3 தமிழர் உயிர் காக்க தனது உயிரை உயிர்க் கொடையாக வழங்கிய தோழர் செங்கொடி நினைவேந்தல் கூட்டம் காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் 24.9.2011; மாலை 5 மணியள வில் சென்னை இராயப்பேட்டை ஹேமமாலினி திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்வுகள் உருக்கமாகவும், உணர்வாகவும், இதயத்தை அழுத்தும் துயரத்துடனும் நடந்தன. காஞ்சி மக்கள் மன்ற கலைஞர்கள் பறை இசை மூலம் தங்கள் குழுவில் இது நாள் வரை இணைந்து பறையடித்த செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத் தினர்.

தொடர்ந்து எழுச்சியூட்டும் ஈழ விடுதலை பாடல்களை காஞ்சி மக்கள் மன்றக் கலைக் குழுவினர் பாடினர். மக்கள் மன்றத் தோழர் மேகலா, வரவேற்புரையாற்றினார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மய்ய அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத் தூர் மணி, செங்கொடியின் படத்தைத் திறந்து வைத்தார். பழ. நெடுமாறன், டி.எஸ்.எஸ். மணி, ஜான் பாண்டியன், அற்புதம்மாள், வழக்கறிஞர் பார் வேந்தன், தியாகு, மருத்துவர் கிருட்டிணசாமி, வைகோ ஆகியோர் உரையாற்றினர். காஞ்சி மக்கள் மன்றத் தோழர் மகேஷ், செங்கொடி மறைந்த துயரத்திலிருந்து தாங்கள் மீளாதுள்ள துயரச் சூழலை நினைவுகூர்ந்தார். காஞ்சி மக்கள் மன்றத்தின் - தோழர்கள் வாழும் இல்லம் - மக்களின் உழைப்பால் உருவானதுதான் என்று களங்கம் கற்பிக்கும் கயமையாளர் களுக்கு பதிலளித்தார்.

செங்கொடி வீர மரணத்தைத் தொடர்ந்து தங்களோடு கூட்டு சமூக வாழ்க்கையில் பயணிக் கும் தோழியர்களின் பெற்றோர்கள், “எங்கள் பிள்ளைகள் இனி இறுதி காலம் வரை காஞ்சி மக்கள் மன்றத்தில் தான் இருப்பார்கள்” என்று கூறியது, புண்பட்டுக் கிடந்த எங்கள் இதயங் களுக்கு மருந்து போல் அமைந்து, ஆறுதலைத் தந்தது என்று தழுதழுக்க பேசிய மகேஷ், செங்கொடி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் ஒன்றை, மக்கள் ஆதர வுடன் காஞ்சி மன்றம் அமைக்கும் என்று அறிவித்தார். கூட்டத்தில் உண்டியல் ஏந்தி வசூலிக்கப்பட்ட நிதி, செங்கொடி நினைவு மண்டபப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப் படும் என்றார். செங்கொடி கலை விழாக்களில் பங்கேற்று நடனமாடிய காட்சிகளும், செங்கொடி இறுதி ஊர்வலக் காட்சிகளும் மேடையில் திரையிடப்பட்டன. செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தும் பாடலை தோழர்கள் மேகலா, மகா, உருக்க முடன் பாடினர். செங்கொடி மிகவும் விரும்பி கேட்கக்கூடிய, அவர் முதன் முதலாக பாடிய பாடலை தோழர் மகா பாடினார். ஈழப் போர்க்களத்தில் ஒரு பெண் புலி, தனது தாய்க்கு எழுதிய கடிதமே அந்தப் பாடல்.

செங்கொடிக்கு கலைப் பயிற்சிகள் தந்த, அவரது ஆசிரியர் செங் கொடிக்கு வீரவணக்கம் செலுத்தி எழுதிய பாடலை, தோழர்கள் பாடினர். மக்கள் மன்றத் தோழர் மகா நன்றி கூற, நிகழ்ச்சி இரவு 10 மணி யளவில் நிறைவடைந்தது. காஞ்சி மக்கள் மன்றம் தொண்டாற்றும் கிராமங்களைச் சார்ந்த பொது மக்கள், குடும்பம் குடும்பமாக தனி வாகனங்களில், நிகழ்ச்சிக்குத் திரண்டு வந்து, கண்ணீர் மல்க, செங்கொடிக்கு வீர வணக்கம் செலுத்தினர். நிகழ்ச் சிக்கான களப்பணிகளை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் முன்னின்று செய்தனர்.