ஆய்வாளர்கள், தமிழின உணர்வாளர்களின் நீண்டகால விருப்பம் செயல்வடிவம் பெறுகிறது. பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் முழுமையாகத் திரட்டி சிதைக்காமல் தமிழ் கூறும் நல்லுலகத்தின் முன் பெரியார் திராவிடர் கழகம் பெருமையுடன் ஒப்பளிக்கிறது!

தமிழ்நாட்டின் வரலாற்றோடு பிணைந்து நிற்கும் பெரியாரின் ‘எழுத்தும் பேச்சும்’ கால வரிசைப்படி தொகுப்புகளாக, உங்கள் கரங்களில் தவழ இருக்கிறது.

தமிழகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய பெரியாரின் புரட்சிகர பச்சை அட்டை ‘குடிஅரசு’ ஏட்டில், புதைந்து கிடந்த பெரியார் சிந்தனைகளை தேடிப் பிடித்து, 1925 முதல் 1938 முடிய சுயமரியாதை இயக்கக் காலம் முழுவதும் தொகுக்கப்பட்டு 27 தொகுதிகளாக, வெளிவர இருக்கின்றன. ஒவ்வொரு தொகுதியும் 400 பக்கங்களுக்கு மேல்!

ரூ.5400 விலையுள்ள இத் தொகுதிகள் முன் பதிவு திட்டத்தின் கீழ் ரூ.3500-க்கே உங்களுக்கு கிடைக்கும். ரூ.3500 முன் பணம் அனுப்பி, முன் பதிவு செய்து கொள்ள வேண்டிய கடைசி தேதி, ஆகஸ்ட் 31. வரைவோலையாகவோ (டிராப்ட்), பணவிடை வழியாகவோ (மணியார்டர்) மட்டும் அனுப்ப வேண்டும். காசோலைகள் (செக்) அனுப்ப வேண்டாம்.

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி - 27 தொகுதிகளும் வெளி வருகின்றன. ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இடம் பெற வேண்டிய அரிய தொகுப்பு! இந்தத் தொகுதிகளை நீங்கள் விரும்பும் நூலகத்துக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும், ஆய்வு மய்யங்களுக்கும் நினைவுப் பரிசுகளாக நீங்கள் வழங்கி, என்றென்றும் நிலைக்கும் புகழுக்குரிய கடமையை ஆற்றலாம்.

ஏற்கனவே கழகத்தால் வெளியிடப்பட்ட மூன்று தொகுதிகளும், பல புதிய சேர்க்கைகளோடு, கூடுதல் பக்கங்களில் இப்போது, இத் தொகுதிகளோடு இணைத்து, மீண்டும் வெளியிடப்படுகிறது.

தமிழின உணர்வாளர்களே! பெரியாரிய லாளர்களே! சமூக மாற்றத்துக்கு உழைக்கும் தோழர்களே! முன்பணம் செலுத்தி, உங்கள் தொகுதிளை உறுதி செய்து கொள்ளுங்கள்!

வரைவோலையாகவோ (D.D), பணவிடையாகவோ (எம்.ஓ.) அனுப்பலாம். ‘T.S. Mani’ என்ற பெயரில் வரைவோலை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலைகளாக இருத்தல் வேண்டும். காசோலை (Cheque) ஏற்க இயலாது.