்ட சிக்கல்கள் எதுவும் எழாமல் அவற்றைத் தவிர்க்கும் நோக்கோடுதான் அந்தந்த சாதிக்கும் அது அதற்கு உரிய இடங் களை வழங்கும் வகையில் சமூகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நிகழ்த்தி ஒவ்வொரு சாதிப்பிரிவினரும் எவ்வளவு உள்ளனர் என்பதை அறிந்து அவரவர்க் கும் உரிய பங்கை அளிக்கவேண்டும் என்கிற நோக்கில்தான் விகித்தாச்சார இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப் படுகிறது.

அதாவது சமுகத்தைத் தாழ்த் தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், உயர் சாதியினர் என்கிற தொகுப்பாக மட்டும் பார்க்காமல் ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள சாதிப்பிரிவு மக்கள் தொகையையும் கணக்கிட்டு அம்மக்கள் பிரிவை அவரவர் சமூக இருப்பு, தகுநிலை, அடிப்படையில் வகைப் பிரிவு செய்து, அவரவர் எண் ணிக்கை விகிதத்தின் அடிப்படையில் அவ்வப்பிரிவு மக்களுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கிடு வழங்கிவிட வேண்டும் இப்படி வழங்கி விட்டால் எந்தச் சிக்கலுக்கும் இடமில்லை. ஒரு பிரிவு மக்களது இடங்கள் மற் றொரு பிரிவி னால் பறிக்கப் படுகிறது, ஒரு பிரிவு மற்றொரு பிரிவின் மேல் ஆதிக்கம் செலுத் துகிறது என்கிற பேச்சுக்கே இட மில்லை. எனவே அரசு இந்தக் கோரிக் கையை ஏற்று இதை நடை முறைப் படுத்த வேண்டும் என்பதுதான் சமூக நீதி ஆர்வலர்களின் நீண்ட நாளைய கோரிக்கை. இந்த கோரிக்கையை நோக்கிப் பயணிப்பதற்காகத்தான் இவர் கள் சாதிவாரிக் கணக்கெடுப் பைக் கோருகிறார்கள், வலியுறுத்துகி றார்கள். எனவே சமூக நீதி நோக்கில் இது சரியானது தான், நியாயமானது தான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் இப்படியெல்லாம் செய்தால், சமூகம் மேலும் மேலும் பிளவுபடாதா, சாதிய உணர்வுகள் மேலும் வலுப்படாதா, இது இந்திய ஒற்றுமைக்கு எதிராகப் போகாதா என்பதுதான் சாதிவாரிக் கணக்

கெடுப்பு கூடாது என்பவர்களின்  ஒரே வாதம்.

முதலாவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலமாகத்தான் மக்கள் சாதி யுணர்வு பெற வேண்டும் அவ்வுணர்வுகள் கூர்மையடைய வேண்டும் என்பது ஏற்கத் தக்க வாதமல்ல. காரணம் சமூகத்தில் மக்கள் ஏற்கெனவே சாதிவாரியாகத்தான் பிளவு பட்டுக் கிடக்கிறார்கள். இட ஒதுக்கீட்டு நடைமுறைக்காக அரசு அவர்களைத் தொகுப்பாக வைத்தா லும், ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள உள் பிரிவினரும் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றுதான் உள் ஒதுக்கீடும் கேட்டுவருகின்றனர். எனவே இந்த சாதி உணர்வு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு முன்பா கவே இருந்து வருகிறது என்பதே உண்மை. இந்த உண்மையைப் புரிந்து அதற்கு உரிய தீர்வு வழங்கிவிட்டால் அது சாந்த மடைந்து விடும் . மாறாக மறுதலித்தால் அப்போது£ன் இந்த உணர்வு மேலும் கூர்மையடையும், வலுப்படும், தீவிரத்தோடு பொங்கி எழும்.

அடுத்து, சாதிய உணர்வு தங்கி யிருப்பதும் வலுப்படுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலோ, அல்லது பள்ளிச் சான்றிதழ்களிலோ அல்ல. மாறாக அது அக மணமுறை எனப்படும் சொந்த சாதித் திருமணத்தி லேயே தங்கியிருக்கிறது. அதன் வழி யாகவே சாதி புதுப்பிக்கப்படுகிறது. தலைமுறை தலை முறைக்கும் கை மாற்றித் தரப்படுகிறது. மனித சமூகத் தில் பல கட்சிகள் இருந்தாலும், பல அமைப்புகள் இருந்தாலும், தொழில் பிரிவுகள் இருந்தாலும், இன்றும் நூற் றுக்கு 95 விழுக்காட்டுத் திருமணங்கள் சொந்த சாதிக்குள்ளேயே நடத்தப் படும் அகமண முறைகளாகவே நீடிக் கின்றன. இந்த அகமணமுறை ஒழியாத வரை, ஒழிக்கப்படாத வரை  சாதி அழி யாது, சாதிய உணர்வுகள் அழியாது.

பள்ளி கல்லூரி சான்றிதழ்களில் சாதி போட்டுக் கொள்ளவில்லையா, சாதி அடையாளத்தைக் காட்ட வில்லையா என்றால் அது தங்கள் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாப் பதற்காகப் போட்டுக் கொள்ளப் படுகிறதே தவிர, சாதிய  அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளவோ, அதன் மூலம்   இல் வாழ்க்கைத் துணையைத் தேடவோ அல்ல. அதை வைத்து யாரும் எவருக்கும் பெண்ணோ பிள்ளையோ கொடுத்துவிடப்போவதில்லை கொடுப்பது மில்லை. அது தனியே பண்பாட்டுத் தளத்தில் நிகழ்வது. இப்படி சான்றிதழில் குறிப்பி டப்படும் சாதி இடஒதுக் கீட்டுப் பலனைப் பாது காப்பதனால் தான் பண் பாட்டுத் தளத்தில் புரட்சி கரமாக இயங்குபவர்கள் கூட சான்றிதழில் சாதி போட்டுக் கொள்கி றார்கள், போட்டுக் கொள்ள வேண் டிய அவசியம் நேர்கிறது.

இதை வைத்து வேறு சிலர் என்ன கேட்கிறார்கள், சாதி ஒழிப்பு சமூக சமத்துவம் எல்லாம் பேசுகிறீர்கள், இப்படிப் பேசி விட்டு சான்றிதழ்களில் மட்டும் சாதி போட்டுக் கொள்கிறீர் களே இது என்ன நியாயம் என்கி றார்கள்.

நியாயம்தான், காரணம் இன் றைய இந்திய, தமிழ்ச் சமூகத்தில் ஒருவர் தான் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர் ஏதோ ஒரு சாதி யில்தான் பிறக்கிறார். பிறக்க வைக்கப் படுகிறார். அது கீழ்ச்சாதியிலும் இருக் கலாம், மேல் சாதியிலும் இருக்கலாம். இதில் மேல் சாதியில் பிறக்கிறவரைப் பற்றிக் கவலையில்லை. அவர் வறுமை யில் வாடினாலும் அவரது சமுகத் தகுநிலை  உயர்வாகவே இருக்கிறது. ஆனால் கீழ்ச் சாதியில் பிறந்த ஒருவர் அவர் எல்லா நிலையிலும் கீழானவ ராகவே இருக்கிறார். ஒரு சிலர் பொரு ளியல் ரீதியில் வளமாக இருந்தாலும் அவர்களுக்குரிய சமூகத் தகுநிலை கீழா னதாகவே இருக்கிறது. எனவே இந்தக் கீழ் நிலையிலிருந்து அவர் உயர் நிலைக்கு அதாவது மற்றவர்களோடு சமநிலை அடைவதற்கு தான் கீழ் நிலையில் இருப்பதை அறிவிக்க வேண்டியது அவசியமாகிறது. அப்படி அறிவிக்காவிட்டடால் அவர் மேல் நிலைப்பட்டவர்களோடு சேர்ந்து  சமநிலைக்கு வந்திட்டதாகவே கொள்ளப்படுவார்.

அதாவது உண்மையாகவே இருப்பு கீழ்நிலைப்பட்டதாக இருந் தாலும் இவ்வுண்மைக்குப்  புறம்பாக அவரது இருப்பு மேல் நிலைப்பட் டவர்களோடு சேர்ந்து சமநிலையில் இருப்பதாகவே கொள்ளப்படும். இது அவரது உரிமைக்கு இழப்பு. அவருக்கு செய்யப்படும் தூரோகம், வஞ்சகம், சூழ்ச்சி, இதைத்தான் சாதி ஆதிக்க சக்திகள் செய்ய முனைந்து வருகின்றன.

இதனால்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள்தங்களைப்போன்ற சமநிலைக்கு,  தங்களுக்கு இணையாக மேல்நிலைக்கு வருவதை விரும்பாத  மேல் சாதி ஆதிக்க சக்திகள் பிற சாதி மக்களைப் பார்த்து ‘சாதி வேண்டாம் என்பவர்கள் ஏன் சாதி போட்டுக் கொள்கிறீர்கள்’ என்று கேட்கிறார்கள். உண்மையில் இவர்கள் சொல்வது போல் எவரும் சாதி போட்டு கொள்ளாமல் பள்ளி களில் கல்வி நிறுவனங்களில் சேரலாம். அப்படிச் சேர சட்ட பூர்வமாக எந்தத் தடையும் இல்லை. ஆனால் அப்படிச் சேர்ந்தால்  அவர் தனது விருப்ப மில்லாமலேயே உயர் சாதியாகி விடுவார். இதனால் எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக வழங்கப்படும் எந்த உரிமைகளையும் சலுகைகளையும் பலன்களையும் அவர் கோர முடியாது. அதாவது சமூக இருப்பில் அவர் பிற்படுத்தப் பட்ட வராக இருந்தும் சான்றிதழில் அதற் கான பதிவு இல்லாததால்  அவர் உயர் சாதியினராகவே கருதப்படுவார். இதனால் உயர்சாதியினர் எவரும் அவருக்கு பெண்ணோ பிள்ளையோ தந்து தங்கள் சாதியில் மணம் செய்து வைத்து விடப் போவதில்லை. அவரைத் தங்கள் சாதியில் தங்களோடு சேர்த்துக் கொள்ளப் போவது மில்லை அவருக்குரிய சமூக தகுநிலை எப் போதும் போல  பிற்படுத்தப்பட் டதுதான். ஆனால் அதை வெளிப் படுத்தி யிருந்தாலாவது அதற்கு உரிய உரிமைகள் சலுகைகளாவது கிடைத்தி ருக்கும் தற்போது அதுவும் போச்சி. அதாவது இரண்டு வகையிலும் இழப்பு.

இப்படிப்பட்ட சூழ்ச்சியில் வெற்றி கொள்ளத்தான் மேல் தட்டு பிரிவைச் சேர்ந்த சாதி ஆதிக்க சக்தி யினர் கீழ்நிலையில் உள்ள மக்களை பார்த்து எதற்கு சாதி அடையாளம் என்கிறார்கள். அதனால்தான் அதைத் தவிர்த்து சாதியற்றவர் என்று போட்டுக் கொள்ளுங்கள் என்கி றார்கள். அதாவது ஆதிக்கத்தில் எங்க ளுக்கு போட்டியாக தனியாக இடங் கள் கோரி எங்களுக்கு சமமான நிலைக்கு வரமுயலாமல் காலா காலத் துக்கும் எங்களுக்கு அடிமைப் பட்டவர்களாகவே இருங்கள் என்கி றார்கள்.

இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டாம் என்கிற கருத்தை முன் வைப்பவர்களும், அதை ஆதரிப் பவர்களும் யார் என்று பார்த்தாலே இந்த உண்மை தெரிந்து விடும். சாதி வாரிக் கணக்கெடுப்பு வேண்டாம் என்பவர்கள் இந்துத்துவ அமைப்பான ஆர். எஸ். எஸ் ஸ§ ம்  இந்திய தேசிய ஆதிக்க சக்திகளும், மற்றும் அக்கருத் துக்கு இரையாக்கிப் போனவர்க ளும்தான். இவர்கள்தான் ஏதோ சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்து வதால் தான் சாதிய உணர்வுகள் தலை தூக்கி விடும் என்பது போலப் பசப்பு கிறார்கள்.

அதேபோலவேதான் இந்திய ஒற்றுமை பற்றிப் பேசுபவர்களும். ஏதோ, இந்திய ஆட்சிப் பரப்பில் வாழ்பவர்கள் எல்லாம் ஏற்கெனவே  மிகுந்த ஒற்றுமையோடு வாழ்வது போலவும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால்தான் அதுதான் இந்த ஒற்று மைக்கு வந்து வேட்டு வைத்து விடும் என்பது போலவும் கதையளக்கிறார் கள். தமிழ் நாட்டுக் காவிரி நீரை கர் நாடகத்தான் மறுக்கிறான். முல்லைப் பெரியாறு ஆற்று நீர் உரிமையை கேரளத்தான் மறுக்கிறான். பீகார்க் காரன் அகில இந்தியத் தேர்வு எழுத மும்பை போனால் மாராட்டியன் உதைக்கிறான். மராட்டியன் தேர்வு எழுத பங்களூர் போனால்  கர்நாடகன் அடிக்கிறான். பீகார்க்காரன் அஸ்ஸாம் போனால் அசாமியன் விரட்டுகிறான். இப்படி நாடெங்கு துண்டு துண் டாய்க் மொழிவாரி இனவாரி மோதல் கள் நடந்து சந்தி  சிரிக்கிறது இந்திய தேசியம். கந்தலாகி நார் நாராய்க் கிழிகிறது இந்திய ஒற்றுமை. இந்த லட்சணத்தில் ஏதோ சாதி வாரிக் கணக்கெடுப்பு வந்துதான் எல்லாவற் றையும் கெடுத்து விடும் என்பதுபோல  மாய்மாலம்  செய்கின்றனர் ஆதிக்க சக்தியினர். இந்த சூழ்ச்சியை நல்லு ணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

இந்திய சமூகத்தில் சாதிகளின் இருப்பிற்கான வேர்கள் என்ன, அதன் ஒழிப்பிற்கான வழிமுறைகள் என்ன என்று ஆராய்ந்து அதை நிறைவேற்று வதற்கான நடவடிக்கைகள், செயல் திட்டங்கள் என்பது வேறு. அதே போல இந்தியா பிளவு பட்டு விடு மோ  என்று அஞ்சி அது ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று எவரும் விரும்புவர்களேயானால் இச்சிக்கலுக் கான மூலவேர்களும், அதற்கான கார ணங்களும், என்ன என்று ஆராய்ந்து அதைக் களைவதற் கான செயல் திட் டங்கள் என்பதும்  வேறு. எனவே இந்த வேறுபாடுகளைப் புரிந்தே இவற்றைக் கவனத்தில் கொண்டே இந்த சாதி வாரிக் கணக்கெடுப்புச் சிக்கலை எவரும் அணுகவேண்டுமே யல்லாது அதை விட்டு இந்தச் சாதி வாரிக் கணக்கெடுப்பேதான் அனைத் துச் சிக்கல்களுக்கும் காரணம் எனபதே போல ஒரு மாயத் தோற்றத்தை உரு வாக்கக் கூடாது.

அதேபோலவே, அதாவது, அனைத்துப் பிரச்சனைக்கும் கார ணமே சாதிவாரிக் கணக்கெடுப்புதான் என்பதே போல அனைத்துப் பிரச்ச னைக்கும் தீர்வும் அதாவது சமூக ஏற்றத் தாழ்வு நீக்கம், சமூக சமத்துவம் ஆகிய அனைத்திற்கும் இதுவேதான்  தீர்வு என்றும் கருதி இந்த இரண்டு முனைக் கோடிப் போக்கிற்கும் பலியாகாமல் நாம் நடுநிலையோடு நின்று இப்பிரச்ச னையை ஆராய வேண்டும்.

இந்த நோக்கில் சமூகத்தில் தற் போது நிலவும் சாதியப்படி நிலை ஏற் றத் தாழ்வுகளைக் களையவும்   சமூகத் தகுநிலைப் பாகுபாடுகளை நீக்கவும் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதும் அதனடிப்படையிலான  இட  ஒதுக் கீடு மற்றும் நலத்திட்டங்கள் என்பதும் மிகவும் முக்கியம் இது இச்சிக்க லுக்கான தீர்வை நோக்கிய ஒரு பய ணம், அதன் முன்னேற்றத்தில் ஒரு படிக்கல். எனவே இந்த மட்டத்தில்  இதைப் புரிந்து நாம் இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்க வேண்டும்.

தற்போது வட மாநிலங்களில் ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ் வாடிக் கட்சி ஆகிய கட்சிகள் சாதி வாரிக் கணக் கெடுப்பை ஆதரிக்கின்றன. வலியுறுத் துகின்றன. காங்கிரஸ் கட்சியிலும் கணிசமான பகுதி இதை ஆதரிக்கிறது.  சாதிவாரி கணக்கெடுப்பே வேண்டாம் என்கிற ஆர்.எஸ்.எஸ் நிலைக்கு முரண்பட்டாலும் பரவாயில்லை என பிற கட்சிகளைத் தேர்தல் களத்தில் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் தொடக்கத்தில் சாதிவாரிக் கணக் கெடுப்பை ஆதரிப்பதாக் கூறிய பா.ஜ.க.  தற்போது தன் நிலையிலி ருந்து  நழுவி அமைச்சர் குழு முடிவை ஏற்பதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான எல்லா கட்சிகளுமே  இட ஒதுக் கீட்டை,சமூக நீதியை  ஆத ரிக்கிற கட்சிகள் என்பதனால் இங்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதற்கு ஏதும்  பிரச்சனை இல்லை . ஆக இந் திய அளவிலும் தமிழக அளவிலும் பெரும்பான்மையான கட்சிகள் இதற்கு அதரவாக இருக்கின்றன என்பது தெளிவு. எனவே சாதிவாரிக் கணக் கெடுப்பே வேண்டும் என்கிற மக்கள் குரலை தில்லி அரசு மதிக்க வேண்டும். இதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் குழுவும் இதைக் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒன்று. இந்திய மக் கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம் 1948, ‘மக்கள் தொகைக் கணக்கெ டுப்பின் போது தெரிவிக்கப்படும் தக வல்கள் தனி மனிதத் தகவல் சம்பந் தப்பட்டவை, ரகசியமாகப் பாது காக் கத் தக்கவை, எனவே அது மறற வர் களின் பார்வைக்கோ, ஆய்வுக்கோ, வேறு எதற்கும் சான்றாவணமாகவோ, முன்வைக்கப்படக் கூடாதவை’ எனக் கூறுகிறது.

எனவே, கணக்கெடுப்பின் போது சாதியைச் சொன்னால் என்ன சொல் லாவிட்டால்தான் என்ன, பள்ளியில் சேரும் போது சாதியைச் சொன்னால் போதாதா அதை வைத்து இடஒதுக் கீட்டு உரிமையை பிறச் சலுகைகளைப்  பெற முடியாதா எனச் சிலர் கேட்க லாம். நியாயம் .பெறலாம் பெறவாய்ப் புண்டு. என்றாலும் இப்போது நாம் சாதியைச் சொல்லாமல் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தாமல் விடுவது, நிலவும் மக்கள் தொகையில்  அந்தந்த  சாதிகளின் எண்ணிக்கைத் தொகையும் எவ்வளவு உள்ளது, அதற்கு எவ்வளவு  விகிதத்தில் இட ஒதுக்கிடு வழங்குவது என்பதை  அறியவொட் டாமலும்,அதை நிர்ணயக்க விடா மலும் தடுத்து அதற்கு முட்டுக் கட்டை போடுவதாகவே ஆகிவிடும். இது விகித்தார இட ஒதுக்கீடு என்கிற கோரிக்கையை முன்னெடுத்துச் செல்ல விடாமல் முடக்கவே வழி வகுக்கும். மொத்தத்தில் இது நம் தலையில் நாமே மண்ணவாரிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும். எனவே நாம் இதற்கு பலியாகாமல்  விழிப்புடன் இருக்கவேண்டும்.

அதோடு தற்போதும் இக்கணக் கெடுப்பில் தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அல்லாதோர் என்கிற இவ்விரு அடையாளமும் பதிவு செய்யப்படும்போது, கணக்கெடுப் பால்தான் சாதியுணர்வு கூர்மைய டைகிறது என்றால் இப்போது மட்டும் தாழ்த்தப்பட்டோர் - அல்லாதோர் என்கிற பாகுபாடு கூர்மையடையாதா, பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப் பட்டடோரைக் குறிப்பிட் டால் மட்டும்தான் சாதியுணர்வு கூர்மைய டையுமா  அல்லது தாழ்த்தப்பட் டோர் தாழ்த்தப்பட்டோர் அல்லாதார் என்கிற உணர்வு கூர்மையடைந்தால் பரவாயில்லை அல்லது கூர்மை யடையட்டும்  என்று அரசு கருது கிறதா எனபதெல்லாம் கேள்விக ளாகும். எனவே, இந்த அபத்த வாதத்தை உணர்ந்து சமூகத்தில் இத் தாழ்த்தப்பட்டோர் அல்லாதோரின் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்ப டுத்தப்பட்டோர் அடையாளம் பதி வாகாமல் விடப்படுவதோ, அதே போல  தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டு சமூகத்தின் உட்பிரிவு சாதிகள் பதி வாகாமல் மறுக்கப்படுவதோ  எந்த வகையிலும்  நியாயமில்லை என்ப தையும் சமூக நீதி ஆர்வலர்கள் சமத் துவ நோக்குடையோர்  சிந்திக்க வேண் டும். இந்த அடிப்படையில் அனைவ ரும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஆதரிக்க வேண்டும். அதை வலியுறுத்த வேண்டும்

  

அமைச்சர்     குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சர்கள் பட்டியல் விவரம்

 அமைச்சர்     குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சர்கள் பட்டியல் விவரம் வருமாறு: 1.நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2.விவசாய அமைச்சர் சரத் பவார் 3.ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி 4.உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 5.ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி 6.சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி 7.புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறை அமைச்சர் பரூக் அப்துல்லா 8. ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் 9. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் 10. சமூக நீதித் துறை அமைச்சர் முகுல் வாசினிக் 11. சிறுபான்மையினர் விவகார இணை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகிய 11  அமைச்சர்கள் கொண்ட குழுவை தில்லி அரசு நியமித்துள்ளது.இந்த குழு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் தவிர்தது மற்ற சாதிகள் வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த என்னென்ன நடைமுறைகளைக் கையாளுவது என்பது பற்றி ஆராய்ந்து பிரதமரிடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் எனப்படுகிறது

Pin It