மே 22, 23 - இடம் : பேரூராட்சி, திருமண மண்டபம், இடங்கன் சாலை, இளம்பிள்ளை, சேலம் மாவட்டம்.

மே 22 : காலை 9 மணிக்கு வகுப்புகள் தொடக்கம். ‘பெரியாரியலின் இன்றையத் தேவை’ எனும் தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சோதிட மோசடி, உலகம் தோன்றியது எப்படி என்ற தலைப்பில் விளக்கப் படங்களுடன் மருத்துவர் எழிலன் ஆகியோர் காலை அமர்விலும்;

பிற்பகல் அமர்வில் பெண்ணுரிமை எனும் தலைப்பில் பேராசிரியர் சரசுவதி, பெரியார் நடத்திய போராட்டங்கள் எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், வகுப்புகளை நடத்துகிறார்கள்.

தோழர்கள் பங்கேற்கும் குழு விளையாட்டு - குறும்படம் திரையிடல்களும் உண்டு.

மே 23 : முதல்நாள் பயிற்சி பற்றி பயிற்சியாளர்களின் புரிதல் - மதிப்பீடுகளை தோழர்கள் முன் வைப்பார்கள்.

 “பெரியார் திராவிடர் கழகம் எதிர் நோக்கும் பிரச்சினைகள்” எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரன், “கடவுள்” எனும்  தலைப்பில் கொளத்தூர் மணி வகுப்புகளை எடுப்பர்.

 மதிய உணவுக்குப் பிறகு “புராணங்கள்” எனும் தலைப்பில் சிற்பி ராசன் வகுப்பு எடுப்பார். தொடர்ந்து பயிற்சியாளர்கள் எழுப்பும் அய்ய வினாக்களுக்கு தலைவர். பொதுச்செயலாளர்கள் விளக்க மளிப்பார்கள். மாலை 6 மணியளவில் பயிற்சி முகாம் நிறைவடையும். சேலம் மாவட்டத் தோழர்கள் பங்கேற்கும் இந்த முகாமுக்கு இளம்பிள்ளைப் பகுதி தோழர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

Pin It