Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

பெரியார் முழக்கம்

தமிழ் மன்னர்கள் நடத்தியது மனுதர்ம அடிப்படை யிலான பார்ப்பன ஆட்சியே என்பதையும் மனு சாஸ்திரம் எரிக்கப்படவேண்டும் என்றும் மறைந்த பெரியாரியலாளர் வழக்கறிஞர் கரூர் பூ.அர. குப்புசாமி எழுதிய கட்டுரையை இன்றைய பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். அவர் 1985 இல் வெளியிட்ட ‘மன்னர்களும் மனுதர்மம்’ நூலில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.

நம் அப்பாவி மக்கள் ஏதோ மறைந்துபோன ஒரு நூலை - மனுதர்மத்தை - ஏன் இப்போது கொளுத்த வேண்டும் என்பதாக நினைக்கக்கூடும்.

ஆனால், இன்றைய சமூக அமைப்பு, நடை முறைகள், நம்பிக்கைகள், நல்லது கெட்டது பற்றிய உணர்வு, ஏன் ஊர் அமைப்புக்கூட தர்மசாத்திரங்கள் என்று சொல்லப்பட்ட பார்ப்பனிய ஏற்பாடுகளின் படி நாடாண்ட மன்னர்கள் பல நூற்றாண்டு கால மாக சமூகத்தின் மீது பலாத்காரமாகத் திணித்து நிலை நாட்டியவை என்பதை அவர்கள் அறிய மாட் டார்கள். நிலைநாட்டிவிட்ட பிறகு அவை இன்று இயல்பாகத் தோன்றுகின்றன - அவ்வளவு தான்.

சாமான்ய மக்கள்கூட ‘மனுநீதி தவறாத ஆட்சி’ என்ற சொற்றொடரைத் தங்கள் பேச்சில் பயன் படுத்துவதைக் காணலாம்.

மனுநீதிச் சோழன் கதை இக்கருத்தைப் பிரபலப்படுத்தவே பரப்பப்பட்டு வந்தது.

நாம் விடை காண வேண்டி விசயங்கள் ஏராளம்.

• இந்த நாட்டில் மட்டும் பிறப்பால் ஏற்றத் தாழ்வு ஏன்?

• இங்கு மட்டும் தீண்டாமை ஏன்?

• உடன்கட்டை ஏன்?

• நால்வருணம் ஏன்? அதற்குச் சட்ட சம்மதம் ஏன்?

• இன்று வரை (பகிரங்கமாக) இரத்தக் கலப்பு ஏற்பட மறுக்கும் சமூக அமைப்பு எப்படி வந்தது?

• சட்டப்படியான இந்துமதத் தலைவர்களான சங்கராச்சாரிகள் “தீண்டாமை என் பிறப்புரிமை” எனவும், “வருணாசிரம தருமத்தைக் காப்போம்” எனவும் சட்டவிரோதமாகவே பேசி வரவும், செயல் படவும் உரிமை எப்படி வந்தது? அவர்களின் தரிசனத்துக்கு; மாநில, மத்திய அமைச்சர்கள் பிரதானிகள் நத்திக்கிடக்க வேண்டிய அளவு ஆதிக்கம் அவர்களுக்கு எப்படித் தொடர்கிறது?

• கத்மாண்டுவில் (நேபாளம்) மத மாநாடு கூட்டி “இந்து மதத்தின் உயிர்க் கொள்கைகளான ‘கர்மம்’, ‘கர்ம பலன்’, ‘மறு பிறப்பு’ ஆகியவை களைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய தீர்மானம் போடும் திமிர்த் தண்டத் தன்மை இன்னும் எப்படித் தொடர்கிறது?

• நாத்திகப் பிரச்சாரம் சட்ட சம்பந்தம் இல்லாமல் இருப்பதேன்?

• மூடத்தனத்தின் மொத்தக் குத்தகைதாரர்களான சுவாமிகள், புட்டபர்த்திகள், மகேஷ் யோகிகள் மலியக் காரணம் என்ன?

• தேசியத் தலைவர்கள் எல்லாம், சோசியக் கும்பலின் சொல் கேட்டு ஆட்சி நடத்தும் அவலம் ஏன்?

• இந்திய அல்லது தமிழ்ச் சமுதாயம் ஒரு தேசிய சமூகமாக மலராமல் சாதிகளாகப் பிரிந்து சிதறுண்டு தவிக்கும் தன்மை ஏன்?

• கோடிக்கணக்கான மக்கள் தங்களை வாட்டும் வறுமையை இயல்பாக ஏற்றுக் கொண்டிருக்கும் இயற்கை விரோத மனநிலை ஏன்?

• தங்களைச் சுரண்டிக் கொழுக்கும் கொடியோர் களையே வணங்கும் அப்பாவித்தனம் மக்களிடையே நிலவக் காரணம் என்ன?

• மக்கள் தங்களை ஏய்ப்போருக்கே ஏவல் செய்யும் இளிச்சவாய்த்தனம் எப்படி வந்தது?

• வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும் வெற்றுச் சடங்குகளாக கோடானுகோடி மக்கள் வதியக் காரணம் என்ன?

• கஞ்சி குடிப்பதற்கிலார் - அம்மக்கள் அதன் காரணங்கள் எவை எனும் அறிவுமிலாச் சென்மங்களாகக் காலங் கழிக்கும் நிலை ஏன்?

இவற்றிற்கும் இவை போன்ற எண்ணிறந்த கேள்விகளுக்கும் விடை காண்பது ஒன்றும் சிரமம் இல்லை. கொஞ்சம் முயற்சித்து நம் வரலாறுகளை, நம் இலக்கியங்களை, வேதங்களுக்கு நியாயம் கற்பிக்கும் தத்துவங்களை, சமுதாய நடை முறைகளை, பழமொழி களை அன்றாட வாழ் வில் நடக்கும சடங்கு சம்பிரதாயங்களை... ‘இதைச் செய்; அதைச் செய்யாதே!’ எனப் பெரியவர்கள் இடும் கட்டளைகளை எல்லாம் சற்று உற்று நோக்கி ஆய்ந்து அறிந் தால் அனைவருக்கும் விடை கிடைக்கும்.

இன்றுள்ள சமூக அமைப்பு திடீரென ஏற்பட்டதல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூணூல் பூசாரிக் கூட்டமும், புவியாண்ட மன்னர்களும் கூட்டுச் சேர்ந்து செய்து, எதிர்ப்பாளர்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து சமூகத்தின் மீது திணித்து நடைமுறையாக்கிவிட்ட ஒன்று ஆகும்.

நம் மூளைக்குள் உள்ள எண்ணங்கள், இயல்புகள எல்லாம் பல நூறு தலைமுறைகளாக உள்ளே ஏற்றப்பட்டவை ஆகும்.

அத்தகு திட்டமிட்ட சதி முயற்சியின் பலனையே இன்று நாம் அனுபவிக்கிறோம். எனவே திட்டமிட்டு முயற்சிக்காமல் அவைகளை மாற்ற முடியாது.

பால்வினை நோயுள்ள பெற்றோர்களின் குழந்தைகள் பலவித நோய்களுக்கும், அவதிகளுக்கும் ஆளாவதுபோல், இன்றைய சமூகம் நேற்றைய சமுதாய தலைவர்களின் குற்றங்களின் பலனை அனுபவிக்கிறது.

நம் மன்னாதி மன்னன் எவனுக்கும் சட்டம் செய்யும் உரிமை இருந்ததில்லை. இது இந்திய அரசியல் கொள்கை. அவன் தர்ம சாஸ்திரங்களின் கட்டளைகளை சமூகத்தில் நிறைவேற்றும் ஒரு கருவி மட்டுமே. அண்ணா ‘சிவாஜி கண்ட இந்துராச்சியம்’ எப்படிப்பட்டதென்பதை விளக்கினார். ‘இந்து ராச்சியத்தில்’ எல்லா மன்னர்களும் சிவாஜிகளே! இநதப் பொது விதிக்குத் தமிழ் மன்னர்கள் மட்டும் விதிவிலக்கல்ல!

சங்கம் மருவிய காலத்தில் தமிழ் மக்கள் வைதீக மத நாகம் தீண்டாத நிலையில் இருந்தனர். மன்னர்கள் ஓரிருவர் மட்டும் ஆரியப் பார்ப்பனர் வலையில் விழுந்து வந்தனர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிகளும் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிகளும் பெருகத் தொடங்கினர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியர்கள் அருகத் தொடங்கினர். ‘அறவிலை வணிகன் ஆய் அலன்’ என மார்தட்டிய ‘ஆய்’ போன்ற குறுநில மன்னர்கள் குறைந்து வந்தனர். சேரமான் பெருமாள் நாயனார்கள் பெருகினார்கள். மெல்ல மெல்ல இம்மன்னர்கள் துணையோடு புரோகிதக் கூட்டம் மக்களின் அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மதம் சார்ந்ததாக மாற்றுவதில் வெற்றிப்பெற்று வந்தனர். எதிர்ப்புகள் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப் பட்டன. குரூரமான கழுவேற்றம் அன்றாட நிகழ்ச்சியாகியது. மாற்றுக் கருத்தினர் நூல்கள் நீரிலும் நெருப்பிலும் இடப்பட்டு அழிக்கப்பட்டன. மெல்லத் தமிழ்ச் சமுதாயம் ஆரிய மத கருத்துக்கள்பால் ஆட்கொள்ளப்பட்டு விட்டது.

இவ்வளவுக்கும் மத்தியில் கரூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்டுவந்த இரும்பொறை மன்னர் வம்சத்தார் மட்டும் சமணத்தை ஆதரித்து வந்த அரிய காட்சியை கி.பி.3 ஆம் நூற்றாண்டு வரை பார்க்கிறோம்.

பின்னர், தமிழகத்தை ஆண்ட மாமன்னர் முதல் குறுநில அதிபர் வரை அனைவருக்கும் இடையே மனு தர்மத்தை மக்கள் மத்தியில் நிலைநாட்டுவதிலே ஒருவித வெறித்தனமான போட்டியே இடை விடாமல் இருந்து வந்திருக்கிறது. அவர்களின் செப்பேடுகளும் மெய்க்கீர்த்திகளும் இந்தச் செய்தியை விரித்துரைக்கின்றன.

• மாரவர்மன் சுந்தரபாண்டியன் ‘மனுநெறி தலைப்ப மணிமுடி சூடி’ ஆள்கிறான் என அவன் மெய்க்கீர்த்தி பறைசாற்றுகிறது. (பதிவு செய்யப்பட்ட ஆவணம்) மேலும்,

“நால்வகை வேதமும் நவின்றுடன் வளர

அய்வகை வேள்வியும் செய்வினை இயற்ற

அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ” -

ஆண்டிருக்கிறான் அவன்; விட்டானா அதோடு?

சமயமும் நீதியும் தருமமும் தழைக்க...

கடவுள் வேதியர் அருந்தொழில் வேள்விச்

செங்கனல் வளர்ப்ப!....

தன் ஆட்சியை நடத்தி இருக்கிறான்.

• குலசேகரப் பாண்டியனோ, “முத்தமிழும் மனு நூலும் நான்மறை முழுதும் எத்தவச் சமயமும் இனிதுடன் விளங்க” இறைமாட்சி நடத்தி இருக்கிறான்.

• சோழர்கள் என்ன பாண்டியர்களுக்கு இளைத்தவர்களா?

“ஒப்பரிய மறைநூலும் உரை திறம்பா மனுநூலும்

செப்பரிய வடகலையும் தென்கலையும் தலையெடுப்ப

நீதிதரு குலநான்கும் நிலைநான்கும் நிலைநிற்ப

ஆதியுகம் குடிபுகுத அறு சமயம் தழைத்தோங்க”

மூன்றாம் இராசராச சோழன் ஆட்சி நடத்தியிருக்கிறான்.

• முதலாம் இராசாதிராசன் “விளங்கு மனுநெறி அசுவமேதஞ் செய்து” பரிபாலனஞ் செய்திருக் கிறான். இராச மகேந்திர சோழனோ, “தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய”மன்னனாகத் தன்னை மார்த்தட்டி அறிவித்துக் கொள்கிறான்.

முதலாம் குலோத்துங்கன் ‘மனுவாறு பெருக’ மக்களை ஆள்வதாக மகிழ்ச்சியோடு அறிவிக்கிறான். விக்கிரமச் சோழனோ “மனுநெறி வளர்த்து” நாடாள்வதாக நாப்பறை அடிக்கிறான். இரண்டாம் குலோத்துங்கனோ ‘மனுவாறு விளங்க’ செங்கோல் செலுத்துவதாகச் செம்மாந்து கூறுகிறான். இரண் டாம் இராசராசன் “மனுவாணை தனி நடாத்தி” மக்களைப் புரந்ததாகப் பெருமை கொள்கிறான். இரண்டாம் இராசாதிராசன் “அமைவில்லா மனுவொருக்க ஆதியம் பாடி நிலைநிற்க” அகிலத்தை ஆண்டதாக அறைந்து கூறுகிறான். மூன்றாம் குலோத்துங்கன் “மனுவின் நெறி தழைத்தோங்க”, “செயல் வாய்ந்த மனுநூலும்” - பெருக கோ லோச்சினான் என அவன் மெய்க்கீர்த்தி விளக்குகிறது. மூன்றாம் இராசராசன் “பொருவில் மனுநெறி வாழ பொன் மகுடம் கவித்தருளி” புரோகிதக் கூட்டத்திற்கு பொழுதளந்து சேவை செய்திருக்கிறான்.

இப்படி ஆயிரமாயிரம் அரசாணைக் கல் வெட்டுக்களை நாடெங்கும் பார்க்கக் காணலாம்.

‘இதில் அரசியல்’ பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என அந்த மன்னாதி மன்னர்களை மருள வைத்திருக்கிறார்கள் சனாதினிகள் (பழமைவாதிகள்).

வேதபுரியினர் இட்ட கட்டளைப்படி அவரவர்க்கு ஒரு குலத்தொழில் விதித்து அதை மீறுவோர்க்கு கொடும் தண்டனையும் வழங்கி உள்ளார்கள். சாதி ஆச்சாரத்தை நிலைநிறுத்தும் பொறுப்பை பிரமதேய (அக்கிரகார) சதுர்வேதி மங்களங்களின் ஊர்ச் சபைகளே ஏற்றிருந்தன. பார்ப்பனர் அக்ரகாரத்தில் தனித்து வாழ்வதை அரசர்கள் பெருமையோடு காத்து வந்தனர். அவர்களுக்கு மானியங்களாக இறையிலி நிலங்கள்; பாரத விருத்தி, பட்ட விருத்தி, வேத விருத்தி, புராண விருத்தி, தேவதாயம் - இப்படி எத்தனையோ பெயர்களில் அவர்களுக்கு நாட்டிலுள்ள நல்ல நிலங்களை எல்லாம் தாரை வார்த்தார்கள். 

இடையில் வந்த ‘களப்பிரர்கள்’ அந்த நிலங்களை பிடுங்கி உழவர்க்கு கொடுத்தனர். ஆனால், அவர்களை ஒழித்துக் கட்டி மீண்டும் வந்த மனுநீதி தவறா தமிழ் மன்னர்கள் திரும்பவும் உழவர்களிடமிருந்த நிலங்களைப் பார்ப்பனரிடமே சேர்த்து விட்டனர் என்பதற்கும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

கிராம சபையாரும் அரசு அதிகாரிகளும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்க நேரும்போது எழும் அய்யப்பாடுகளை சாத்திரங்களின் வல்லுன ரான பட்டர் பெருமக்களிடம் கேட்டுத் தெளிந்து அவர்களின் கருத்திற்கேற்பவே தீர்ப்பு வழங்கி வந்தனர்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 viyasan 2012-07-27 16:28
அன்றைய காலகட்டத்தில் தமிழ்மன்னர்கள் தவறிழைத்திருக்க லாம். அதை இன்று பெரிதுபடுத்தி வசைபாடுவதால் யாருக்கு என்ன இலாபம். அவர்கள் செய்த நல்ல விடயங்களைப் பார்ப்போம். பார்ப்பனர்களை ஆதரித்த அதே தமிழ்மன்னர்கள் தான் தமிழ்ப்புலவர்கள ையும் ஆதரித்தனர், தமிழை வளர்த்தனர், தமிழுக்காக மற்ற நாடுகளின் மீது படையுமெடுத்தனர் . அவர்களில்லாது விட்டால் தமிழ் அழிந்திருக்கும் . தமிழர்களின் சிற்பக்கலையை உலகுக்கு எடுத்துக்காட்டு ம் பழம்பெரும் கோயில்கள் எங்களுக்குக் கிடைத்திருக்காத ு. தமிழரசர்கள் மட்டுமல்ல, பல மேற்குநாட்டு மன்னர்கள் கூட தீர்க்கதரிசனமற் ற, தவறான முடிவுகளை எடுத்துள்ளனர், ஆனால் அந்நாட்டு மக்கள் அவர்களை இன்றும் தூற்றுவதில்லை. அது யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போடுவது போன்றது. தமிழரசர்கள் பரந்த தமிழ்மண்ணைத் தான் தமிழ்நாட்டுத் தமிழர்களின் கையில் விட்டுச் சென்றார்கள், அவற்றை மற்ற மாநிலங்கள் புத்திசாலித்தனம ாக கபளீகரம் செய்த போது, பாலக்காடும், பீர்மேடும், தேவிகுளமும், இந்தியாவில் தானிருக்கிறதென் று தமிழர்களை அடக்கிய காமராசரும், தமிழர்கள் வாழ்ந்த காவிரிப்படுகையை க் கன்னடர்கள் விழுங்கிய போது மெளனம் சாதித்த பெரியாரையும், ஞே என்று எருமை மாடு மாதிரிப் பார்த்துக் கொண்டிருந்த, தமிழ்நாட்டுத் தமிழர்கள் பழந்தமிழ் மன்னர்களிடம் மட்டும் குற்றம் காண்பது முட்டாள் தனமாகும். சோழர்களும் ஏனைய தமிழரசர்களும் பார்ப்பனர்களுக் குச் சலுகைகள் செய்ததன் முதல் காரணம் தமிழர்களின் வெள்ளைத் தோல் ஆசையெனவும் கூறுவர். இக்காலத் தமிழர்கள் மட்டும் அதற்குச் சளைத்தவர்களா? நாங்கள் தமிழர்கள் ஓன்றில் கறுப்பாக அல்லது மண்ணிறமாக, அதையும் மிஞ்சினால் மாநிறமாகத் தானிருக்க வேண்டுமல்லவா? அது தான் எங்களின் உண்மையான நிறம், ஆனால் அட்டைக் கரியாக இருக்கும் தமிழன் கூட வெள்ளைத் தோலுள்ள பெண்தான் வேண்டுமென அடம்பிடிப்பதில் லையா? அது போல் தான் இதுவும். இன்றும் கறுப்பு நிறமுள்ள எந்த தமிழனுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆதரவு கொடுத்திருக்கிற ார்கள். திராவிடத் தலைவர்களும், அவர்களின் வாரிசுகளும் கூட, பணம் வந்ததும் வெள்ளைத் தோலுள்ள பார்ப்பனப் பெண்களின் பின்னால் தான் ஒடுகிறார்கள், இந்த லட்சணத்தில் பழந்தமிழரசர்களி ல் குற்றம் காண்பதும், அதை புத்தகமாக வெளியிடுவதும், அதற்கும் சிலர் விரிவுரை எழுதுவதும் வெறும் அபத்தம்.
Report to administrator
0 #2 viyasan 2012-07-27 16:31
ஐயா, கரூர் பூ.அர.குப்புசாம ி அவர்களே,

மனுநீதி என்ற தமிழ்ச்சொல்லுக் கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் எங்கேயோ உதைக்கிறதே. மனுநீதி என்ற தமிழ்ச்சொல் உண்மையில் மனுசாத்திரத்தைக ் குறிக்கிறதா, அல்லது மானுடநீதி அதாவது மானிடர்களை தாழ்வுபாடில்லாம ல் நடத்தும் நீதியென்றும் கொள்ளலாமல்லவா. உதாரணமாக திருவாரூரைத் தலைநகராக ஆண்ட சிபிச்சக்கரவர்த ்தி, மனுநீதிகண்ட சோழன் என அழைக்கப்பட்டதன் காரணம் அவர் ஒரு பசுவின் கன்றை தனது தேர்ச்சில்லால் நசித்துக் கொன்ற தனது மகனை, அதாவது அந்த நாட்டின் இளவரசனையே, பசு மணியையடித்து, தனது துன்பத்தைக் கூறியவுடன் அதே தேர்க்காலால் நசித்துக் கொன்றதால் தானே தவிர அவர் பார்ப்ப்பனர்களி ன் வருணாசிரமத்தின் படி சாதிப்பாகுபாட்ட ை தனது நாட்டில் நடைமுறைப்படுத்த ியதால் அல்ல. அதனால் மனுநீதி கண்ட சோழனின் வழிவந்த தமிழரசர்கள், மனுநீதி, மனுதர்மம் என்ற சொற்களைத் தமது கல்வெட்டுக்களில ் மானிட நீதியை, உயிர்கள் எல்லாவற்றையும் சமமாகக் கொண்டு நீதி வழுவாமல் ஆண்டதாகவும் பொருள் கொள்ளலாமல்லவா?
Report to administrator
0 #3 ஆறுமுகம் 2012-07-27 16:31
பிறப்பால் ஏற்றதாழ்வு இந்த நாட்டில் மட்டுமே உள்ளது என்பதற்க்கு என்ன ஆதராரம் கட்டுரையாளர் உலக அளவில் சுற்றுப்பயணம் மேற்ககொண்டு அறிந்தாரா? ஆப்பிரிக்க நாடுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஏற்றதாழ்வு இருந்தவருகிறது. அங்கு நீக்ரோக்கள் சமமாக மதிக்கப்படுவதில ்லை. மத்திய ஆசிய நாடுகளிலும் உண்டு. ஹிட்லர் யூதர்களை சமமாகவாக நடத்தினால். அரபுநாடுகளில் அடிமைகள் வைத்திருந்ததை குரானில் கூட காணலாம். அடிமைகள் ஒரு போதும் சமமாக நடத்தப்பட்டதில்லையே.

பிறநாடுகாளில் தீண்டாமை இல்லை ‌என்று எவ்வாறு அருதியிட்டு கூறமுடிகிறது ஏட்டுப்புழவானதா லா? பிறநாடுகளில் மட்டுமல்ல நாகரீகத்தில் திலைத்தவர்கள் என்று கட்டுரையாளரால் ஒதுக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் தீண்டாமையை பின்பற்றியவர்கள ் தான். காந்தியை ரயில் வண்டியில் இருந்து தள்ளி விட்ட சம்பவர் தீண்டாமையின் வெளிப்பாடே. இதை இந்தியர்கள் அவர்களுக்கு தரவில்லை ஆங்கிலேயர்கள் ஒருபோதும் தீண்டாமையை கைவிடவில்லையே.

தீண்டாமை என்பது இங்கு மட்டும் இல்லையே ... கட்டுரையாளர் உலகம் முழுவதும் சுற்றிவந்தவரா?

உடன்கட்டை என்பது இந்தியா முழுவதும் இருந்த பழக்கம் அல்ல அது ஒரு சில குறிபிட்ட பகுதியில் குறிப்பிட்ட சமுத்தினரிடம் மட்டுமிருந்த பழக்கமாகும். மதம் அதை கட்டாயப்படுத்தவில்லை.

வருணம் அதிகாரத்தில் இருந்தவர்களாலும ் அ‌தனோடு நெருக்கம் கொண்டவர்களாலும் உருவாக்கப்பட்டத ு. இப்போது கூட தாழ்தப்பட்ட பிற்படுத்தபட்ட முற்படுத்தப்பட் ட என்ற ஏற்றதாழ்வுகளை குறிக்கும் வகுப்புகளை உருவாக்கியது யார்? அது மதமா?

இறத்த கலப்பு கட்டாயம் ஏற்பட்டே ஆகவேண்டும் என்று கட்டுரையாளர் துடிப்பதேன். அது அவரவர் விருப்பத்திற்க் குட்டது. ஒவ்வொரு சமுகமும் தங்களுக்கென்று சில பழக்கவழங்கங்களை மரபு வழி கலாச்சரமாகவும் பண்பாடாகவும் பின்பற்றி வருகிறது. தங்களுக்கு ஒத்துவராத வழிபாடுமுறை உணவுபழக்கவழக்கம ் மொழி இனம் காலாச்சராம் மற்றும் பண்பாடு பழக்க வழங்கங்களை கொண்டவர்களுடன் கலப்பை தவிப்பது என்பது உலகம் முழுவதும் உள்ளது. ஒருபிரிவில் இருந்து மற்ற பிரிவு பழிவாங்கவே கட்டாய ரத்த கலப்பை ஏற்படுத்தியதும் வரலாற்றில் உள்ளது. அதனால் போர் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.

ஆன்மீகத்தில் உள்ளது தீண்டாமை இல்லை அவை தீண்டாமைக்குறிய தன்மைகளுடன் கடைபிடிக்ப்படுக ிறதே அத்தகைய தோற்றத்திற்க்கு காரணம். துறவு ‌மேற்கொள்வோர் உடல் இச்சைகளுக்கு அப்பாற்பட்டு இருக்க தீண்டல்கள் தவிர்கவேண்டியதா யிற்று. அதுவே சமுக பழக்கமாகவும் ஆயிற்று இன்றும் உயர்நிலையில் உள்ளவர்களை சாமானியர்கள் (எந்த சாதியானலும் மதமானாலும்) எளிதில் அணுக முடியாது என்பதை காண்க. போப் ஆண்டவரை கட்டுரையாளர் தீண்டமுடிந்ததா?

இந்தியாவில் இஸ்லாமிய மாநாடு நடக்கும்போது நோபாளத்தில் மாநாடு நடத்துவது தங்கள் எப்படி திமிராகபட்டது கட்டுரையாளர் தயவில் அவர்கள் வாழ்க்கை நடத்துகின்றனரா? இந்து மத்தில் உயிர் கொள்கை என்று எதுவும் கிடையாது. பிற மதங்களுக்கு என்று ஒரு புத்தகம் இருக்கும் ஆனால் இந்து மத்திற்க்கென்று அப்படி ஏதும் இல்லை என்பதை கட்டுரையாளர் மறந்தது ஏனோ? அல்லது மறைப்பது ஏனோ?
Report to administrator
0 #4 ஷாலி 2012-07-28 11:40
“நாம் தமிழர்’களின் பார்ப்பன விசுவாசத்தை அவர்களின் ஆவணமே அழகிய சான்றாக விளக்கும்போது, அதை மீண்டும் மீண்டும் நிரூபிக்க சீமான் துதிபாடிகள் துடிக்கும் அவசியமென்ன? //மனுநீதி,மனுதர ்மம் என்ற சொற்க்களை தமது கல்வெட்டுக்களில ் மானுட நீதியை,உயிர்கள் எல்லாவற்றையும் சமமாகக்கொண்டு நீதி வழுவாமல் ஆண்டதாகவும் பொருள் கொள்ளலாமல்லவா.. .?// கொள்ளலாம்,இதுபோ ல் கருஞ்சோழன் சீமான் ஆவணத்திலுள்ள ஆரியன் என்றால் சீரியன் என்ற உயர்ந்தோன், ஆய்வாளன், இளைஞன் என்று புகழ்ந்து பூமாலை சூடுவதையும் ஞே என்று அவரது அடிப்பொடிகள் பார்த்துக்கொண்ட ும் இருக்கலாம். ஒன்றும் தவறில்லை
Report to administrator
0 #5 viyasan 2012-07-29 00:34
//இதுபோல் கருஞ்சோழன் சீமான் ஆவணத்திலுள்ள ஆரியன் என்றால் சீரியன் என்ற உயர்ந்தோன், ஆய்வாளன், இளைஞன்.//
நாம் தமிழர் ஆவணத்தில் 'ஆரியன்' என்ற பதத்துக்குக் கொடுக்கப்பட்டிர ுக்கும் கருத்து விளக்கம் சரியானதே என நிரூபிக்க நிறைய ஆதாரங்கள் உண்டு. நாம் தமிழர் ஆவணம் 'ஆரியன்' என்ற பதத்தின் உண்மையான கருத்தைத் தான் குறிப்பிடுகிறது , ஆவணம் அவ்வாறு உண்மையைக் குறிப்பிட்டதால் , சீமானும், நாம் தமிழர் கட்சியினரும், அவர்களின் ஆதரவாளர்களும், இக்காலத்தில் ஆரியர்கள் என்றழைக்கப்படும ் பார்ப்பனர்களின் விசிறிகள் போலவும், பார்ப்பனர்களின் வருணாசிரமத்தை ஆதரிப்பவர்கள் போலவும் பரப்புரை செய்வதும், ஓடுக்கப்பட்ட தமிழர்களைத் தூண்டி விடுவதும், தமிழரல்லாத திராவிடர்களின் குள்ளநரித்தனம். உதாரணமாக யாழ்ப்பாணத்தரசர ்கள் அனைவரும் ஆரியச்சக்கரவர்த ்திகள் என்ற பட்டப் பெயரைக் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் யாருமே பார்ப்பனர்களுமல ்ல, வட இந்தியர்களுமல்ல , அதிலிருந்தே ஆரியன் என்ற பதம் தமிழில் சீரியன் அல்லது உயர்ந்தோன் என்பதைக் குறிக்கிறதென்பத ு தெள்ளத் தெளிவாகிறதல்லவா ?
Report to administrator
0 #6 viyasan 2012-07-29 00:40
REAL MEANING OF THE WORD `ARYA`
In 1853, Max Muller introduced the word `Arya` into the English and European usage as applying to a racial and linguistic group when propounding the Aryan Racial theory. However, in 1888, he himself refuted his own theory and wrote:

I have declared again and again that if I say Aryas, I mean neither blood nor bones, nor hair, nor skull; I mean simply those who speak an Aryan language...to me an ethnologist who speaks of Aryan race, Aryan blood, Aryan eyes and hair, is as great a sinner as a linguist who speaks of a dolichocephalic dictionary or a brachycephalic grammar.

(Max Muller, Biographies of Words and the Home of the Aryas, 1888, pg 120)In Vedic Literature, the word Arya is nowhere defined in connection with either race or language. Instead it refers to: gentleman, good-natured, righteous person, noble-man, and is often used like `Sir` or `Shree` before the name of a person like Aryaputra, Aryakanya, etc.

In Ramayan (Valmiki), Rama is described as an Arya in the following words (Aryah sarvasamashchai vah sadaivpriyadars han ) : Arya - who cared for the equality to all and was dear to everyone.

Etymologically, according to Max Muller, the word Arya was derived from ar- (ar-), "plough, to cultivate". Therefore, Arya means - "cultivator" agriculturer (civilized sedentary, as opposed to nomads and hunter-gatherer s), landlord;V.S. Apte`s Sanskrit-Englis h dictionary relates the word Arya to the root r- (r-) to which a prefix a (a) has been appended to give a negating meaning. And therefore the meaning of Arya is given as "excellent, best", followed by "respectable" and as a noun, "master, lord, worthy, honorable, excellent", upholder of Arya values, and further: teacher, employer, master, father-in-law, friend, Buddha.

So nowhere either in the religious scriptures or by tradition the word Arya denotes a race or a language. There are only four primary races, namely, Caucasian, the Mongolian, the Australians and the Negroid. Both the Aryans and Dravidians are related branches of the Caucasian race generally placed in the same Mediterranean sub-branch. The difference between the so-called Aryans of the north and the Dravidians of the south or other communities of Indian subcontinent is not a racial type. Biologically all are the same Caucasian type, only when closer to the equator the skin gets darker, and under the influence of constant heat the bodily frame tends to get a little smaller. And these differences can not be the basis of two altogether different races. Similar differences one can observe even more distinctly among the people of pure Caucasian white race of Europe. Caucasian can be of any color ranging from pure white to almost pure black, with every shade of brown in between. Similarly, the Mongolian race is not yellow. Many Chinese have skin whiter than many so-called Caucasians. Further, a recent landmark global study in population genetics by a team of internationally reputed scientists over50 years (The History and Geography of Human Genes, by Luca Cavalli-Sforza, Paolo Menozzi and Alberto Piazza, Princeton University Press) reveals that the people habituated in the Indian subcontinent and nearby including Europe, all belong to one single race of Caucasian type. According to this study, there is essentially, and has been no difference racially between north Indians and the so-called Dravidian South Indians. The racial composition has remained almost the same for millennia. This study also confirms that there is no race called as an Aryan race.


Source: Prof. Dinesh Agrawal (Penn State University, USA)
Report to administrator
0 #7 sundaram 2012-07-29 00:41
பசுவின் கன்றை கொன்றதற்காகத்தா ன் அரசன் தன் மகனை பார்பனனின் ஆலொசனை படி கொன்றான்.ஒரு வேலை எருமையின் கன்றை கொன்றீருந்தால் அரசன் என்ன செய்திருப்பான். எருமை சூத்திரனின் விலங்காச்சே
Report to administrator
0 #8 Pradeepan 2012-08-03 22:31
விலங்குக்காக மனிதனை கொள்வதுதான் மனு நீதியா.? என்ன ஒரு அறிவாளியான அரசன்.
Report to administrator
0 #9 muruganandam 2012-08-05 00:00
உண்மையில் திரு.பூ.அர.குப் புசாமி அவரது ஆரம்பகால திராவிடர் கழக பற்றின் பால் எழுதிய கட்டுரை ஆகும். ஆனால் அவரே இறக்கும் தருவாயில் தனித்தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தியதுட ன், திராவிடத்தாரின் சூழ்ச்சிகளை கண்டு ரொம்பவே கொதிப்படைந்துதா ன் போனார். அவரின் உடல் நலக் குறைபாடே அவரை தொடர்ந்து செயல்பட விடாமல் தடுத்தது. ஒருவேளை அவர் நலமுடன் இருந்திருந்தால் இந்த திராவிட வந்தேறிகளின் முகத்திரையை கிழித்தெறியும் வகையில் எழுதியிருப்பார் . அவர் வாழ்ந்த காலத்தில் திராவிடக் கருத்துகளை ஏற்று தமிழ் மன்னர்களை வசைபாடியிருந்தா லும் இறக்கும் தருவாயில் அவர் திராவிடனாக சாகவில்லை. இது மறுக்க முடியாத உண்மை.- கருவை முருகு
Report to administrator
0 #10 raj pu 2012-09-15 23:35
அய்யா கருவை முருகு ஆக நீங்கள் தனித்தமிழ்னாடு கோரிக்கையை யேற்று திரு. பூ. அர. குப்புசாமி போல வலியுறுத்துவீர் கள் என்று நம்புகிறோம்.
Report to administrator
0 #11 raj pu 2012-09-15 23:37
//There are only four primary races, namely, Caucasian, the Mongolian, the Australians and the Negroid. Both the Aryans and Dravidians are related branches of the Caucasian race generally placed in the same Mediterranean sub-branch. The difference between the so-called Aryans of the north and the Dravidians of the south or other communities of Indian subcontinent is not a racial type. Biologically all are the same Caucasian type, only when closer to the equator the skin gets darker, and under the influence of constant heat the bodily frame tends to get a little smaller. And these differences can not be the basis of two altogether different races. Similar differences one can observe even more distinctly among the people of pure Caucasian white race of Europe. Caucasian can be of any color ranging from pure white to almost pure black, with every shade of brown in between.//
Viyasen gave an elaborate description in which he admits the aryans are of the north and the dravidians are of the south.
Report to administrator

Add comment


Security code
Refresh