அரசு அலுவலகங்களில் ஆயுத பூசை நடத்துதல் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மதவழிபாடு செய்தல் மற்றும் கடவுளர் படங்களை அகற்றக் கோரி கோவையில் 13.10.2010 புதன் கிழமை மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையேற்றார். கழக செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி, மாநகர தலைவர் கோபால், செயலாளர் சாஜித், பொருளாளர் இரஞ்சித், அமைப்பாளர் மு. செல்வம், அலுவலக பொறுப்பாளர் கதிரவன், வடக்கு மாவட்ட தலைவர் இராமசாமி, செயலாளர் நாகராசு, அமைப்பாளர் சண்முக சுந்தரம், பொருளாளர் மதியழகன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

 ஆர்ப்பாட்டம் துவங்கும்முன் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையிலும் தோழர்கள் பெருவாரியாக ஆர்ப்பாட்டத்திற்கு வந்து பங்கேற்றனர். மேலும் மாணவரணி அமைப்பாளர் பன்னீர், நேரு, மாநகர துணைச் செயலாளர் தமிழரசன், சூலூர் பன்னீர் செல்வம், கலங்கல் வேலு, வேலாண்டிபாளையம் சம்பத், இராசன், ஈசுவரன், மாணிக்கம், பரத், பார்த்தசாரதி, மாநகர துணைத் தலைவர் தண்டபாணி, அன்னூர் ஈசுவரன், வழக்கறிஞர்கள் பாலசந்தர், பார்த்தசாரதி, வள்ளி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு: தோழர்கள் கைது 

 தமிழின அழிவுக்கு காரணமான இலங்கை அதிபர் இராசபக்சே காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவிற்கு வருவதைக் கண்டித்து கோவையில் கழகத் தோழர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர். 13 ஆம் தேதி இரவு முடிவு செய்யப்பட்டு, நள்ளிரவு தோழர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 14 ஆம் தேதி காலை 11 மணியளவில் கழக அலுவலகத்திற்கு அருகிலுள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக கழக  செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி தலைமையில், தோழர்கள் சென்றனர். ஊர்வலமாக கிளம்பிய தோழர்களை காவல் துறையினர் தடுத்து, கைது செய்தனர். தோழர்கள் இராச பக்சேவின் படங்களையும், இலங்கை கொடியினையும் எரித்தனர். எரிந்த மற்றும் எரிக்க முயன்ற மற்ற படங்களை காவல் துறையினர் பாய்ந்து பிடுங்க முயன்றனர். கழகத் தோழர்கள் விடாப் பிடியாக எரிக்க முயன்றதால் அந்தப் பகுதி யில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு, பரபரப்பாக காணப்பட்டது. போராட்டத்தில் மாநகர செயலாளர் சாஜித், பொறுப்பாளர் இரஞ்சித், அமைப் பாளர் செல்வம், அலுவலக பொறுப்பாளர் கதிரவன், வடக்கு மாவட்ட தலைவர் இராமசாமி, செயலாளர் நாகராசு, பரத், சதீசு, பார்த்தசாரதி, பெரியார் மணி, சம்பத், சிங்கை மனோகரன், நேருதாசு உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்று கைதாகினர்.

 அசீனுக்கு கருப்புக்கொடி: பொய்ச்செய்திக்கு கழகம் மறுப்பு 

 கடந்த 3 ஆம் தேதி படப்பிடிப்பிற்காக மேட்டுப்பாளையம் வந்த நடிகை அசினிற்கு கழக சார்பில் கருப்புக்கொடி காட்டப்பட்டது. சமீபத்தில் படப்பிடிப்பிற்காக இலங்கை சென் றதுடன், அதற்காக வருத்தம் தெரிவிக்காமல் பேட்டி அளித்ததற்காக கழகத் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எழுச்சியோடு நடைபெற்ற திருச்சி போராட்டத்திற்கு அடுத்த நாள் அசின் தொடர்வண்டி மூலம் மேட்டுப் பாளையத்துக்கு வருகின்ற தகவல் அறிந்து, உடனடியாக கழகப் பொறுப்பாளர்கள் சந்திரசேகர், பிரசன்னா இருவரும் தொடர்வண்டி நிலையம் சென்று, அங்கு வந்த நடிகை அசினிற்கு கருப்பு கொடி காண்பித்தும், முழக்கமிட்டும், தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர். நீண்ட நேரம் தோழர்கள் முழக்கமிட்ட பின், தொடர் வண்டி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, அங்கு மாலை வரை வைக்கப்பட்டு, பின் இரவு சுமார் 7 மணியளவில் மாநில காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 காவல்துறையினர் தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்து பின் பிணையில் விடுவித்தனர்.உண்மை நிலை இவ்வாறு இருக்க, அடுத்த நாள் ‘தினத்தந்தி’ நாளேட்டில் கருப்பு கொடி காண்பித்த தோழர்களிடம் படப்பிடிப்பு குழுவினர் வாக்குவாதம் செய்ததாகவும், பின் காவல்துறையினர் வரும்போது, தோழர்கள் ஓடி விட்டதாகவும், காவல்றையினர் துரத்தி பிடித்து, கைது செய்ததாக பெய்யான செய்தியை வெளியிட்டுள்ளது.

 கழகத் தோழர்கள் ஒரு போராட்டத்தை அறிவித்து நடத்தினால், அது காவல்துறை அனுமதி இல்லாத போராட்டமாக இருந்தாலும், அவர்கள் வந்து கைது செய்யும் வரை எதற்கும் அஞ்சாமல், அங்கேயே இருந்ததுதான் கடந்த கால வரலாறு.

 எனவே நடக்காத ஒன்றை நடந்ததுபோல் செய்தி வெளியிட்டு, கழகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் ‘தினத்தந்தி’ நாளேட்டுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை கழகப் பொதுச்செயலாளர் கு.இராம கிருட்டிணன் எடுத்து வருகிறார் என்று கோவை நகர கழகச் செயலாளர் சாஜித் தெரிவித்துள்ளார்.

Pin It