periyar 480

ஸ்ரீ சங்கராச்சாரியர் மடம் ஆஸ்த்தான வித்துவான் ஸ்ரீ வெங்கிட்டராம சாஸ்திரியை சிரார்த்த விஷயமான பல சந்தேகங்களைப் பற்றி ஒரு நண்பர் எழுதிக் கேட்டிருந்தாராம். அதற்கு பதில் எழுத சாஸ்திரிக்கும் சாவகாசமில்லையாம். குடும்ப விஷயமாக கிராமத்திற்குப் போய்விட்டாராம். மித்திரனிலும் இடம் ஒதுக்க முடியாதாம். பத்திரிகைகள் மூலம் இம்மாதிரி சந்தேகங்களும் நீங்காதாம். ஜகத்குருசாமிகள் என்பவர் ஆரிய தர்மம் என்று ஒரு பத்திரிகை போடுவாராம். அதை வாங்கிப் படித்தால் சந்தேகமெல்லாம் நிவர்த்தி ஆகி விடுமாம். இது ஸ்ரீ சோமதேவ சர்மா என்கிற ஒரு பார்ப்பனர் பேரால் 10.3.27 தேதி மித்திரனில் பிரசுரித்திருக்கிறது.

இது என்ன புரட்டு? கள்ளு, சாராயம் விற்க பத்திரிகையில் இடமிருக்கிறது. வருணாசிரம தர்மம், ஆரியதர்மம், பிராமண தர்மம், சனாதன தர்மம், இந்து தர்மம் என்கிற பார்ப்பனர்கள் பிழைப்புக்கு ஏற்பட்ட மத விஷயங்களைப் பரப்ப மித்திரனில் இடமிருக்கிறது, சாஸ்திரிகளுக்கும் சர்மாக்களுக்கும் சாவகாமுமிருக்கிறது. யாருக்காவது இதில் சந்தேகமேற்பட்டால் அதை விவரிக்க சாஸ்திரிகளுக்கும் சாவகாசமில்லை, பார்ப்பனப் பத்திரிகைகளுக்கும் இடமில்லை என்றால் பார்ப்பனப் புரட்டுகளுக்கு இதை விட வேறு என்ன சாக்ஷி வேண்டும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.03.1927)

Pin It