ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தஞ்சை ஜில்லா போர்டு பிரசிடெண்டாக    3 -ல்  2 பங்கு மெம்பர்களுக்கு அதிகப் பேர்களாலேயே தெரிந்தெடுக்கப் பட்டும், அவரைப் பற்றியும் அத்தேர்தல் முறையைப் பற்றியும் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்யும் கொலை பாதகத்திற்குச் சமானமான கொடுமையும் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களும் கேட்போர் மனதை பதைக்கும்படி யாகவே இருக்கும்.

periyar with kidsஸ்ரீமான் பன்னீர்செல்வத்திற்கு வரும் பிப்ரவரி மாத முதல் வாரத்தில் அவருடைய ஜில்லா போர்டு பிரசிடெண்டு ஸ்தானம் காலியாகும்.  ஆதலால் அவர் மறுபடியும் பிரசிடெண்டு தேர்தலுக்கு நிற்க யோக்கியதை உண்டாகும் படியாக லோகல் போர்டு இலாக்கா மந்திரியாகிய டாக்டர் சுப்பராயன் அவர் களை ஜில்லா போர்டு மெம்பராக நியமனம் செய்யும்படி கேட்டுக் கொண்டார். போர்டு வைஸ்பிரசிடெண்டும் போர்டின் மூலம் கவர்ன்மெண்டுக்கு சிபார்சு செய்தார்.  மந்திரி, பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டோ அல்லது பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நினைத்தோ நியமனம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டாராம்.  அதன் மேல் ஜில்லா போர்டு மெம்பர் களில் 27 பேர்கள் சேர்ந்து ஸ்ரீமான் பன்னீர்செல்வத்தை ஜில்லா போர்டு மெம்பராய் நியமிக்காத வரையில் அவர் அடுத்த தேர்தலுக்கு நிற்க முடியா தென்றும் அவர் மறுபடியும் தலைவராக வர நாங்கள் விரும்புகிறோமென்றும், காரணமின்றி சட்ட நிர்பந்தத்தால் மாத்திரம் அவருக்கு ஏற்படும் தடையை விலக்குவதற்கு வேறு வழி இல்லையென்றும், மற்றும் அவருடைய நிர்வாகத்தைப் புகழ்ந்தும் ஒரு மகஜர் அனுப்பினார்களாம்.  அதன்பேரில் மந்திரி ஒன்றும் செய்ய முடியாமல் போனதால் ஸ்ரீமான் பன்னீர்செல்வம் மறுபடியும் ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு நிற்பதில் சட்டபடிக்கான தடை ஒன்றும் இல்லையென்றும், ஆனால் தேர்தல் மாத்திரம் அவர் காலாவதி தீருவதற்கு முன்னாலேயே செய்து கொள்ள வேண்டும் என்றும் ஒரு ழு.டீ.(கவர்ன்மெண்டு உத்திரவு) அனுப்பிவிட்டார்.  அதன்படி காலாவதி தீர 10 நாளைக்கு முன்னால் ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு ஒரு தேர்தல் போட்டு அந்தப்படியே தேர்தல் நடந்தது.  ஆனால் நமது பார்ப்பனர்கள் தேர்தலை நிறுத்த மந்திரியைப் பிடித்து வேலை செய்யத் தங்களால் கூடுமான தெல்லாம் செய்து பார்த்தார்கள்.  மந்திரியால் முடியாமல் போய்விட்டது.  

கடைசியாக தேர்தலுக்கு முதல்நாள் முனிசீப் கோர்ட்டில் தடை உத்திரவு கேட்டார்கள்.  அந்த முனிசீப்பு முதல் நாள் கேசை விசாரித்து விட்டு தேர்தல் தினத்தன்று 11 மணிக்கு தீர்ப்புக் கூறுவதாய் சொல்லிவிட்டார்.  தேர்தலுக்காக எல்லா மெம்பர்களும் வந்தும் விட்டார்கள். கடைசியாக 11 மணிக்கு முனிசீப்பு தடை உத்திரவு கொடுக்க முடியாது என்றும், தேர்தல் நடத்தலாம் என்றும் தீர்ப்புச் சொல்லிவிட்டார்.  இந்தப் பார்ப்பனர்கள் இதோடு விடாமல், 12 மணிக்கு ஜில்லா ஜட்ஜியிடம் அத்தீர்ப்பின் மேல் அப்பீல் செய்தார்கள்.  அதாவது தேர்தல் சரியாய் 2 மணிக்கு நடக்க வேண்டும்;  ஆனால், இவர்கள் தேர்தலுக்காக பிரசாரம் கூட செய்ய வொட்டாமலும் தாங்கள் மாத்திரம் ஒரு ஓட்டருக்கு ஒரு பார்ப்பனர் வீதம் வேலை  செய்து கொண்டும் உபத்திரவம் செய்தார்கள்.  ஜில்லா ஜட்ஜி 1 மணி வரை இரண்டு பக்கத்தில் ஆர்க்குமெண் டையும் கேட்டுவிட்டு கடைசியாக பார்ப்பனர்களின் அப்பீலை செலவுடன் தள்ளிவிட்டார்.  உடனே 2 மணிக்கு தேர்தல் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் இன்னொரு வேடிக்கை அதாவது கும்பகோணம் தாலூகா போர்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ஜில்லா போர்டு மெம்பர்களை ஓட்டுச் செய்யாமல் தடுப்பதற்காக அவர்கள் பெயரை கெஜட்டில் வர ஒட்டாமல் சூழ்ச்சி செய்தார்கள். இது விபரம் தெரிந்து அவர்கள் பெயரை உடனே கெஜட் செய்யும் படியாய் தந்தி கொடுத்ததும் பெயர் கெஜட் செய்ய உத்திரவாய் விட்டதாக தந்தி வந்தது.  உடனே கும்பகோணம் மெம்பர்களை தேர்தல் தினத் தன்று தருவித்தாய் விட்டது.  ஆனால் தேர்தல் நடத்த ஆரம்பிக்கும் சமயத் தில் பட்டணத்திலிருந்து அவ்விரு மெம்பர்கள் பெயரும் சேர்க்கப்பட வில்லை என்று ஒரு தந்தி வந்தது.  அந்த இரண்டு மெம்பர்களையும்  நிறுத்திவிட்டு தேர்தல் ஆரம்பிக்கப்பட்டது ஸ்ரீமான் பன்னீர்செல்வத்தின் பெயரை பிரேரேபித்தவுடன் ஒரு மகமதிய கனவானை விட்டு சட்டப்படி பன்னீர்செல்வம் நிற்பது ஒழுங்கல்ல என்று ஆnக்ஷபணை சொல்லச் செய்தார்கள்.  தேர்தலுக்கு அக்கிராசனம் வகித்த உப அக்கிராசனாபதி அவ்வாnக்ஷபணையைத் தள்ளிவிட்டார்.  உடனே வேறு ஒரு கனவான் பெயரை பிரேரேபிக்க ஆரம்பித்தார்கள்.  போட்டிப் பெயராக ஸ்ரீமான்கள் நாடிமுத்து பிள்ளையவர்கள் பெயரும் மருதவனம் பிள்ளை அவர்கள் பெயருமே அடிபட்டு வந்தமை நேயர்களுக்குத் தெரியும்.  ஆனால் தேர்தல்  சமயம் வரை யார் நிற்பது என்பது உறுதிப்படாமல் ஒருவருக்  கொருவர் நான் மாட்டேன், நான்மாட்டேன் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.  ஆன தினால், இந்தப் பார்ப்பனர்களுக்கு இவ்விருவரிடத்திலும் யார் பேரில் அதிக  நம்பிக்கையோ அதாவது வேண்டாமென்று சொல்ல மாட்டார்களோ அவர்களைப் பார்த்துக் கண்டுபிடித்து ஸ்ரீமான் மருதவனம் பிள்ளை பெயரை ஒரு அய்யங்கார் பார்ப்பனர் பிரேரேபித்தார்.  ஒரு அய்யர் பார்ப்பனர் ஆமோதித்தார்.  

ஓட்டு போட்டவுடன் முடிவு தெரிவதற்கு முன்னாலேயே இக் கூட்டம் அநேகமாய் ஓடிப்போய் விட்டது.  எண்ணிப்பார்க்க ஸ்ரீமான் பன்னீர்செல்வத்திற்கு 27 ஓட்டுகளும் ஸ்ரீமான் மருதவனம் பிள்ளைக்கு 10 ஓட்டுகளும் கிடைத்தன.  பட்டணத்திலிருந்து பொய்த் தந்தி கொடுக்கப் பட்டிருக்காவிட்டால் ஸ்ரீமான் பன்னீர்செல்வத்திற்கு 29 ஓட்டுகள் கிடைத் திருக்கும்.  அக்கிராசனார் ஸ்ரீமான் பன்னீர்செல்வம் 27 ஓட்டுகளால் தெரிந் தெடுக்கப்பட்டதாய் முடிவு சொன்னதும் ஜனங்களின் ஆரவாரத்திற்கள வில்லை.  மற்ற விஷயம் மறுமுறை எழுதலாம்.  இப்போது எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு மறுபடியும் போகலாம்.  அதாவது தெரிந்தெடுக்கப்பட்ட பிறகும் இத்தேர்தல் சம்பந்தமாய் பனகால் ராஜாவின் மீது பழி சொல்லிப் பார்ப்பனப் பத்திரிகைகள்  கண்டபடி எழுதி ஜனங்களுக்கும் தேர்தல் விஷய மாயும், பனகால் விஷயமாயும், ஸ்ரீமான் பன்னீர்செல்வம் விஷயமாயும் தப்பெண் ணம் கற்பிக்க பாடுபடும் காரணம் என்ன?  உத்திரவு போட்டது டாக்டர் சுப்பராய மந்திரி; இதில் பனகால் மந்திரிக்கு சம்பந்தம் என்ன?  அவரை எதற்கு திட்ட வேண்டும்?  இதில் உள்ள சூழ்ச்சியை கொஞ்சம் கவன மாய் படிக்க வேண்டும்.  அதாவது பனகால் மந்திரி  காலத்தில் ஒரு பார்ப்பன ஜில்லா போர்டு பிரசிடெண்டு தன் காலாவதி சீக்கிரத்தில் முடியப் போகிறப்படி யால் தான் மறுபடியும் தேர்தலுக்கு நிற்க யோக்கியதை உண்டாக்கிக் கொள்ளும்படியாக தன்னை மறு நியமனம் செய்யும்படி பனகாலை கேட்டுக் கொண்டார்.  

பனகால் உடனே நியமனம் செய்யாமல் கொஞ்சம் தாமதம் செய்யவே பனகால் மீது இப்பார்ப்பன ஜில்லா போர்டு பிரசிடெண்டுக்கு சந்தேகம் ஏற்பட்டு சட்டத்தை திருப்பித் திருப்பிப் பார்த்து சென்னை சட்டம் வல்ல பார்ப்பனர்களையும் கண்டு யோசித்து தான் மறு நியமனம் பெறாமலே தனது காலாவதி முடிவதற்குள் தேர்தல் ஏற்படுத்தி அதில் நிற்கச் சட்டம் இடம் கொடுக்கிறது என்பதாகக் கண்டுபிடித்து உடனே தேர்தல் நடத்தி அதில் தான் தெரிந்தெடுத்ததாய் சர்க்காருக்கு அறிவித்து விட்டார்.  சர்க்கார் (பனகால்) இது சட்டப்படி செல்லாது என்பதாக அபிப்பிராயப்பட்டார்.  மற்றொரு பொறுப் புள்ள உத்தியோகஸ்தர் இது செல்லும் என்று அபிப்பிராயப்பட்டார்.  கடைசி யாக அட்வகேட் ஜெனரல் அபிப்பிராயத்திற்கு அனுப்பப்பட்டது;  அது செல்லும் என்று அட்வகேட் ஜெனரல் அபிப்பிராயம் சொல்லிவிட்டார்.  பிரசி டெண்டு ஸ்தானம் உறுதியாய் விட்டது.  அந்தப் பார்ப்பனப் பிரசிடெண்ட் இப்போது இந்திரபோகம் அனுபவிக்கிறார்.  இதைப் பற்றி ஒரு பார்ப்பனப் பத்திரிகையும் மூச்சுக்கூட விடவில்லை. ஏன்? அந்த போர்டு பார்ப்பன அக்கிரஹாரமாகவும் அன்னசத்திரமாகவும் இருந்து வருகிறது.  ஒரு பார்ப்பனர் ஆசைப்பட்டார்,  ஒரு பார்ப்பனர் யோசனை சொன்னார், ஒரு பார்ப்பனர் தேர்தல் நடத்தினார், ஒரு பார்ப்பனர் செல்லும் என்றார், ஒரு பார்ப்பனரல்லாதார் தான்(பனகால்) அப்போதே இது சட்டவிரோதமென்றார்.  இப்போது இந்த விஷயம் இதேமாதிரி ஒரு பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்டுவிடவே அதே கூட்டத்துப் பார்ப்பனர்களுக்கு இது சமயம் இது சட்ட விரோதமாய்க் காணப்படுகிறது.  அதாவது சட்டத்திற்குத் தாங்கள்தான் மனு என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.  ஏன் என்று பார்த்தால் சட்டம் செய்வது பார்ப்பனர், சட்டத்திற்கு வியாக்கியானம் செய்வது பார்ப்பனர், சட்டவாதி பார்ப்பனர், சட்ட அதிபதி பார்ப்பனர். ஆகவே வக்கீல் குமாஸ்தா முதல் ஐகோர்ட் ஜட்ஜி, சட்டமெம்பர் வரையிலும் பார்ப்பன மயம்.  அப்படி இருக்கும்போது வேறு ஒருவர் எப்படி தங்களை சட்டத்தில் மீறக்கூடும் என்கிற ஆணவம்தான்.

நிற்க,  இதே மாதிரி திருநெல்வேலி ஜில்லா போர்டு பிரசிடெண்ட் சென்ற வாரம் தெரிந்தெடுக்கப்பட்டார்.  அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட ஒரு பார்ப்பனராவது அவர்களுடைய பத்திரிகைகளாவது எழுதவும் இல்லை,  பேசவும் இல்லை.  தேர்தலிலும் ஆnக்ஷபணை இல்லை, சூட்டும் இல்லை, அப்பீலும் இல்லை. ஏனென்றால் ஸ்ரீமான் குமாரசாமி ரெட்டியார் அவர் களைப் பற்றி நமது பார்ப்பனர்களுக்கு அவ்வளவு விரோதமில்லை. காரணம் என்னவென்றால் அங்கு பார்ப்பனர்கள் சாப்பிட தர்ம சத்திரங்கள் இல்லை.  சம்பளமில்லாத பள்ளிக்கூடங்கள் இல்லை.  இதுதான் காரணம். அல்லாமலும் தஞ்சை ஜில்லா போர்டின் உத்தியோகஸ்தர்களில் 100 -க்கு 90 பேர் பார்ப்பன ரல்லாதாராக ஆகும் வரையில் பார்ப்பனருக்கு உத்தியோகம் கொடுக்கக் கூடாது என்பதாக ஒரு தீர்மானமும், பட்டுக்கோட்டை ஸ்ரீமான் வேணுகோ பால் நாயுடுகாரால் கொண்டு வரப்பட்டது நிறைவேற்றி வைக்கப்பட்டிருக் கிறது.  இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இப்பார்ப்பனர்கள் எவ்வளவு கொடுமை செய்தாலும் எப்பேர்பட்ட தீர்மானமிருந்தாலும் ஸ்ரீமான் பன்னீர் செல்வம் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கொடுப்பதில் மாத்திரம் குறை வில்லை.  இதற்கு ஒரு சிறு உதாரணம் -அதாவது தஞ்சை ஜில்லாவில் ஒத்துழையாமைப் பெயரையும், காங்கிரஸ் பெயரையும் வைத்துக்கொண்டு பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் ஜஸ்டிஸ் கட்சியை வைவதிலும் விஷமப் பிரசாரம் செய்வதிலும் பேர் போனவர் ஸ்ரீமான் சூரிய நாராயண அய்யர் அவர்கள்.  அவர் இத்தேர்தல்களிலும் இதற்கு முன் தேர்தல்களிலும் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதம் செய்தது இவ்வளவு அவ்வளவு அல்ல.  அப்படிப்பட்ட ஸ்ரீமான் சூரிய நாராயண அய்யர் அவர்களுக்கே அவரு டைய மூன்று பிள்ளைகளுக்கும் ஜில்லா போர்டில் உத்தியோகம் கொடுத்தி ருக்கிறார் என்றால் மற்றபடி எத்தனை பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கொடுத்திருப்பார் என்பதை வாசகர்களே உணரட்டும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.01.1927)