உத்தரகான்ட் மாநிலம் அரித்துவாரில் ஸ்ரீராம் சர்மா என்ற பார்ப்பனர் நடத்திய யாகத்தில் பங்கேற்கச் சென்ற பக்தர்கள் 16 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுபோல் கோயில் மத விழாக்களில் ‘பகவானை’ நம்பி பங்கேற்கச் சென்ற பக்தர்கள் மரணத்தைத் தழுவிய நிகழ்வுகள் ஏராளம் உண்டு. கடவுளுக்கு தன்னை நாடி வரும் பக்தர்களையே காப்பாற்றும் சக்தி இல்லை என்ற உண்மையை இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.

2011, ஜன. 14 - சபரிமலை, புல்மேட்டில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 104 பேர் பலி; 60 பேர் காயம்.

2010, மார்ச் 4 - உத்தரபிரதேசம் மாநிலம் பிரதாப்கார்த் எனும் இடத்தில், கிரிபலு மகாராஜா ஆசிரமத்தில் உணவு வழங்கும்போது நெரிசல் ஏற்பட்டது. இதில் 63 பேர் பலி; 15 பேர் காயம்.

2008, செப். 30 - ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரிலுள்ள சாமுண்டா தேவி கோவில் விழாவின்போது, குண்டு வைக்கப்பட்டுள்ளது என புரளி கிளப்பப்பட்டது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் 250 பேர் பலி; 60 பேர் காயம்.

2008, ஆக. 3 - இமாச்சல பிரதேசம் நைனா தேவி கோவிலில் வெடி குண்டு புரளி கிளப்பப்பட்டது. இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 150 பேர் பலி; 230 பேர் காயம்.

2008, ஜூலை - ஒரிசா மாநிலம், பூரி ஜெகன்நாதர் தேரோட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில், 6; பேர் பலி; 12 பேர் காயம்.

2008, மார்ச் 27 - மத்திய பிரதேச மாநிலம், கரிலா கிராமத்திலுள்ள கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 8 பேர் பலி; 10 பேர் காயம்.

2008, ஜனவரி - ஆந்திராவிலுள்ள துர்கா மல்லேஸ்வரா கோவில் விழாவின் போது நெரிசலில் சிக்கி 5 பேர் பலி.

2007, அக்டோபர் - குஜராத் மாநிலம் பவகாத் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலி.

2006, நவம்பர் - பூரி ஜெகன்னாதர் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி.

2005, ஜனவரி - மகாராட்டிரா மாநிலம், மந்தர் தேவி கோவில் திருவிழாவின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 340 பேர் பலி.

2003, ஆகஸ்ட் - நரசிக்கில் நடந்த கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலிட; 125 பேர் காயம்.

1999, ஜன. 14 - சபரிமலை பம்பை நதி கேம்ப் அருகில் ஏற்பட்ட நெரிசலில் 50 பேர் பலி.

- கடவுளை நம்பிச் செல்லும் பக்தர்களே! உங்களைக் காப்பாற்றும் சக்தி அந்தக் கடவுளுக்கே இல்லையே! சிந்திக்க வேண்டாமா?