தலித் முரசு' இதழை 13.2.1997 அன்று நாம் இணைந்து தொடங்கிய தருணத்தில், 2007 வரை இவ்விதழை நடத்த முடியுமா என்ற கேள்வி எனக்கு இருந்தது. இடையில், நான் விலகிவிட்டபோதும், பெரும் சிரமங்களுக்கிடையே இதழைத் தொய்வின்றி நடத்தி வருகிற - ஆசிரியர் குழுவையும், டாக்டர் அம்பேத்கர் மய்ய அறக்கட்டளை உறுப்பினர்களையும் நான் போற்றாமல் இருக்க முடியவில்லை. எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
பிப்ரவரி 2007 தலையங்கம் கண்டு மிகவும் வேதனையடைந்தேன்.

இருப்பினும் ஒரு பத்திரிகை என்பது, பொதுமக்களின் வாங்கும் சக்தியால்தான் நிலைத்து நிற்க முடியும். தலித் சமுதõயத்தில் அதிகம் படித்தவர்கள், பெரிய அரசுப் பணிகளில் உள்ளவர்கள், தனியார் துறை அதிகாரிகள் மற்றும் தலித் தலைவர்கள், ஆர்வலர்கள், வசதி படைத்தோர் அனைவரும் குறைந்தபட்சம் ஆயுள்/ஆண்டு சந்தா செலுத்தினால் மட்டுமே இதழைத் தொடர்ந்து நடத்த முடியும். ஆனால், இவற்றிற்காக நான் எடுத்த முயற்சிகள் எல்லாவற்றிலும் தோல்வி கண்டேன் என்பதை எனது நண்பர்கள் அறிவார்கள்.

என்னைப் பொறுத்தவரை, நான் ‘தலித் முரசு' இதழுக்கு ஆயுள் சந்தா ரூ. 1,000 செலுத்தி பத்தாண்டுகளாகிறது. எனவே, பத்தாண்டுகள் முடிந்த ஆயுள் சந்தாதாரர்கள் அனைவரும் - மீண்டும் ரூபாய் ஆயிரம் அனுப்பி புதுப்பித்தால் நலம் எனக் கருதுவதால், இதனுடன் ரூ. 1,000க்கான காசோலையை இணைத்துள்ளேன்.

- பெ. சந்திரகேசன், சென்னை

(‘தலித் முரசு'க்கு முதல் வாழ்நாள் கட்டணம் செலுத்தியவர் திரு. பெ. சந்திரகேசன் என்பது குறிப்பிடத்தகுந்தது. - ஆர்)