பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்பை வெளியிட தடையில்லை என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, திராவிடர் கழகத்தில் உள்ள சிலரை மிகவும் ஆத்திரப்படுத்தியிருக்கிறது. அதைவிட, குடிஅரசு தொகுப்புகளை இலவசமாக இணையதளத்தில் எல்லோரும் படிக்கவும், பதிவிறக்கம் செய்யவும், கழகம் ஏற்பாடு செய்தது - தி.க. வட்டாரத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. பெரியாரின் நூல்களை தங்களுக்கு மட்டுமே ஏகபோகமாக்கிக் கொண்டு, ஏற்கனவே குறுந்தகடுகளையும் நூல்களையும் விற்று வருகிறவர்கள், கழகம் ‘இலவசமாக’ வழங்க முன் வந்ததால், அம்பலப்பட்டுப் போய் சீறிப் பாய்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகம் இணைய தளத்தில் குடிஅரசுகளை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கியவுடன், கொதித்துப் போன ஒரு வீரமணி ரசிகர், இணையதளத்தில் வெளியிட்ட கடிதத்தை இங்கு அப்படியே வெளியிடுகிறோம். வீரமணி கட்சி ரசிகர்கள் ‘தரத்தை’இக்கடிதத்தை படிப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
 
“பெரியாரின் கொள்கையை திரிவு செய்த(து) கொழு(ள)த்த(தூர்) மணியே!
பெரியாரின் கொள்கை அடிப்படையே தெரியாத மடைய(h)ரே!
தந்தை பெரியார் அவர்கள் எந்த ஒரு பொருளையுமே, யாருக்கும் இலவசமாக கொடுத்தது கிடையாது.
 
அப்படிப்பட்ட அவரின் கொள்கையை, கேவலம் பணத்திற்காக (பணம் கிடைக்காது என்ற காரணத்தால்) மின்னஞ்சல் அனுப்பிய செய்தியை படித்தேன்.
வீரப்பனிடம் பணம் வாங்குவதற்கு முன், உன் கடன் என்ன? சொத்தின் மதிப்பு என்ன? எவ்வளவு?
உன் மருமகனின் சொத்து என்ன? எவ்வளவு?
நீயும், உன் மருமகனும் அடித்திருக்கும் கொள்ளை, நாடே அறியும்.
 
வீரப்பனிடம் வாங்கிய பணத்தை, வெள்ளைப் பணமாக மாற்ற குடிஅரசு வெளியிட முயற்சியா?
கர்நாடக நடிகர் இராஜ்குமார் (விடுவிக்கும்) பேரில், வீரப்பனிடம் நீ வாங்கிய பணம் எவ்வளவு என்று நாடே அறியும்.
 
தந்தை பெரியார் அவர்கள் சின்ன துண்டு பிரசுரம் (நோட்டீஸ்) கூட10 பைசாவிற்கு கொடுக்கக் கூடியவர். அவரின் சிந்தனைப் பற்றி தெரியாமல், அவரின் கொள்கையை மின்னஞ்சல் (அச்சிட்டு புத்தகம் மூலம் பணம் கிடைக்காது என்ற காரணத்தால்) அனுப்பிய உன் அறியாமையை நினைத்து வேதனைப்படுகிறேன்.
 
ஒரு காலக்கட்டத்தில், விடுதலைப்புலிகளின் பேரில் சம்பாத்தியம்.
ஒரு காலக்கட்டத்தில் வீரப்பன்பேரில் சம்பாத்தியம்.
இப்பொழுது பெரியார் கருத்து, எழுத்து (‘குடிஅரசு’ நூல்) மூலம் சம்பாத்தியமா?
வெட்கம்! வெட்கம்!!
அடா, அறிவிளிகளே!
 
கல்யாண வீடு, படத்திறப்பு, நாடு தோறும் புத்தகச் சந்தை, புத்தக கண்காட்சி என பெரியாரின் கொள்கையை பரப்பி வரும் எங்கள் தலைவர் வீரமணி பற்றி குறை கூற உன(ங்களு)க்கு என்ன அருகதை இருக்கு.
 
உங்களைப் போன்றே கொள்ளையர்களிடமிருந்து, தந்தை பெரியாரின் கொள்கையை காப்பாற்ற வேண்டும். (என்பதற்காகத்தான்) ஒழுக்கம், நாணயம், அறிவாற்றல் மிகுந்த எங்கள் தலைவர் வீரமணி தலைமையில் கடமையாற்றி வருகிறோம். உங்களுடைய அத்தனை மோசடியையும் அம்பலப்படுத்துவோம்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!
 
எங்கள் தலைவர் கால் தூசிற்கு பெறாதது உங்களுடைய.....
இப்படிக்கு
(கி.சௌந்தரராசன்)
நாள்: 10.06.2010
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It