திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் உயர்சாதி மக்களுக்காகவே தமிழக அரசால் சுடுகாடுகள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் கட்டப்பட்டுள்ள மயானங்கள் எதுவும் தலித் மக்களுக்கானது இல்லை. அனைவருக்கும் பொதுவானதும் இல்லை. கீழ்க்கண்ட ஊர்களில் அத்தகைய சுடுகாடுகள் உள்ளன.

மங்கரசவளையபாளையம், பேரநாயக்கன்புதூர், ஆலத்தூர், பொங்கலூர், சின்னகானூர், கஸ்பா கானூர், தண்டுக்காரன்பாளையம், மூலக்குரும்பபாளையம், போத்தம்பாளையம், சாவக்கட்டுப்பாளையம், ஒட்டர்பாளையம், நல்லகட்டி பாளையம், ஊஞ்சப்பாளையம், அய்யம்பாளையம், நடுவச்சேரி, பந்தம்பாளையம், அ.கும்பபாளையம், கருவலூர், இராமநாதபுரம், வேட்டுவபாளையம், ஆட்டையாம் பாளையம், புதுப்பாளையம், சின்னசெட்டிபாளையம், சாமந்தக் கோட்டை, முருகம்பாளையம், காசிலிங்கம்பாளையம், சி.டி. காலனி, கூளே கவுண்டன்புதூர், தண்ணீர்பந்தல்பாளையம் (தெக்கலூர்), கணியாம்பூண்டி.

வரகூரில் கழகக் கூட்டம்

6.3.2011 ஞாயிறு மாலை 6 மணியளவில் விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் திட்டம்; தடையும், விடையும் விளக்கப் பொதுக் கூட்டம்  வரகூர் பெரியார் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கு. குணசீலன் தலைமையேற்க ம.தலித்குமார், தெ.செ.நாவாப்பிள்ளை, கு. மனோஷ், சூரியா, ரமேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவராஜ் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் ப. கண்ணன், கோ. சாக்ரடீசு, ச. பெரியார் வெங்கட், ந. அய்யனார் ஆகியோர் கருத்துரை வழங்கியதை தொடர்ந்து காவை இளவரசனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ அறிவியல் விளக்க கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சி.சாமிதுரை, ச.கா. இளையராசா, விழுப்புரம் மா. கணேசன், செ. பிரபு உள்பட பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான கழக தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். முடிவில் அ. தம்பிதுரை நன்றியுரையாற்றினார்.

திருப்பூரில் மகளிர் தின விழா

8.3.2011 செவ்வாய்க் கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு திருப்பூர் இராயபுரத்தில், பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, மார்ச் 8 மகளிர் தின விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. முதலில் சென்னை ஆதித் தமிழர் கலைக் குழுவினரின், தப்பாட்டம், ஒயிலாட்டம், சாட்டையாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் பின்னர் தொடங்கிய பொதுக் கூட்டத்திற்கு பேராசிரியர் சரசுவதி தலைமையேற்று சிறப்புரை நிகழ்த்தினார். சுபா வரவேற்றுப் பேசினார். வழக்கறிஞர் தமயந்தி, இரா. கார்த்திகா, சரசுவதி ஆகியோர் உரையாற்றினர். வீ. சிவகாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சூலூர் தமிழ்ச் செல்வி, பல்லடம் சாந்தி, பா. செயலட்சுமி, சுசிலா, சந்திரா, மல்லிகா, பரமேசுவரி, சரசுவதி, செயந்தி, பார்வதி, யமுனா தேவி, வெண்ணிலா, பிரியா, கவிதா, கீதா உட்பட பெண்கள் மட்டுமே ஏற்பாடு செய்த இவ்விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். இறுதியாக க.ந. தென்றல் நன்றி கூறினார்.


மேட்டூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு தீர்மானத்தின்படி மார்ச் 5 இல் தமிழ்நாடு முழுவதும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் தமிழக அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் தேர்வு காலங்களில் தேர்வுகள் முடியும் வரையிலாவது தொடர் மின்வெட்டை அமுல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மேட்டூர் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 5.3.2011 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் மேட்டூர் நகர மின் விநியோக அலுவலகம் முன்பு சேலம் மாவட்ட பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் செ.மார்ட்டீன் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அ. சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் கி. முல்லைவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் “நாம் தமிழர் இயக்கம்” சார்பில்  வணங்காமுடி, ஆதி தமிழர் பேரவை சார்பில் வெ.சிவராமன் ஆகியோர் உரையாற்றினர்.  நாம் தமிழர் இயக்கம் நகர அமைப்பாளர் மணிவேல், மேட்டூர் சரவணன், ஆதி தமிழர் பேரவை மாவட்ட மகளிரணி செயலாளர் மீனா மோகன்ராஜ், பெரியார் தி.க. சார்பில் நகர செயலாளர் சு. சம்பத்குமார், பாஸ்கர், ஆர்.எஸ். பகுதி நாகராஜ், சவுந்திரம், சேலம் கேம்ப் அருள்செல்வன், நங்கவள்ளி கிருஷ்ணன், மல்லிகுந்தம் பகுதி காமராஜ் உட்பட 75க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் இறுதியாக மேட்டூர் நகர தலைவர் அ. அண்ணாதுரை நன்றி கூற
முடிவுற்றது.