மடக்கிய கைவிரல்களை விரித்தாலும் கத்தி விழாமல் ஒட்டிக் கொள்ளும்

தேவையான பொருட்கள்: 6 அங்குல நீளமுள்ள ஒரு கத்தி

மேஜிக் செய்யும் முறை: மந்திரம் போடும் வித்தைக்காரர் போல் நம் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். இதோ என்கையில் ஒரு கத்தி உள்ளது அதைக் கையில் பிடிக்காமலே ஒட்டிக்கொள்ள செய்கிறேன். இதை மந்திரத்தில் செய்து காண்பிக்கிறேன். என்பதாகச் சொல்லிக்கொண்டே கைவிரல்களை நீட்டி மடக்கி காண்பித்துக் கொண்டு இடது கையில் கத்தியை பிடித்துக் கொண்டு வலது கையை இடதுகை மணிக்கட்டுப் பகுதியில் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

வேகமாக மந்திரிப்பது போல் ஆரவாரம் செய்து கொண்டே இடது கை விரல்களை ஒவ்வொன்றாக விரித்துக் கொண்டே வரவும். அய்ந்து விரல்களையும் விரித்த பின்பும் கத்தி கையில் அப்படியே ஒட்டிக்கொள்ளும்.

இதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கும்.

மேஜிக் இரகசியம்

1. மேஜிக் செய்யும் போது இடது கை உள்ளங்கை நமது பக்கம் இருக்க வேண்டும்.

2. வலது கையால் இடது கையை பிடிப்பது போல் ஆட்காட்டி விரலை வலது உள்ளங்கையில் உள்ள கத்தியை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

3. கத்தி எடை குறைவான தகட்டால் இருக்க வேண்டும்.

4. இதையே இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டும் செய்யலாம்.

5. கவனம். இது மற்றவர்களுக்குத் தெரியாதவாறு செய்வதோடு பலமுறை பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.