கேரள மாநிலத்தில் ஆற்றமுழா என்ற பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ். இவர் அந்தப் பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய உறவினரான இளம் பெண் ஒருவரிடம் மனோஜ் என்ற இளைஞன் தவறுதலாக நடந்துள்ளான். இதன் காரணமாக மனோஜை அபிலாஷ் தட்டிக் கேட்டுள்ளார். மனோஜ் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால் தன்னுடைய சகாக்களான ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 8 பேரைச் சேர்த்துக் கொண்டு அபிலாஷ் குடும்பத்தார் மீது தாக்குதல் நடத்தியுள்ளான்.

இந்தத் தாக்குதலில் அபிலாஷின் தாயார் மற்றும் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அபிலாஷுக்கு முழங்கைக்கு கீழே துண்டாகி உள்ளது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறை மெத்தனம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ் சாட்டி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தொடுபுழாவில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற தேர்வின் போது பேராசிரியர் முஸ்லிம்களைப் புண்படுத்தும் விதமான கேள்வித்தாளை தயாரித்திருந்தார். இது அப்பகுதி முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் ஒன்று திரண்டு அப்பேராசிரியருக்கு எதிராக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம்கள் காட்டிய உறுதியின் விளைவாக அப்பேராசிரியர் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு அப்பேராசிரியரின் கையை சமூக விரோதிகள் சிலர் வெட்டியுள்ளனர்.

அதுவரையில் அமைதியாக இருந்த ஊடகங்கள் தங்கள் கற்பனைக்கு சிறகு வைத்து பிரச்சாரம் செய்தன. அரசியல்வாதிகள் தாம் தூம் என்று எகிறிக் குதித்தார்கள். கேரள முதல் அமைச்சர் அச்சுதானந்தன் ஒரு படி மேலே போய், இஸ்லாமிய இயக்கம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முயல்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வன்முறையில் ஒரு முஸ்லிம் இயக்கம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறி அந்த இயக்கத்தின் அலுவலகங்களை சோதனை நடத்தினார்கள். அந்த இயக்கத்தை தடை செய்திருப்பதாக செய்தி பரப்பினார்கள். கேரள மாநிலம் மட்டுமல்லாமல் நாடு பூராவும் அந்த இயக்கம் தடை செய்யப்பட இருப்பதாக செய்திகள் இட்டுக் கட்டப்பட்டன. இவ்வளவுக்கும் ஜோசப் கையை வெட்டியதாக பிடிபட்டவர்களுக்கும், எந்த இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

ஜோசப் கையை வெட்டியது தொடர்பாக பரபரப்புக் காட்டிய பத்திரிகைகளும், ஆரவாரம் காட்டிய அரசியல்வாதிகளும் அபிலாஷின் கை வெட்டப்பட்டது குறித்து பெரிய அளவில் கருத்துக் கூறியதாகத் தெரியவில்லை.

வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தாக்குதல் நடத்திய போதிலும், தாக்குதல் நடத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் கம்யூனிஸ்டுகள் வாய்திறக்க மறுக்கின்றனர். குறிப்பாக முதல்வர் அச்சுதானந்தன் எதுவும் சொல்லாமல் இருப்பது கம்யூனிஸ்டுகளுக்கும் - காவிகளுக்கும் கள்ள உறவு இருப்பதை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

- அபு சுபஹான்

Pin It