(மே 9, 2007-ல் தஞ்சையில் நடந்த சாதி ஒழிப்பு மாநாட்டுப் பேரணியில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்)

வெல்க வெல்க வெல்கவே!
பெரியார் திராவிடர் கழகம் வெல்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே!
சாதி ஒழிக்க சட்டம் எரித்த
தந்தை பெரியார் வாழ்கவே!
உழைக்கும் மக்களை இழிவுபடுத்தி
பார்ப்பன நலனை உயர்த்திப் பிடிக்கும்
இந்திய அரசியல் சட்டத்தை
எரித்த எங்கள் தோழர்களே
உங்களுக்(கு) எங்கள் வீரவணக்கம்!
சாதியை ஒழிக்க சட்டம் எரித்து
சிறை சென்ற தோழர்களே!
உங்களுக்(கு) எங்கள் வீரவணக்கம்!
சாதியை ஒழிக்க சட்டத்தை எரித்த பெரியார் - வாழ்க!
சாதியை ஒழிக்க மனுநீதியை எரித்த பெரியார் - வாழ்க!
சாதியை ஒழிக்க பார்ப்பானை எதிர்த்த பெரியார் - வாழ்க!
சாதியை ஒழிக்க ராமனை எரித்த பெரியார் - வாழ்க!
சாதியை ஒழிக்க பிள்ளையார் உடைத்த பெரியார் - வாழ்க!
சாதியை ஒழிக்க கடவுளை மறுத்த பெரியார் - வாழ்க!
பாருங்கய்யா பாருங்க
கிராமங்களைப் பாருங்க
டீக்கடையைப் பாருங்க!
இரட்டை குவளைப் பாருங்க!
நியாயம் தானா, கேளுங்க
செருப்பு தைக்கும் எங்கள் தோழன்
செருப்பு போட்டு நடக்கவே
உரிமை இல்லை பாருங்க!
நியாயம் தானா சொல்லுங்க!
உடையட்டும் உடையட்டும்
இரட்டைக் குவளை உடையட்டும்!
டீக்கடையில் உடையட்டும்!
தீண்டாமை சாகட்டும்!
எரியட்டும் எரியட்டும்
பிணத்தைப் புதைக்கும் சுடுகாட்டில்
சாதிவெறி எரியட்டும்!
கொள்ளி வை! கொள்ளி வை!
சாதிக்கும் சேர்த்து கொள்ளி வை!
போராடுவோம் போராடுவோம்
சாதியை ஒழிக்கப் போராடுவோம்
இறுதிவரை போராடுவோம்
இறக்கும் வரை போராடுவோம்!
சுத்தறான் சுத்தறான்
காதுல பூவை சுத்தறான்
தண்ணிக்கு மேல பாலந்தான்
எல்லாருக்கும் தெரிஞ்சது
தண்ணிக்குள்ளே பாலமாம்
ராமகோபாலன் சொல்லறான் -
அதுக்கு
ராமன் பேர இழுக்கிறான்
சுத்தறான் சுத்தறான்
காதுல பூவை சுத்தறான்
நூறு கோடி மக்களின்
பிரதிநிதி செய்யுறான்
சட்டமொன்னு செய்யுறான்
ரண்டு பேரு இருந்துகிட்டு
செல்லாதுன்னு தள்ளறான்
உச்சநீதி மன்றமா?
உச்சிக் குடுமி மன்றமா?

Pin It