மேட்டூர் கொளத்தூர் அருகே உள்ள பாலமலையில் மே 17, 18 தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெறுகிறது. 17ஆம் தேதி காலை, “பெரியார் காலத்தின் தேவை” எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரன் வகுப்பு எடுக்கிறார். பிற்பகல் “இட ஒதுக்கீடு - சந்திக்கும் சவால்கள்” எனும் தலைப்பில் கொளத்தூர் மணி, “அறிவியல் சமுதாயத்தை நோக்கி” எனும் தலைப்பில் மருத்துவர் எழிலன், “சமத்துவ சமுதாயத்தில் பாலின பாகுபாடுகள்” எனும் தலைப்பில் பூங்குழலி ஆகியோர் வகுப்பு எடுக்கிறார்கள். இரவு 9-00 மணிக்கு குறும்படங்கள் திரையிடல்கள், குழு விவாதங்கள் நிகழும்.

இரண்டாம் நாள் மே 18 அன்று “பெரியாரியலை முன்னெடுப்பதில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் அணுகுமுறை “ எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரன்; “வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம்” குறித்து வழக்குரைஞர் திருமூர்த்தி ஆகியோரும்,

பிற்பகல், “பெரியார் இயக்கத்தின் மீதான விமரிசனங்கள்” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் வகுப்பு எடுக்கிறார்கள். பயிலரங்கத்தில் பங்கேற்றத் தோழர்களின் கருத்துகள், அய்யம் களைதலோடு பயிலரங்கம் நிறைவடையும்.

தொடர்புக்கு : ப. சூரியகுமார், மாவட்டத் தலைவர்.83000 48921; சி. கோவிந்தராசு, மாவட்ட செயலாளர் 98424 45964; க. ஈசுவரன், ஒன்றியச் செயலாளர் 73730 72737; க. இளவரசன், தலைமைக் கழகப் பேச்சாளர் 94861 27967

***

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் “குழந்தைகள் பழகு, மகிழ்வு முகாம் !”

(10 முதல் 15 வயதுவரை உள்ள குழந்தைகள் இருபாலரும்)

தேதி : 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள்.

இடம் : திண்டுக்கல்.

• திறன் வளர்த்தல்; • பாலின சமத்துவம்; • படைப்பாற்றல் வளர்த்தல் (ஓவியம், இசை, நாடகம்); • திறனாய்ந்து வாசித்தல்;

• ‘கதை சொல்லி'யோடு ஒருநாள்; • குழுவிவாதம்; • சமூக விஞ்ஞானிகள் ஓர் அறிமுகம்; • சித்தன்னவாசல் சுற்றுலா மற்றும் பல நிகழ்வுகளுடன்.............

குறைந்த பட்ச பங்களிப்பு : ரூ 1000/.- (ரூபாய் ஒரு ஆயிரம் மட்டும்)

வாய்ப்புள்ள தோழர்கள் முழு தொகையான 1500/- (ரூபாய் ஒரு ஆயிரத்து ஐநூறு மட்டும்) ரூபாயை பங்களிக்கலாம்.

“முன் பதிவு அவசியம்”

தொடர்புக்கு :         ஆசிரியர் சிவகாமி - 9842448175;

                ஆசிரியர் சிவக்குமார் - 9688856151

Pin It