Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

பெரியார் முழக்கம்

'Justice’ என்ற ஆங்கில நாளேட்டை நடத்தியதன் காரணமாக 'ஜஸ்டிஸ் கட்சி’ என்றும், அதன் தமிழ் மொழி பெயர்ப்பாக 'நீதிக்கட்சி’ என்றும் அறியப்பட்டுவந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1938 டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் நடைபெற்ற, அதன் 14ஆவது மாகாண மகாநாட்டில், அதுவரை நீதிக்கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராகக் கூட இல்லாதிருந்த பெரியாரை, தன் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இராஜாஜி அமைச்சரவை பதவியை விட்டு விலகியிருந்ததால், எதிர்க் கட்சியான நீதிக்கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் கவர்னர் ஜெனரலும், கவர்னரும் இருமுறையும், 'தானும் கூட அமைச்சரவையில் இருந்து பணியாற்றுகிறேன்' என்று பெரியாரை அணுகிய இராஜாஜியும் சென்னை மாகாண அமைச்சரவையை தலைமையேற்று அமைக்கக் கேட்டும் மறுத்துவிட்டார். (வருங்கால முதல்வர் கனவோடு இன்று ஏராளமானோர் உலவும் இந்தத் தமிழ்நாட்டில்தான் இதுவும் நடந்திருக்கிறது)

periyar_336தனது தலைமையில் 1925-இன் இறுதி முதல் சமூக இயக்கமாக இயங்கி வந்த சுயமரியாதை இயக்கம், 1939 இறுதி முதல் தனது தலைமைக்கு வந்துவிட்ட நீதிக்கட்சி என்ற இரண்டையும் இணைத்து, 27-8-1944 அன்று சேலத்தில் கூடிய நீதிக்கட்சி மாநாட்டில், தேர்தலில் பங்கு பெறாத – அரசின் பட்டங்களைப் புறக்கணிக்கிற – மக்கள் விழிப்புணர்வு இயக்கமாக திராவிடர் கழகத்தை பெரியார் மாற்றியமைத்தார். திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட அன்று காலை அண்ணல்தங்கோ போன்றோர் 'தமிழர் கழகம்' என்ற பெயரை முன்மொழிய, அப்போது ஏற்று கொண்ட பெரியாரிடம், அன்று நண்பகலில் யாரோ "நீ கன்னடனாயிற்றே! தமிழர் கழகம் என்று பெயர் வைத்தால் நாளைக்கு நீயே கூட அவ்வமைப்பில் இருக்க முடியாதே!" என்று கூறியதைத் தொடர்ந்து அமைப்பின் பெயரைத் 'திராவிடர் கழகம்’ என்று மாலையில் பெரியார் மாற்றிக்கொண்டார் என்ற புளுகு அண்மைக் காலங்களில் சிலரால் பரப்பி வரப்படுகிறது.

அருகோ என்பவர், பெயர் மாற்ற நாளில் சத்தியமூர்த்தி அய்யர்தான் பெரியாருக்கு இந்த ஆலோசனையைக் கூறியதாக எழுதினார். ஆனால் அந்த சத்தியமூர்த்தியோ 28-3-1943ல் இறந்து போனவர். இதை 'பெரியார் முழக்கம்’ ஏட்டில் தோழர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டிய பின், அது இராஜாஜி என்றும், பெரியாரோடு இருந்த சில பிற மொழியினர் என்றும் மாற்றி மாற்றி சொல்லப்பட்டு வருகிறது. இதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. எனினும் ஒரு பொய்யையே திரும்பத் திரும்பக் கூறினால், அது மக்கள் மனதில் உண்மைச் செய்தியாகப் பதிந்துவிடும் என்ற, இட்லரின் செய்தித்துறை அமைச்சரான கோயபல்சின் செயல் திட்டத்தைப் பின்பற்ற முயற்சிக்கிறார்கள் போலும். அதன் தொடர்ச்சியாகவே மே 18 அன்று கோவையில் வெளியிடப்பட்ட 'நாம் தமிழர் கட்சி ஆவணம்’ 13-ஆம் பக்கத்தில் கீழ்கண்டவாறு கூறுகிறது :

"……திராவிடர்கள், இராசாசி இந்தியைத் திணித்த போது, அதை எதிர்த்துத் 'தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் ஆகியோர் தலைமையில் திரண்டபோது, அவர்களை ஆதரிக்கிறாற் போல் ஆதரித்து பின், தங்களுடைய, தமிழரைத் தொடர்ந்து அடிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ், அண்ணல்தங்கோ முயற்சியினால் முகிழ்த்த தமிழர் கழகத்தை முறியடித்துத் திராவிடர் கழகத்தை நிறுவினர்."

திராவிடர் என்ற சொல் குறித்தும் மேற்கண்ட மேற்கோளில் உள்ள பிற செய்திகள் குறித்தும்கூட பின்னொரு வாய்ப்பில் விவாதிக்கலாம். தமிழர் கழகம் என்ற பெயரிடும் முயற்சியைத் தோற்கடித்து திராவிடர் கழகம் என்ற பெயரை அவ்வமைப்புக்கு சூட்டிக்கொண்டனர் என்று கூறியுள்ளதற்கு மட்டும் இப்போது விளக்கம் தர விரும்புகிறோம்.

பார்ப்பனர் ஆதிக்கத்துக்கு எதிராகத்தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அது 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (South Indian Liberal Federation) என்ற அமைப்பாக மலர்ந்தது. அது கூட அரசியலிலும், அரசுப் பணிகளிலும் பார்ப்பனர்கள் தங்கள் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு அதிகமாக மிகப்பெரிய அளவில் வகித்து வந்த பதவிகளை மட்டுமே பார்ப்பன ஆதிக்கம் என்பதாக வரையறுத்துக்கொண்டு இயங்கியது. ஆனால் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் அவற்றைவிட சமுதாயத்தில் இந்துமதம், வேதம், சாஸ்திரம், புராணம் என்ற பொய்மைகளின் துணையோடு பார்ப்பனர்கள் வகித்து வந்த சமூக மேலாதிக்கமே மற்றைய ஆதிக்கங்களுக்கான தோற்றுவாய் என்பதை உணர்ந்து சமூக மேலாதிக்கத்தின் மீதான போரை நடத்தி வந்தது. அவ்வாறு 'பார்ப்பனர் அல்லாதார்’ என்று மூன்று விழுக்காட்டினராக வாழும் பார்ப்பனர்களை வைத்து தொண்ணூற்றேழு விழுக்காட்டு மக்களைக் குறிப்பிடுவது பொருத்தமற்றது என்றும், எதிர்மறைச் சுட்டாக உள்ள 'பார்ப்பனரல்லாதார்’ என்ற சொல்லுக்கு மாற்றாக, இந்திப் போராட்ட சிறைவாச விடுதலைக்கு பின் 1939 மே மதம் முதல், உடன்பாட்டு சுட்டாக 'திராவிடர்’ என்ற அடையாளத்தை முன்வைத்துச் செயல்படத் தொடங்கினார்.

பெரியாரே பின்னர் 9-12-1944 குடிஅரசில் வெளியான சொற்பொழிவொன்றில்……

"நாம் 'இந்தியர்' என்பதை மறுக்கிறபடியாலும், இன உணர்ச்சியும் எழுச்சியும் பெற வேண்டுவதாலும் 'திராவிடர்' என்னும் பெயரைக் கொண்டோம்! இது புதிதாக உண்டாக்கியதல்ல. மறந்ததை நினைத்துக் கொண்டதேயாகும். நம்மைக் குறிக்க பார்ப்பனரல்லாதோர் என்கிறோம். அல்லாதார் என்பதை சேர்க்க நாமென்ன நாடோடிகளா?  நாம் ஏன் அல்லாதாவராக இருக்க வேண்டும்? சிலர் திராவிடன் என்பது வட மொழி என்பார்கள். அதைப் பற்றி கவலையோ ஆராய்ச்சியோ தேவை இல்லை. 'காபி' ஆங்கிலச் சொல் என்று எவனாவது காபி குடிக்காமல் இருக்கிறானா? மேலும் நமக்கு திராவிடர் என்பது பெயரல்லவானால் வேறு எதுதான் பெயராகும்? பார்ப்பனரல்லாதார் என்பதா? பார்ப்பனரல்லாதார் என்று கூறிக்கொள்ளும் 'ஜஸ்டிஸ்' கட்சிக்காரர்கள் எந்த வகையிலே பார்ப்பனரிலிருந்து வேறுபடுகிறார்கள்? நடை உடை பாவனையில், மதத்துறையில், வேஷத்தில் பார்ப்பானை விட இரண்டு மடங்காக அல்லவா இருக்கிறார்கள்! இந்த பார்ப்பனரல்லாதார் வீட்டுக் கலியாணம், கருமாதி, சாந்தி முகூர்த்தம், திவசம், பூஜை எல்லாம் பார்ப்பான் இல்லாவிட்டால் ஆகாது; உத்தியோகத்தில் – தேர்தலில் மட்டும் பார்ப்பானுடன் போட்டி போட வேண்டும் என்றால் யார் ஒப்புக் கொள்வார்கள்?" … எனக் குறிப்பிடுகிறார்.

பெரியாரால் விமர்சனத்தோடு மதிப்பிடப்பட்டுள்ள நீதிக் கட்சியின் மூல அமைப்பாக 1912ல் தொடங்கப்பட்ட 'சென்னை ஐக்கிய சங்கம்’ அதன் முதலாம் ஆண்டு நிறைவில் 'சென்னை திராவிடர் சங்கம்' என்றே பெயர் மாற்றம் பெற்றது. அதன் சார்பாக பார்ப்பனரல்லாத மாணவர்கள் சென்னை கல்லூரியில் படிக்க ஏதுவாக டாக்டர் நடேசனார் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட மாணவர் விடுதி 'திராவிடர் இல்லம்' (Dravidan House) என்றே பெயர் பெற்றது. அதுமட்டுமல்ல, 1916ல் தொடங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் (நீதிக்கட்சி) கிளைகள் 'இராயப்பேட்டை திராவிடர் சங்கம்', 'ஜார்ஜ் டவுன் திராவிடர் சங்கம்’ என்ற திராவிடப் பெயர்களிலேயே தொடங்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக 1892ல் அயோத்திதாசப் பண்டிதரால் உருவாக்கப்பட்ட ஆதி திராவிட மகாஜன சபை 1894 இல் 'திராவிட மகாஜன சபை’ என்ற பெயர் மாற்றம் பெற்றிருந்தது.

மேலும் 6-6-1927 அன்று கோவில்பட்டியில், சுவாமி விருதை சிவஞானயோகியாரால் தொடங்கி நடத்தப்பட்டு வந்த 'திராவிடர் கழக'த்தின் 18 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பெரியார் தலைமை தாங்கி ஆற்றிய உரை 26-6-1927 'குடிஅரசு' இதழில் வெளியாகியுள்ளது. அவ்வுரையில் -

"….. சுவாமி சிவஞானயோகிகள் காலத்தில் மாத்திரம் இம்மாதிரி முயற்சிகள் தோன்றிற்று என்று நினைக்கிறீர்களா? என்று இந்த நாட்டில் ஆரியர்கள் கால் வைத்தார்களோ அன்று முதலே ஆரியர் – திராவிடர் என்கிற வேற்றுமையும், ஆரியர் சங்கம் – திராவிடர் சங்கம் என்கிற இயக்கங்களும் சுயமரியாதைக் கிளர்ச்சிகளும் இந்த நாட்டில் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது"

என்று கூறியிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்க ஒன்றாகும்.

இவ்வாறு தமிழ்நாட்டு அரசியல் வெளியில் 'திராவிடர்’ என்ற குறிப்போடு பல்வேறு அமைப்புகள் இயங்கியே வந்துள்ளன என்றாலும் இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல, 1939 மே மாதம் பெரியார் சிறையிலிருந்து வெளிவந்தது முதல் தனது அமைப்பிலும் 'திராவிடர்’ என்ற அடையாளச் சொல்லோடு சில துணை அமைப்புகளை உருவாக்கியுள்ளார்.

1939 நவம்பர் இரண்டாம் நாள் சிறையிலிருந்து விடுதலையான பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈரோட்டில் – 'ஆரிய திராவிட ஆராய்ச்சிப் பள்ளி'யைத் தொடங்குகிறார். 1939 நவம்பர் 24 ஆம் நாளன்று ஈரோட்டில் 'திராவிட நடிகர் சங்கம்' உருவாகிறது; திராவிடர் மாணவர் கழகமும் உருவாகிறது. கோவையில் 19-11-1943 அன்று நடந்த 'சந்திரோதயம்' நாடகத்துக்கு வந்திருந்த பெரியாருக்கு கோவை மாவட்ட திராவிடர் கழகத்தார் வரவேற்புத்தாள் வாசித்தளித்துள்ளனர். (குடி அரசு – 18-12-1943)

26-11-1943 அன்று சேலம் தேவங்கர் பள்ளிக்கூடத்தில் பெரியார் தலைமையில் நடந்த ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் கூட்டத்தில் இரண்டாவது தீர்மானமாக 'ஜஸ்டிஸ் கட்சிக்கு (S.I.L.F.) தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றிருக்கும் பெயரை 'தென்னிந்திய திராவிடர் கழகம்' என்றும், ஆங்கிலத்தில் "South Indian Dravidian Federation” என்றும் பெயர் திருத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது (குடிஅரசு – 4-12-1943).

16-1-1944 அன்று சேலம் செவ்வாய்பேட்டை திராவிடர் கழக முதலாமாண்டு விழாவில் ஆற்றிய உரை "திராவிடர் கழகம் – பெயர்க் காரணம்" என்ற தலைப்பில் 12-2-1944 ஆம் நாளிட்ட குடிஅரசு ஏட்டில் வெளிவந்துள்ளது.

6-2-1944 அன்று புவனகிரியில் திராவிடர் கழக ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு பெரியார் ஆற்றிய உரை, "எதற்காக திராவிடர் கழகம் என்ற பெயர் கொடுக்கிறோம்?" என்ற தலைப்பில் 12-2-1944-ஆம் நாளிட்ட குடிஅரசு ஏட்டில் வெளிவந்துள்ளது.

24-4-1944 அன்று திண்டிவனம் திருவள்ளுவர் தமிழ்க் கழக விழாவில் உரையாற்றிய சொற்பொழிவாளர் குறள் வீ.முனுசாமி அவர்களுக்கு திண்டிவனம் நகர திராவிடர் கழகம் வரவேற்பு வாசித்தளித்த செய்தி 20-5-1944 நாளிட்ட குடிஅரசு இதழில் வெளிவந்துள்ளது. டி.கே.எஸ். நாடகக் கம்பெனியிலிருந்து வெளியேற்றப்பட்ட இயக்க நண்பர் தோழர் நடிகர் டி.வி.நாராயணசாமிக்கு 18-2-1944 அன்று ஈரோடு டவுன் எலிமெண்டரி பாடசாலையில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் ஈரோடு திராவிடர் கழகத்தார் ஒரு வெள்ளிக் கோப்பையை பரிசளித்த செய்தி 4-3-1944 ஆம் நாளிட்ட 'குடிஅரசு’ இதழில் வெளிவந்துள்ளது.

13-2-1944 அன்று சென்னை சவுந்தர்யம் மகாலில் நடைபெற்ற சென்னை ஜில்லா நீதிக்கட்சி மாநாட்டில் "தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்பதை 'சென்னை மாகாண திராவிடர் கட்சி' என்று மாற்றுமாறு சேலத்தில் நடைபெறப் போகும் மாகாண மாநாட்டிற்கு இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை 26-2-1944 ஆம் நாளிட்ட 'குடிஅரசு' ஏடு தெரிவிக்கிறது. 20-2-1944 அன்று திருச்சி நகராண்மைக் கழக பொதுமன்றத்தில் திருவொற்றியூர் சண்முகம் அவர்கள் தலைமையில் 'அண்ணா’ கொடியேற்றி வைக்க, பெரியார் நிறைவுரை ஆற்றிய திருச்சி மாவட்ட நீதிக்கட்சியின் 15 ஆம் மாவட்ட மாநாட்டில் "அண்மையில் சேலத்தில் நடக்கவிருக்கும் நமது மாகாண மாநாட்டில் நமது கட்சியின் பெயரைத் 'திராவிடர் கழகம்' என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இம்மாநாடு சிபாரிசு செய்கிறது" என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவற்றிலிருந்து சேலத்தில் 27-8-1944 இல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் "திராவிடர் கழகம்” என்று பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 'திராவிடர் கழகம்’ என்ற பெயரோடு பல அமைப்புகள் இயங்கி வந்ததையும், சேலத்தில் நடைபெறுவதாக இருந்த மாகாண மாநாட்டில் நீதிக்கட்சியின் (தென்னிந்திய நல உரிமைச் சங்கம்) பெயரை "திராவிடர் கழகம்” என மாற்ற வேண்டுமென நீதிக்கட்சியின் நிர்வாகக் குழுவும் பல்வேறு மாவட்டக் குழுக்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில்தான் 27-8-1944 அன்று சேலத்தில் மாநாடு கூடியது. 'சேலம் மாநாடு' என்ற தலைப்பில் 5-8-1944 ஆம் நாளிடப்பட்ட 'குடிஅரசு' ஏட்டில் பெரியார் ஒரு தலையங்கம் எழுதியுள்ளார். அத்தலையங்கத்தில் 20-8-1944 ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் நடைபெறப் போவதாகவே பெரியார் குறிப்பிட்டுள்ளார். (ஆனால் அது பின்னர் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டு 27-8-1944 அன்றுதான் நடந்தது).

அத்தலையங்கத்தின் மூன்றாவது பத்தியில்

"மாநாட்டில் இரண்டு மூன்று விஷயங்கள் முக்கியமாக சிந்திக்க வேண்டியவைகளாக இருக்கும். திராவிட நாட்டு பிரிவினையை வலியுறுத்தி அதற்காகக் கிளர்ச்சி செய்தல், கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று திருத்தி அமைத்தல், கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் பற்றி விவாதித்து வலியுறுத்தி அவைகளை அவசியம் நடைமுறைக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்தல் ஆகியவைகள் முக்கியமானவைகளாக இருப்பதோடு மற்றும் சில விஷயங்களும் இடம் பெறும் என்றே நினைக்கிறோம்"

என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 12-8-1944 நாளிட்ட குடிஅரசு ஏட்டின் தலையங்கத்திலும் -

"… ஆகவே, கீழ்க்கண்ட கொள்கைகளை ஆதரிக்கும் திராவிட மக்கள், ஆண் பெண் இளைஞர் ஒவ்வொருவரும் தவறாமல் அவசியம் சேலம் மாநாட்டிற்குச் சென்று, நாம் திராவிடர், நம் கழகம் திராவிடர் கழகம், நமக்கு வேண்டியது திராவிடநாடு என்பனவாகிய கொள்கைகளுக்கு…" என்பதாக குறிப்பிட்டுள்ளதோடு…, "ஓங்குக திராவிடர் கழகம் ! தோன்றுக திராவிட நாடு !! வாழ்க திராவிடர் !!!" என்ற சொற்களோடு முடிக்கிறார்.

அவ்வாறே 19-8-1944 நாளிட்ட குடிஅரசு ஏட்டின் துணைத் தலையங்கத்தில் -

"…20-8-1944 ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சேலம் மாநாடு 27-8-1944 ஆம் தேதிக்கு ஒத்திப்போடப்பட்டுவிட்டது. 27ஆம் தேதியில் அவசியம் நடக்கும். ஏராளமான மக்கள் பிரதிநிதிகளாய் வந்து பெருத்த உற்சாகத்துடன் ஏகமனதாய் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடுத்து உடனே கிளர்ச்சி துவங்க வசதியையும் எழுச்சியையும் உண்டாக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. மாநாட்டில் வரும் தீர்மானங்களில் 'திராவிடர் கழகம்', 'திராவிட நாடு' என்ற தீர்மானங்களோடு தோழர்கள் பாண்டியன், அண்ணாதுரை ஆகியவர்களால் கொண்டு வரப்படும் தீர்மானங்கள்…" என்பதாக எழுதப்பட் டுள்ளது.

இவ்வாறாக திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டுக்கு முன்னதாகவே இரண்டு ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 'திராவிடர் கழகம்' என்ற பெயரோடு அமைப்புகள் இயங்கி வந்த நிலையிலும், அக்கால கட்டங்களில் உரையாற்றிய பெரியார் "திராவிடர் கழகப் பெயர்க் காரணம்"- "எதற்காக திராவிடர்கழகம் என்ற பெயர் கொடுக்கிறோம்" – என்ற தலைப்பில் உரையாற்றி வந்துள்ள நிலையிலும், 27-8-1944 அன்று சேலம் மாநாடு நடப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக 5-8-1944 அன்று அவர் குடிஅரசில் எழுதியுள்ள தலையங்கத்தில் எழுதியுள்ள மாநாட்டு விவாதப் பொருள்களில் ஒன்றாக "கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று திருத்தி அமைத்தல்" என்பதைக் குறிப்பிட்டு எழுதியுள்ள நிலையிலும், அடுத்தடுத்து 12.8.1944, 19.8.1944 ஆகிய இரண்டு இதழ்களிலும் தலையங்கம், துணைத் தலையங்கங்களில் திராவிடர் கழகப் பெயர் மாற்றம் பற்றி குறிப்பிட்டிருந்த நிலையிலும், அண்ணல்தங்கோ போன்றோர் காலையில் கட்சியின் பெயரை 'தமிழர் கழகம்' என்று மாற்றி அமைக்க முன்மொழிந்ததை ஏற்றுக்கொண்ட பெரியார், மாலையில் அது அவருக்கே ஆபத்தாகி விடும் என்பதால்தான் கட்சியின் பெயரைத் தந்திரமாக "திராவிடர் கழகம்" என்று மாற்றி வைத்துக் கொண்டார் என்ற கருத்தைப் பரப்புவது எவ்வளவு விஷமத்தனமானது என்பதையும், அது ஒரு தரம் தாழ்ந்த, திட்டமிட்ட பொய்யே என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும், அப் பொய்யர்களும் இந்தப் புளுகை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுமே நமது விருப்பம், விண்ணப்பம்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 selvan 2012-06-13 15:20
அதெல்லாம் சரி. அதுதான் "திராவிடம்" வட மொழி-நு தெரியுதில்லே. அப்ப "தமிழர் கழகம்"-நு மாத்த வேண்டியது தானே. இல்ல, அவங்க சொல்ற மாதிரி மத்த மொழிக்காரந்லாம் தமிழன் தலையிலே மிளகாய் அரைக்க முடியாது-நு மாத்தலையா?
Report to administrator
0 #2 arasan 2012-06-13 15:56
அண்டபுளுகு .. ஆகாசப்புளுகு.. அதனினும் பெரிய புளுகு பார்ப்பன(ஆரிய) புளுகு என்பார்கள். ஆனால் எல்லோரையும் விழுங்கி ஏப்பம் விடும் பொய்யை நாம் தமிழர் இயக்கம் ஆவணமாக( ஆணவமாக) வெளியிட்டிருப்ப தை இக்கட்டுரை ஆணித்தரமாக விளக்குகிறது. கீற்றுக்கு பாரட்டுக்கள்.
Report to administrator
0 #3 padmanaban 2012-06-13 17:01
திராவிடதிர்கு ஆயிரம் காரனம் கூரினாலும் ,தமிழனுக்கு தமிழர் என்ர அடையாலமெ போதும்.
Report to administrator
0 #4 தமிழ் மனிதன் 2012-06-13 22:53
தமிழ் என்பது மொழி.

தமிழன் என்பது இனம்.

தமிழ்நாடு என்பது நிலம்.

இப்படி தமிழ்நாடு என்ற நிலத்தில், தமிழ் என்ற மொழியை பேசும் தமிழன் என்ற இனத்தினை தமிழ் பெயரில் அழைக்காமல்,. ஏன் திராவிடன் என அழைக்க வேண்டும்.
Report to administrator
0 #5 தமிழ் மனிதன் 2012-06-13 22:55
3% பிராமணர்களுக்கா க தமிழனை, தமிழனை வெறுக்கும் தெலுங்னோடும், மலையாளத்தானோடும ், கன்னடனோடும் இணைக்க வேண்டும் என்று சொல்வது எவ்விதத்தில் ஞாயம்.

பெரியார் தமிழன் அல்லாதவராக இருக்கும் போது திராவிடன் என்ற சொல் பெரியாருக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கலா ம். ஆனால் தமிழன் என்பதை தவிற வேறு மகிழ்வான சொல் தமிழனுக்கு இல்லை.

தயவு செய்து தமிழனை வாழ விடுங்கள்,. இப்படி திராவிடம் என்று பேசி தமிழனை கொல்லாதீர்கள்.
Report to administrator
0 #6 seyed muhammed 2012-06-13 22:56
தோழர்:கொளத்தூர் மணி அவர்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு கூர்ந்து சமீபகாலமாக திராவிடம் குறித்த வம்பளப்புகளுக்க ு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் .கொடுப்பதின் மூலம் உங்களின் உழைப்பையும் காலத்தையும் திசை மாற்றி விரையம் செய்ய முயல்பவர்க்கு வாய்ப்பை வழங்காதீர்கள்.
திராவிடம் என்பது பார்ப்பன எதிர்ப்பின் உன்னதம் என்பதை எதிரிகள் நன்கறிவார்கள். எனினும் ஒன்றும் தெரியாத பாப்பா'த்தி(யை) "வை போல சாடை காட்டுகிறார்கள் , நடிக்கிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் உண்மையை அறிவதல்ல;செயல் படுவோரின் நேரத்தையும் உழைப்பையும் வீண்விரயம் செய்வதே!ஆதலால் எச்சரிக்கை!எச்ச ரிக்கை!
பத்மநாபன் என்பவரின் தமிழை படியுங்கள்; இவரின் ஆர்வம் தமிழ் ஆர்வம் அல்ல.தமிழ் மீது கொண்ட பற்றள்ள.பற்றாயி ருந்தால் நல்ல தமிழில் எழுத பிழையின்றி எழுத முயற்சித்திருப் பார்.ஆனால் அவரின் பார்ப்பன அடையாளம் அல்லது அடிமை சாசனம் அவரை தமிழ் கற்க விடமறுக்கிறது.அ தே வேளை திராவிடம் எனும் பார்ப்பனத்தை எரிக்கும் எரி தழலையும் கண்டு அஞ்சுகிறது.ஆதலா ல் தமிழில் எழுதுகிறார்"என் ன கூரினாலும்"என்ற ு எழுதுகிறார்.
ஆதலால் உங்களின் காலத்தை பார்ப்பன புறம்போக்குகளுக ்காக அடிமைகளுக்காக வீணாக்காதீர்;வி சனப்படாதீர்.
Report to administrator
0 #7 Pazha.Manickam 2012-06-14 00:26
தன் முகவரி என்ன ? தன் தலைவன் யார் ? என் சொந்த உறவு 1.5 லட்சம் மக்கள் கொல்லபடும்போது எவனும் உன்மையாக உதவவில்லை . இதுவரை ஏமாட்ரிய அரசியல் கருத்து போதும் தமிழன் என்ற அடையலத்தோடு அரசியல் நடததுங்கள்.கருத ்துப்போர் மோதல் எமக்கு ஈழம் தருமா ? தமிழ் நாட்டை தமிழன் ஆழமுடியுமா ? தமிழனிடம் சாதி ஒழியுமா ? தமிழ் பேசுபவன் சாதி பேசுகிறான், மாற்றான் ஆட்சியை பிடிக்கபார்கிறா ன்.எல்லா உரிமையும் போயாச்சு,ஈழமும் போச்சு.தமிழனுக் காக மனம் மாற்றம் ஒன்றூம் தவறு இல்லையெ,,....
Report to administrator
0 #8 kanchitamilan 2012-06-14 05:28
தோழர்.கொளத்தூர் மணி அவர்களின் கட்டுரை மிக சிறப்பு . தோழருக்கு வாழ்த்துக்கள - காஞ்சித்துரை, கொடைக்கானல்
Report to administrator
0 #9 நான் தமிழன் 2012-06-14 17:56
திராவிட நாடு கோரிய திமுக அதை கைவிட்டது.பெரிய ார் காமராசர் தலைமையில் இருந்த ஆட்சியை ஆதரித்தார்,67 தேர்தலில் கூட காங்கிரசை ஆதரித்தர்.திராவ ிட நாடு என்பது அவ்வப்போது பேசப்பட்ட ஒன்று.அதைக் கோரி பெரியார் எத்தனை போராட்டங்கள் நடத்தினார்.திரா விட நாடு,திராவிடர் போன்றவை இன்று தேவையற்றவை.தமிழ ர் என்ற அடையாளம் போதும்.திராவிடர ் என்பது காலி பெருங்காய டப்பா, வாசனைதான் இருக்கிறது, சரக்கு இல்லை.பெரியார் தி.கவும் அப்படித்தான்.மன ுதர்ம எரிப்பு என்று காமெடி அரசியல் செய்கிறார்கள்.
Report to administrator
0 #10 சம்பூகன் 2012-06-14 18:03
///திராவிடதிர்க ு ஆயிரம் காரனம் கூரினாலும் ,தமிழனுக்கு தமிழர் என்ர அடையாலமெ போதும்///
முதலில் தமிழை பிழையற எழுதப்பழகுங்கள் .அப்புறம் தமிழராய் இருக்கலாம்.
Report to administrator
0 #11 அருண் 2012-06-14 22:20
அன்று பார்ப்பனர்கள் தமிழர்களின் மீது ஹிந்தியை திணித்தனர். இன்று திராவிடர்கள் என்று தங்களை கூறி கொள்பவர்கள் தமிழர்களின் மீது திராவிடத்தை திணிக்கின்றனர். 60
வருடங்களாக திராவிடம் இந்திய ஆரிய ஏகாதிபத்தியத்தி ற்கு கங்காணி வேலை பார்த்ததை என்பதை தோழர் கொளத்தூர் மணி மறுக்க முடியுமா?
திராவிடம் என்பது ஆரியத்தின் இளைய பங்காளியே
Report to administrator
0 #12 Jaiganesh 2012-06-14 22:24
உலகில் உள்ள மக்களில் பாதி பேர் இப்பொழுது ஏமாற்றுக்காரர்க ளாக மாறிவிட்டார்கள் . பிணங்கள் ஆக போகும் ஒவ்வொரு மனிதனும், நாம் இறப்பை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்பதை உணராமல், வாழும்பொழுது எவ்வளவு பிறரை ஏமாற்றி கஷ்டப்படுத்தி வாழ முடியுமோ அவ்வளவு கஷ்டங்களை பிறருக்கு கொடுக்கிறான். மனிதனே உணர்ந்து கொள் நீ இறப்பை நோக்கி நடக்கிறாய். சாகும் பொழுது ஒன்றும் கொண்டு போகப்போவதில்லை. தயவுசெய்து பிற உயிர்களை வாழும் பொழுது மதிக்க கற்றக்கொள். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
Report to administrator
0 #13 E.V.R.Ram 2012-06-14 22:25
பெரியார் என்றைக்கோ உலக தலைவராகவும் சமதர்மவாதியாகவு ம் ஆகி விட்டார். பிறகு ஏன் இந்த சில்லு வண்டிகளோடு ஒப்பிட வேண்டும்?
Report to administrator
0 #14 E.V.R.Ram 2012-06-14 22:25
சும்மா எப்பொழுது பார்த்தாலும் தமிழர் தமிழர் என்று சொல்லுகிறவர்கள் ஐந்து தலைமுறைக்கு முன்னர் எந்த இனமாக இருந்தார்கள் என்று ஆதாரத்துடன் கூற முடியுமா?
Report to administrator
0 #15 Guest 2012-06-15 14:01
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கி முதலில் அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று முழக்கமிட்டு பின் அதைக் கைவிட்டு ஆட்சியை 1967ல் பிடித்தனர்.திரா விட நாடு என்பதை பெற உருவாக்கப்பட்ட திராவிட அமைப்புகள் என்னவாயின.ஏன் பெரியாரால் கூட தனி நாடு திராவிட நாடு என்பதற்காக போராடி மக்களை திரட்ட முடியவில்லை.194 7க்குப் பின் இந்திய தேசியத்தை ஏற்று அதில் இணைந்தால்தான் நல்லது என்று தெரிந்து விட்டது.இன்று அனைத்து திராவிட கட்சிகளும் இந்திய தேசியத்திற்கு விசுவாசிகளாக மாறி பதவி,அதிகாரத்தி ற்கான போட்டியில் உள்ளன.இப்போது பழைய கதைகளைப் பேசி என்ன பயன்.நாம் தமிழர் அமைப்பு பொய் சொல்கிறது என்றே வைத்துக் கொள்வோம்.பெரியா ர் தி.க என்ன இப்போது 1940கள் கோரிய திராவிட நாட்டை பெற்றுத்தரப் போகிறதா இல்லை அதை லட்சியமாகக் கொண்டுள்ளதா.இல் லையே, பெரியார் தி.கவும் இந்திய தேசியத்தையும், இந்திய அரசியல் சட்டத்தையும் ஏற்றுத்தானே அமைப்பாக செயல்படுகிறது.த ேர்தல் பாதை திருடர் பாதை என்று சொல்லாமல் தேர்தலில் கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறது.அப்பட ியிருக்க கிழவி மஞ்சள் தேய்த்து குளித்த கதையாய் அந்தக் காலத்தில் பெரியார் என்று திரும்பத் திரும்ப கீறல் விழுந்த ஒலித்தட்டுப் போல் பழைய கதைகளை ஏன் எழுதுகிறார்கள்.
திராவிடர் திராவிடம் என்ற வரையரை வேண்டாம் தமிழர் என்ற அடையாளம் போதும் என்று நினைப்பவர்கள் அதை வைத்துக் கொள்ளட்டும்.அவர ்கள் விமர்சிக்கக் கூடாது என்று எப்படி பெரியார் திகவினர் எதிர்பார்க்க முடியும்.
ஏன் தமிழர் என்ற அடையாளம் அவர்களுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.அதை கூடவே கூடாது என்று சொல்கிற அளவிற்கு அதில் என்ன இருக்கிறது. ஆ.ராசா போன்றவர்கள் திராவிடர்கள் அவர்கள் என்ன செய்தாலும் ஆதரிப்போம் விமர்சிக்க மாட்டோம் என்றல்லவா இந்தப் ‘பகுத்தறிவாதிகள ்’ செயல்படுகிறார்க ள்.ஊழல் பிரச்சினையில்லை ,அதை கூட்டாக யாருடன் செய்தாலும் பிரச்சினையில்லை , ஆ.ராசாவை எதிர்த்து ஒன்றும் எழுத மாட்டோம் என்று சொல்லும் அமைப்பு எத்தகைய அமைப்பு.
இங்கே திராவிடம்,திராவ ிடர் என்பது ஊழலை மறைக்கத்தானே அவர்களால் பயன்படுத்தப்படு கிறது.அதன் மூலம் திராவிடர் என்பதை கேவலப்படுத்துபவ ர்கள் நாம் தமிழர் எழுதியதை விமர்சிக்கும் முன் சுய விமர்சனம் செய்து கொள்ளட்டும்.கொள த்தூர் மணியும்,விடுதலை ராசேந்திரனுக்கு ம் ஒன்று தெரிய வேண்டும்- மக்கள் 2ஜி ஊழலை நன்றாகப் புரிந்து கொண்டுதான் 2011 தேர்தலில் ஒட்டுப் போட்டார்கள்.திர ாவிடர் என்ற பெயரில் ஊழல் செய்பவர்களை ஆதரிக்கவில்லை.
Report to administrator
0 #16 அருண் 2012-06-15 17:38
//சும்மா எப்பொழுது பார்த்தாலும் தமிழர் தமிழர் என்று சொல்லுகிறவர்கள் ஐந்து தலைமுறைக்கு முன்னர் எந்த இனமாக இருந்தார்கள் என்று ஆதாரத்துடன் கூற முடியுமா//

பலே பலே.
ஐந்து தலைமுறைக்கு முன் தமிழகத்திற்கு வந்த வெளி மாநிலத்தார் அவர்களது சொந்த இனத்தை இன்றும் உரிமையோடு பின் பற்றி வருகின்றனர். இது அவர்களது உரிமை. ஆனால் தொன்மை இனமான தமிழ் இனத்தை பார்த்து ஐந்து தலைமுறைக்கு முன் எந்த இனமாக இருந்தார்கள் என்று கேட்பது ஆணவமா அல்லது தமிழர்கள் அவர்களது இனத்தை கூறகூடாது என்ற நிலைப்பாடா?
Report to administrator
0 #17 ravanan 2012-06-15 23:39
திராவிடர் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை சொல். ஜாதி வெறியர்கலுக்கு அது புரியாது
Report to administrator
0 #18 அருண் 2012-06-16 02:20
//திராவிடர் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை சொல்//
சிறந்த நகைச்சுவை. இப்படியே ஒவ்வொருத்தரும் வேறு வேறு கருத்துக்களை சொன்னால் எப்படி?
ஒரு முடிவுக்கு வாருங்கள்.திராவ ிடம் என்றால் என்ன அல்லது திராவிடர் என்றால் என்னவென்று.
ஊரை ஏமாற்றுவது என்றால் உங்களை போன்றவர்களிடம் இருந்துதான் கற்று கொள்ள வேண்டும் போலிருக்கிறது
Report to administrator
0 #19 Kenaiyan 2012-06-17 20:00
தமிழகத்தில் சாதியை இயக்கங்களால் ஒழிக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு சாதிக்கும் தனிப்பட்ட கலாச்சாரம், பழக்க வழக்கம் (உணவு உள்ளிட்ட) ஆகியன உள்ளன. மேலும் தங்களுக்கென ஆண்ட வரலாறும் அடிமைப்பட்ட அல்லது அடிமைப்படுகிற வரலாறும் உள்ளதாக ஒவ்வொரு சாதியினரும் நம்புகிறார்கள். தாழ்த்தப்பட்ட சாதிகள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. சாதி இருக்கிறது என்று சொல்பவர்களை விடவும் சாதி இல்லை என்று சொல்பவர்கள் தான் மோசமானவர்கள். அவர்களிடம் தான் நாம் உஷாராக இருக்க வேண்டும் என தாழ்த்தப்பட்ட மக்கள் நினைக்கிறார்கள் . ஆகவே சமூக நோக்கம் கொண்ட இயக்கங்கள் சாதிகளுக்கிடையே சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையு ம் பேண உழைக்க வேண்டும். சாதி ஒழிப்பை காலம் பார்த்துக்கொள்ள ும். இங்கே பிரச்சினை என்னவெனில் தமிழ்நாட்டில் வீரவன்னியராகவும ் முக்குலத்தோராகவ ும் ஆதிதிராவிடர்களா கவும் இருப்பவர்கள் தமிழகத்தின் எல்லையை தாண்டினால் ஒட்டுமொத்தமாக ‘தமிழர்’ என்னும் அடையாளத்துக்குள ் (அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டால ும்) வந்து விடுகிறார்கள். அந்த ‘தமிழர்’ என்னும் அடையாள அடிப்படையில் அவர்களுக்கு அநியாயங்கள் நேர்கின்றன (சில சமயம் தமிழகத்துக்குள் ளேயும்). அந்த அநியாயங்களை ‘தமிழர்’ என்னும் அடிப்படையில் தான் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். இங்கே திராவிடம் என்பது எங்கே வந்தது? மேலும் தமிழ்நாடு என்பது மொழிவாரி அடிப்படையில் அமைந்த மாநிலம். அரைவேக்காடுகளைய ும் சில்லரைகளையும் போலித்தனத்தையும ் கொண்டதே திராவிட இயக்கம். இவர்கள் மேடை நாடகத்துக்கும் சினிமாவுக்கும் வித்தியாசம் புரியாமல் கதை வசனம் எழுதியவர்கள் (இன்றளவும் அதை நினைத்து புளகாங்கிதம் வேறு!). காவிரி பிரச்சினை, ஒகெனக்கல் எல்லை பிரச்சினை, முல்லைப்பெரியாற ு அணை பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை ஆகிய எல்லா பிரச்சினைகளும் இந்த திராவிட இயக்கத்தினரின் கொடுப்பினை. சுற்றியுள்ள மாநிலங்களும் நாடுகளும் தமிழர்களை எட்டி எட்டி உதைப்பதற்கும் ஏளனப்படுத்துவதற ்கும் இந்த திராவிட இயக்கத்தினரின் அறுபது ஆண்டு கால அரசியலே காரணம். உச்ச கட்ட அநியாயம் முள்ளிவாய்க்கால ில் நடந்தேறியது. அப்போது தன் குடும்பத்தினருக ்கு மந்திரி பதவி கேட்டு இவர்கள் தலைவர் தில்லியில் பேரம் பேசிக்கொண்டிருந ்தார். ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதை தமிழ்நாட்டு மக்களிடம் மறைத்த குடும்பத்தினர் நடத்திய தொலைக்காட்சிகள் சினிமாவை காட்டி ஏமாற்றின (தெரிந்திருந்தா ல் மட்டும் தமிழக மக்கள் என்ன கிழித்திருப்பார ்களோ!). அதிகாரம் கையில் இருக்கும் போது அகில உலகமே சந்தி சிரிக்கும்படியா ன ஊழல்களை செய்து தமிழ் மக்களுக்கு கேவலத்தை ஏற்படுத்துவது தான் இவர்களின் தொழில். அது சரி! ஓனம் பண்டிகைக்கு தமிழகத்தில் விடுமுறை கொடுக்க இவர்கள் யார்?. தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்பதால் இவர்கள் நன்றாக மிளகாய் அரைக்கிறார்கள். அரைங்க!, அரைங்க! நல்லா அரைங்கப்பா!
Report to administrator
0 #20 பெரியார் குயில் 2012-06-18 01:13
நெத்தியடிக்குறி ப்புகள்!

அருக்கோ இன்நேரம் பதில் தந்திருக்க வேண்டும்!

அதுவே அறிவுநாணயமுள்ள சிந்தனை! அள்ளிவிடுவது அதனால் சீமான் போன்ற ஆற்றல் உள்ள இளைஞர்களை காயடிப்பது.என்ன ... எளிய வேலை...!

சாதிய வெறிபிடித்த கும்பல் ஒன்று சீமானுடன் சுற்றிச்சுற்றி வருகிறது! அவரின் புகழ்பாடித்திரி கிறது! அதற்கு பெரியார் என்றால் கசக்கும்! சாதியை ஏற்ற தமிழ்ச்சிந்தனை ஏதும் இருக்குமென்றால் இனிக்கும்! இந்திய உளவுத்துறைக்கு தமிழர்களை மேலும் கூறுபோட வாய்ப்பளித்துள் ளார். சீமானைச்சுற்றிய ுள்ள ஒரு கும்பல் (அவர்கள் ”ரா“-வாகக் கூட இருக்கலாம்) இந்த பித்தலாட்டங்களை செய்துவருகிறது.
ஏன்னய்யா! இந்த தமிழ் அறிஞர்கள் எப்போது பார்த்தாலும் குழப்பியே திரிகிறார்கள்! இவர்கள் தமிழ் சமூகமுன்னேற்றத் திற்கு அளித்த பங்களிப்பு என்ன? 10-நுால் எழுதியிருப்பார் கள்! ஆனால், களத்தில், இயக்க கட்டமைப்பில்... ? மக்களிடம் சென்றதில...?? சீமான் இவர்களின் பழம்பெருமை சிந்தனைக்கு ஒரு வாய்ப்பு! அவரையும் குழப்புவதே இவர்களின் கொள்கை கோவணம்.. மன்னிக்கவும்.. ஆவணம்!

முன்பே பல கருத்துரைகளில் பகிர்ந்தது போல, அனைத்து வார ஏடுகளிலும் சீமான் அவர்களின் பேட்டி தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது. அதில், மீண்டும் ஒருமுறை குழப்புகிறரா? அல்லது சுய குழப்பமா? என்று தெரியவில்லை.

திராவிடத்தை எதிர்க்கப்போய், திராவிடர்களையும ் எதிர்க்கிறார். இந்த மண்ணோடு மண்ணாக மக்கிப்போன தெலுங்கு, கன்னடம், உருது இதர மொழி பேசுவோரை என்னவென்று அழைப்பது?! அவர்கள் வீட்டில் தெலுங்கில்லை! கன்னடம் இல்லை! பேச்சு வழக்கில் ஒருசில இடங்களில்தான் உள்ளது! மேலும், அவர்கள் குழந்தைகளின் சான்றிதழ்களில் தாய்மொழி தமிழ் என்றே பதிந்தும் வருகிறார்கள்! (கவனியுங்கள்! மலையாளியை சேர்க்கவில்லை. மிக அழகாக அன்றே தந்தை பெரியார் சொன்னார் ”பார்ப்பானும், மலையாளியும் ஒன்னு” என்று!
) எந்த மலையாளியையும் தமிழ்நாட்டை பணம் பண்ணும்வேட்டைக் காடாகவே கருதுகிறான்.

19-ஈகியர் ஈழப்போரின் போது உயிர் துறந்தார்கள் அவர்களில் எத்தனை பேர் தமிழர்கள் என்ற புள்ளிவிபரத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்! அவர்களின் உணர்வின், உயிரின் மதிப்பு...??

நாம்தமிழர் ஆவணம் வெளியிடப்பட்டிர ுக்க வேண்டிய ஆண்டு 1947 பாக்கிஸ்தான் பிரிவினைக்கு முன்பு!

எம்.கே.நாராயணன் , சிவசங்கர் மேனன், நம்பியார் இன்னும் எத்தனை பேர் வந்தாலும், அவர்கள் மொழியால் வேறுநபர்களாக இருந்தாலும், ஜாதியால் பார்ப்ப்னர்களாக வே உள்ளனர். நாம் தமிழர் ஆவணம் பார்ப்பானுக்கு இடமளிக்குமென்றா ல், அது பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ள அரசியல் அறிவு கூட இல்லை என்றே பொருள்! பா.ம.க. பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை.


இது ஒரு மாறுதலுக்கு உட்பட்ட கொள்கை ஆவணம்தான் என்கிறார் சீமான் (ஆனந்த விகடன் பேட்டி). அதில் எதற்கு இத்தனை வசைபாடல் என்பதே நம்முன் உள்ள கேள்வி!! தமிழ்தேசியத்தை வரையறுங்கள்! அதை வரையறுப்பது என்பதும் எளிய காரியம் அல்ல! பெரியாரியம் என்ற பெரும்பேற்றை கிண்டாதீர்கள்! அவர்களின் பங்களிப்பை உலகம் அறியும்!
Report to administrator
0 #21 sambandhar 2012-06-18 01:32
இப்புவியல் வாழும் அனைத்து மக்களையும் ஒரே இனமாகவும் மனிதன் என்ற ஒற்றை பொருளில் மட்டுமே காண வேண்டும் என்றும் , மதம், மொழி, இனம்,தேசம் போன்ற எந்த வகையாலும் பிரிந்துகிடக்க பொறுக்காமல் மனம்வெதும்பி பல தளங்களிலும் போராடியவர்தான் பெரியார் , அவர் நீட்சே ,ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற தத்துவ சிந்தனையாளர்களு க்கு ஒப்பானவர், இறுதியான மனிதத்ததை மட்டுமே சிந்தித்தவர்கள் .மொழி என்பது மனிதன் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ள மாட்டுமே அன்றி அதை வைத்து வெறிகொண்டு சண்டையிடுவதற்கு அல்ல. இவ்வுலகில் உள்ள அனைத்து மனித இனங்களும் ஒரே மூதாதை இரிடம்தான் தோன்றியது என்று பல அந்த்ரொபொலொக்ய் ச்டுடிஎச் நிருபித்துவிட்ட ன , பிறகு ஒவ்வொரு இனக்குழுவும் தங்களுக்கு வசதியான வாழ்விட தட்ப வெப்ப புவி அமைப்புக்கு ஏற்றவாறு தனித்தனி மொழிகளையும் வாழ்வியல் முறைகளையும் உருவாக்கிக்கொண் டன.நம் தென் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் "தமிழர்" உட்பட ஐரோப்பிய , ஆஸ்திரேலிய , ஆப்பிரிக்க தொன்மை பெரிய இனங்களின் கலப்பினம்தான் என்று மிக தெளிவாக நிருபனமாகிவிட்ட து , இவை அனைத்தும் மானுடவியல் மனித இன ஆராய்சிகளை விரிவாக அறிந்தோர்களுக்க ு நன்கு தெரியும். பெரியார் தான் வாழ்ந்த காலத்தைவிட மிகவும் முன்னோக்கி சிந்தித்தவர் இன்றுள்ள அரசியல், சமூகம்,அதிகாரம் , அமைப்பு, மதம், அறிவற்ற கல்வி,தேச அபிமானம் .போன்ற மனிதனை அவன் இயற்கை பண்புகளில் இருந்தும் ,இயற்கை உயிரியல் தன்மைகளில் இருந்தும் அடிமைபடுத்தும் விடயங்களில் இருந்து மனிதனை விடுதலை பெற போராடியவர். அவருக்கு தமிழ் ஆங்கிலம் தெலுங்கு பிரெஞ்சு என்ற எந்த மொழி பேதமும் கிடையாது , தமிழன் ஆங்கிலேயன், ஆப்பிரிக்கன் , சிங்களன் என்ற எந்த இன பேதமும் தெரியாது , இதை அனைத்தையும் கடந்து முன்னோக்கி சிந்தித்தவர் .

இன்று முதல்வர் கனவு கண்டு திரியும் சில சினிமாகாரர்கள் , தனி தமிழ் ,தமிழ் இனம் என்று வெறிகொண்டு புலம்பி தமிழர்களிடம் ஒட்டு வாங்க பார்க்கின்றனர் . இதை போலவே தமிழ் ,தமிழ் என்று பிதற்றி பலகாலம் ஏமாற்றி பிழைத்த கருணாநிதி போன்றவர்களை மக்கள் நன்கு உணர்ந்துவிட்டனர ். இனியும் யாரும் ஏமாற தயார் இல்லை. இந்த உலகத்தயே ஒரே(மனித) இனமாக மாற்ற கனவு கண்ட ஒருசில முற்ப்போக்கு உலக மாபெரும் சிந்தனையாளர்களி ல் பெரியார் முதன்மையானவர். அவரை எந்த இன மொழி போன்ற 'ப்ரன்டெட் பாட்டில்' களில் அடைத்து வைக்க முடியாது .
பெரியாரை வெறும் கடவுள் இல்லை என்று சொன்னவர் என்று தட்டையாக மட்டுமே புரிந்துகொண்டால ் அதை என்னவென்று சொல்வது !
அனைத்து தடைகளையும் மீறி மொத்த மனிதத்திற்கான விடுதலை ஒன்றையே குறிக்கோளாக கொண்டவரை ஒரு நல்ல சிந்தனையாளரை ,"மனிதரை " விமர்சிக்க எந்த அருகதையும் யோக்கியமும் யார்க்கும் இல்லை .
ஈழ தமிழர்களின் மீது இவருக்கு மட்டும்தான் அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்,
தமிழக மக்களுக்கு எந்த வரலாற்று உணர்வும் ,போராட்ட உணர்வும்,காத்தி ரமான கலை இலக்கிய உணர்வும் கிடையாது. சென்னையில் பன்றிகளை போல வாழ்ந்துகொண்டு சன் டிவி , ஜெயா டிவி , மானாட மயிலாட பார்த்துகொண்டிர ுப்பவர்களிடம் மேற்கண்ட உணர்வுகளை எதிர்பார்ப்பது தவறுதான். திருவாளர் சீமான் அவர்கள் முதலில் இவர்களை திருத்த வழிபார்க்கட்டும ்!
Report to administrator
0 #22 Kenaiyan 2012-06-20 02:54
அது சரி! ஓனம் பண்டிகைக்கு தமிழகத்தில் விடுமுறை கொடுக்க இவர்கள் யார்?. தமிழ் நாடு என்பது மொழிவாரி அடிப்படையில் அமைந்த ஒரு மாநிலம். கேரளத்தில் பொங்கல் பண்டிகைக்கு அவர்கள் வாழ்த்து கூட சொல்வதில்லை. அவர்களுக்கு தமிழ் மக்கள் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி யை சொல்லில் வடிக்க முடியாது. மேலும் ஒரே மாநிலத்தில் இரு அறுவடை திருநாள்கள் இருக்க முடியாது. தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்பதால் இந்த திராவிட இயக்கத்தினர் நன்றாக மிளகாய் அரைக்கிறார்கள்.
Report to administrator
0 #23 tamil_kaniyur@yahoo.com 2012-06-20 19:22
@கெனையன் //அது சரி! ஓனம் பண்டிகைக்கு தமிழகத்தில் விடுமுறை கொடுக்க இவர்கள் யார்?. தமிழ் நாடு என்பது மொழிவாரி அடிப்படையில் அமைந்த ஒரு மாநிலம். கேரளத்தில் பொங்கல் பண்டிகைக்கு அவர்கள் வாழ்த்து கூட சொல்வதில்லை// கேரளத்தின் தமிழக எல்லையில் உள்ள நான்கு மாவட்டத்திலும் பொங்கல் உள்பட ஒருசில தமிழ் பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறத ு. எதையும் முழுமையாக தெரியாமல் எழுதவேண்டாம். ஆகையால் தமிகத்திலும் உள்ள சிறுபான்மையினரி ன் பண்டிகைகளுக்கு விடுமுறை அழிப்பது ஒன்றும் தவறல்ல. அதேபோல் பொங்கலை கேரளாவில் கிராமங்களில் உள்ள பல மலையாளிகளும் நாம் செய்வது போல் படையல் செய்து கொண்டாடுகிறார்கள்.
//மேலும் ஒரே மாநிலத்தில் இரு அறுவடை திருநாள்கள் இருக்க முடியாது// அதுசரி ஓணம் பண்டிகை என்பது ஒன்றும் நமக்கு பொங்கலை போல அவர்களுக்கு அறுவடை திருநாள் அல்ல .அது அவர்களின் மன்னன் மகாபலி இறந்த பிறகு ஆண்டுக்கு ஒரு நாள் தன் மக்களை காணவரும் நாள் என்ற அர்த்தத்தில் கொண்டாடப்படுவது ...
Report to administrator
0 #24 kenaiyan 2012-06-21 15:24
"கேரளத்தின் தமிழக எல்லையில் உள்ள நான்கு மாவட்டத்திலும் பொங்கல் உள்பட ஒருசில தமிழ் பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறத ு." இது பொய்.
அதாவது விருப்பப்பட்டால ் சம்பளத்தூடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ளல ாம். (Restricted Holiday). தமிழகத்தில் ஓனத்துக்கு கொடுப்பது மாதிரி பொங்கலுக்கு பொது விடுமுறை கொடுக்க அவர்கள் கேனையர்கள் அல்ல. உன் திராவிட தலைவர்களை விட நீ பிராடு என தெரிகிறது. உன் தலைவன் முதலமைச்சராக இருந்த போது "நாங்கள் ஓனத்துக்கு தமிழகத்தில் பொது விடுமுறை அளித்துள்ளோம். அது போல் நீங்களும் பொங்கலுக்கு கேரளத்தில் பொது விடுமுறை கொடுங்கள்" என கேட்டார் தெரியுமா? அதுவும் கேரளத்தில் இருக்கும் தமிழர்கள் அங்கு வேண்டுகோள் விடுத்து அது ஏற்கப்படாமல் உன் தலைவனை அணுகி தொலைத்தார்கள். ஓனம் என்பது அறுவடை திருநாள் தான். சந்தேகம் இருந்தால் இணையத்தில் தேடிப்பார். உங்கள் திராவிட அரசியல் ஒழிந்தால் தான் தமிழர்களுக்கு விடிவு.
Report to administrator
0 #25 manoj 2012-07-01 13:01
Onam (Malayalam: ഓണം) is a Hindu festival celebrated by the people of Kerala, India.[1] The festival commemorates the Vamana avatar of Vishnu and the subsequent homecoming of the legendary Emperor Mahabali. It falls during the month of Chingam (August–Septemb er) and lasts for ten days. The festival is marked by various festivities, including intricate flower carpets, elaborate banquet lunches, snake boat races, Puli Kali, Kaikottikkali
Report to administrator
0 #26 kulothungan 2012-07-01 13:18
திராவிடரான பெரியாரின் களப்போராட்டங்கள ையும் அதன் விளைவுகளையும் ரத்த சோதனையில் உறுதி செய்யப்பட்ட சுத்த தமிழர்களின் களப்போராட்டங்கள ையும் அதன் விளைவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை உணரட்டும்..இவர் களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம் அய்யா மணி அவர்களே..
ஏனென்றால் இவர்கள் காகிதத்தை கரைவேட்டியாக்கி நாளைய முதல்வர் கனவில் திளைக்கிறார்கள் . இவர்களால் தமிழினத்திற்கு கருணாநிதி போன்று இன்னொரு துரோகி முதல்வராக வருவாரே தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படாது. ஆனால் இவர்கள் எழுதி கிழித்த காகிதங்களால் ஒரு பயன் உண்டு. ( அம்மா! பாப்பா ஆய் போய்டுச்சிம்மா! !)
Report to administrator
0 #27 Periyasamy 2012-07-06 15:12
Onam

Onam ( Malayalam: ഓണം) is an annual harvest festival, celebrated mainly in the Indian state of Kerala. It is the foremost festival among the cultural repertoire of Malayalees, and falls during the month of Chingam (August-Septemb er as per the Gregorian calendar), the first month of the Malayalam calendar and lasts for ten days. Though it is essentially a harvest festival of Malayalees, mythologically it is linked to Malayalee-Hindu folktales. Like many other religious festivals in India, Onam is celebrated by people of all religions .
Report to administrator
0 #28 பிரபு 2017-11-19 11:25
பெரியார் நீதிக்கட்சி தலைமையேர்க வைத்த நிபந்தனைகள் என்ன அதை கூறுங்கள் தோழர்களே மிகவும் அவசியம்.
Report to administrator

Add comment


Security code
Refresh