தனது இளமைக் காலம் முதல் பெரியார் கொள்கையை ஏற்று திராவிடர் கழகத்தில் இணைந்து தென்னாற்காடு மாவட்டத்தின் தலைவராகவும், செயலாளராகவும், பொருளாளராகவும் பின்னர்தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் மாநில பொருளாளராகவும் இயக்க  பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர் காட்டுசாகை வை. குப்புசாமி, கடந்த 7.2.2011 திங்களன்று இரவு 10.15 மணிக்கு மறைவுற்றார். 29.1.2011 அன்று பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வடலூரில் நடைபெற்ற முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது இறுதிக் காலம் வரை கொள்கை வழி வாழ்ந்தவர் காட்டுசாகை வை. குப்புசாமி .

கடலூர் சுப்பிரமணியபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் 8.2.2011 அன்று 3 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வே. குழந்தைவேலு, புதுவை மாநில கழகத் தலைவர் லோகு அய்யப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் திருமாறன், ம.தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் வந்தியத்தேவன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தி. திருமால்வளவன், ம.தி.மு.க. கடலூர் மாவட்டச் செயலாளர் என். ராமலிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அரசியல் குழு உறுப்பினர் தடா. முருகேசன், பெரியார் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி, தி.மு.கழக பொதுக் குழு உறுப்பினர் ஜி. பாஸ்கரன், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்  ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். 

கூட்டத்தை திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தொகுத்து நடத்தினார். இறுதியாக அவரது மகன் பெல்கு. இராஜன், அவரது பொது வாழ்க்கைக் குறித்து நினைவுகூர்ந்தார்.

பிறகு, காட்டுசாகை வை. குப்புசாமி அவர்களின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் புதுவை மாநிலத்திலிருந்தும் கழகத் தோழர்களும், கடலூர் மாவட்டத்தின் அனைத்து அரசியல் கட்சியை சார்ந்த முக்கிய பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர். 

நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்வு பிப்.20 ஆம் தேதி கடலூர் சுப்ரமணியபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நிகழ்கிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தி.மு.க. வெளியீட்டு பிரிவு செயலாளர் திருச்சி செல்வேந்திரன் உருவப் படத்தைத் திறந்து வைக்கிறார்.

Pin It