35 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்வது பெண்களின் தனிப்பட்ட, தன்வாழ்வு சார்ந்த உரிமை. எந்த வயதிற்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தனிப்பட்டோர் விருப்பம், அதில் நுழைந்து கருத்து சொல்வது நாகரிகமற்றது.

Elderly marriageகளால் சிலருக்கு mental disorders வருமென்றாலும், it’s negligible.

ஆனால் 35 வயதிற்கு பிறகான கர்ப்பம் விவாதத்திற்குரியது.

High risk pregnancy என அழைக்கப்படும் அபாயம் மிக்க கர்ப்பங்களுக்குள் இதுதான் முதன்மையானது.

இதைத் தவிர பதின்பருவத்தில் கர்ப்பம் தரித்தல்,

நீரிழிவு நோய் மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற co-morbidityகளோடு கர்ப்பம் தரித்தல் போன்றவையும் High risk pregnancyகளுள் அடக்கம்.

High risk pregnancyகளின் பக்கவிளைவுகளாவன

  1. chromosomal abnormalities (பிறப்பிலேயே ஊனமுற்ற குழந்தைகள்)
  2. குழந்தை இறந்து பிறந்தல்
  3. மனநலம் குன்றிய குழந்தை, மூளை வளர்ச்சியற்ற குழந்தை
  4. தேதிக்கு முன்பே பிறக்கும் குழந்தைகள், நோய் அபாயங்களுக்கு உட்பட்டவை
  5. கர்ப்ப கால நீரிழிவு நோய்
  6. கர்ப்ப கால ரத்தக்கொதிப்பு
  7. தாய்க்கான இதர co-morbidities

என அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

தாய் சேய் இறப்பு விகிதம், சாதாரண கர்ப்பங்களை விட இதில் 4-20 மடங்குகள் அதிகம்.

இதைத் தவிர முதிர் வயது கர்ப்பிணிகள் சாதாரண கர்ப்பங்களை போல் அல்லாமல் இன்னும் அதிகமான முறை pre-natal visitsகள் வரவேண்டியுள்ளது.

இது போன்ற கர்ப்பங்களின் managementகள் இன்னும் சிரத்தை எடுத்து செய்யவேண்டியுள்ளது.

இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பிலும், patient loadல் இப்படியான கர்ப்பங்கள் மருத்துவருக்கும், கர்ப்பிணிக்கும் அதிக அலைச்சல் மற்றும் நேரம் எடுப்பவை. இதை தவிர இது போன்ற கர்ப்பங்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும்பாலும் எடுத்துக்கொள்வதில்லை.

Tertiary health centreகளுக்கே refer செய்கிறார்கள்.

இந்தியாவில் மருத்துவர்கள் இன்னும் limited resourcesகள் தான், அரசு மருத்துவர்கள் மற்றும் இந்திய சமூகத்தின் நன்மை கருதி இது போன்ற கர்ப்பங்களுக்கு முன்னால் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது.

தன்னுடைய சொந்த முடிவுகள் சமூகத்திற்கு பாரமாய் இல்லாதவாறு இருத்தல் வேண்டும்.