தர விட்டனர். மீண்டும். பிப். 23 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. பெரியார் தன்னுடைய சிந்தனைகள் மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்று கருதிய தலைவரே தவிர, தன்னைப் பற்றி கருதாத தலைவர். எனவே அவர் தனக்கான பதிப்புரிமை எதையும் எழுதவில்லை என்ற கருத்தை வலியுறுத்திய வழக்கறிஞர் துரைசாமி, தந்தை பெரியாரின் கருத்து ஒன்றை முன் வைத்தார்.

எந்த நூலை எடுத்துக் கொண்டாலும், அதன் மதிப்பு, அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டே ஒழிய, அதனை ஆக்கினவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மை என்பதையோ இலக்கண இலக்கிய அளவையோ, அமைப்பையோ, அற்புதத் தன்மையையோ அளவாகக் கொண்டதாக ஆகாது.” (பெரியார், ‘விடுதலை’ 31.1.1958)

- மேற்குறிப்பிட்ட பெரியார் கருத்தைக் கேட்ட நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா அவர்கள், அக்கருத்தால் ஈர்க்கப்பட்டு, இது போன்றே உலக சிந்தனையாளர்கள் பலரும் சிந்தித்திருக்கிறார்கள். இதற்கு இணையாக பல நிகழ்வுகளைக் கூற முடியும் என்று கூறிவிட்டு, வின்ஸ்டன் சர்ச்சில் கூறியதை எடுத்துக் காட்டினார்.

எந்த ஒரு கருத்து வெளிப்படும்போதும் முதலில் கூறுகிறவரைப் பார்க்க வேண்டும்; கூற்று என்ன என்பதைக் கேட்க வேண்டும்; கூறியவற்றை சரியாக உள்வாங்க வேண்டும்; இறுதியாக, அதை ஏற்பதா, வேண்டாமா என்ற முடிவுக்கு வரவேண்டும் என்று சர்ச்சில் கூறியதை, பெரியார் சிந்தனையோடு ஒப்பிட்டார், நீதிபதி. இதை மேலும் விளக்குவதற்காக வழக்கறிஞர் துரைசாமியை உதாரணமாக முன் வைத்து விளக்கினார். பெரியார் கருத்தில் நெகிழ்ந்து போன நீதிபதி, அதை மீண்டும் ஒரு முறை படித்தார்.