‘இஸ்லாமிய பயங் கரவாதத்தை துடைத்தெறிவது எப்படி?' இந்த தலைப்பிட்டு மும்பையிலிருந்து வெளிவரும் டிஎன்ஏ (டெய்லி நியூஸ் அண்டு அனலைஸிஸ்) என் கிற நாளிதழில் ஜூலை 16ம் தேதி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார் ஜனதா கட்சி யின் தலைவர் சுப்பிரம ணிய சுவாமி.

இந்தக் கட்டுரை பரவலாக மக்களிடத்தில் சென்று சேர வில்லை. டிஎன்ஏ இதழ் வெளி வரும் மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களிலும் சுவாமியின் கட்டுரை எவ்வித கொந்தளிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆயினும், சுவாமியின் மதவெறியையும், முஸ்லிம்கள் குறித்து அவர் கீழ்த்தரமாக எழுதியிருப்பதையும் ஒரு சில வட நாட்டு இஸ்லாமிய அமைப்புகள் கண்டித்திருக்கின்றன.

சங்பரிவாரங்களைவிட கூடு தல் மதவெறியுடன் வெளிப்பட்டுள்ளது சுவாமியின் கட்டுரை.

“ஜூலை 13 மும்பை தாக்கு தலைமையப்படுத்தி கட்டுரை யைத் தொடங்கும் சுவாமி, இந் துக்கள் தாங்கள் "ஹலால்' (முஸ் லிம்கள் பிராணிகளை அறுக்கும்) முறையில் கொல்லப்படுவதை ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நாடு இறுதியாக அழியும்வரை தினமும் இங்கு ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருக்கும் என இந்து மக்களிடையே வெறியைத் தூண் டுகிறார் சுப்பிரமணிய சுவாமி.

இந்தியாவின் தேசிய பாது காப்பிற்கு முழு முதற் பிரச்சினை இஸ்லாமியத் தீவிரவாதம்தான். 2012ல் பாகிஸ்தான் தாலிபானின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். (பாகிஸ்தானிலுள்ள) அமெரிக் கர்கள் ஆப்கானுக்கு பறந்து விடு வார்கள். இதை நான் எதிர் பார்க்கிறேன். பின்னர், இஸ்லாம் இந்துயிசத்தை எதிர்கொள்ளும். இஸ்லாத்தின் தீர்க்கப்படாத இந் துயிசத்தை அது முழுமைப்படுத் தும்.

அல்காயிதாவின் தலைவராக இருந்த உஸôமா பின்லேடன், அமெரிக்காவை விட இந்தியா தான் எங்கள் தாக்குதலுக்கு முதல் இலக்கு என்று கூறியிருக்கி றார்.

அடிப்படைவாத அல்லது மத வெறி கொண்ட முஸ்லிம்கள், இந் துக்களின் ஆதிக்கம் கொண்ட இந்தியா இஸ்லாத்தினால் வெற்றி கொள்ளப்படாத அத்தியாயமாக இருக்கிறது என்று நினைக்கிறார் கள். மற்ற நாடுகள் எல்லாம் 100 சத வீதம் இஸ்லாத்தினால் வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது. அங்கெல் லாம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு தொடங்கிய இரண்டு தசாப்தங்க ளுக்குள் மக்கள் இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்கள்.

800 வருடங்கள் முஸ்லிம்க ளின் கொடுங்கோல் ஆட்சி தொடர்ந்த நிலையிலும் பிரிக்கப் படாத இந்தியாவில் (1947க்கு முன்) 75 சதவீத இந்துக்கள் இருந் தார்கள். முஸ்லிம் மதவெறியர் கள் இந்துக்களை குறி வைக்கி றார்கள் என்று நான் குற்றம் சுமத்த மாட்டேன். மாறாக சனா தன் தர்மத்தைக் காரணமாகக் கொண்டு இந்துக்கள் ரொம்பவே பணிந்து போகிறார்கள்.

கும்பமேளா நிகழ்வின்போது எவ்வித முன்னேற்பாடோ, மாநி லம் தழுவிய அழைப்போ இல்லா மல் ஒன்று திரளும் இந்துக்கள், காஷ்மீர், மாவ், மேல்விசாரம், மலப்புரம் போன்ற இடங்களில் முஸ்லிம்களால் இந்துக்கள் தாக்கப்படும்போது இந்துக்கள் சுண்டு விரலைக் கூட அசைப்ப தில்லை.

சமீபத்திய இஸ்லாமிய பயங்க ரவாதத்தின் மூலம் நாம் தெரிந்து கொண்டது! இந்துக்கள் முஸ்லிம் களின் இலக்கு என்பதைத்தான். இந்திய முஸ்லிம்கள் நிகழ்ச்சி நிரலோடு மெல்ல மெல்ல தங்க ளது திட்டங்களை செயல்படுத்தி இந்துக்களுக்கு எதிராக தற்கொ லைப் படையாகிறார்கள். பயங்க ரவாதத் தாக்குதலின் மூலம் இந் துக்களின் மனதில் சிவில் யுத்தத் திற்கான பயத்தை உண்டு பண் ணுகிறார்கள்.

பயங்கரவாதத்திற்கு எதிரான வர்கள் நாங்கள் என்று ஒன்று திரண்டு இந்துக்கள் பதிலளிக்க வேண்டும். தாங்கள் தனிமைப் படுத்தப்பட்டதாக எண்ணக் கூடாது. ஒரு இந்து இறந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு இந்து வும் சாகடிக்கப்படுவான் என்று உணர வேண்டும்.

இந்த சிந்தனை ஒவ்வொரு இந் துவுக்கும் அடிப்படை யில் மன ரீதியாக எழ வேண்டும். இஸ்லா மியத் தீவிரவாதத் திற்கு எதிராக களமி றங்க வேண்டும் என் கிற ஒன்றுபட்ட மன நிலைக்கு வர வேண் டும்.

முஸ்லிம்கள் உண் மையிலேயே இந்துக் களைப் பற்றி நல் அபி ப்பிராயம் கொண் டிருந்தால் அவர்கள் நம்மோடு இணைய வேண்டும். முஸ்லிம் கள் தற்போது முஸ்லி ம்களாக இருக்கலாம். ஆனால் அவர்களது மூதாதையர்கள் இந் துக்கள் என்று அவர் கள் ஒப்புக்கொள்ளும் வரை அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை வராது.

ஒரு முஸ்லிம் இந்துக்களின் சட்ட திட்டங்களை ஒப்புக் கொண்டால், இந்துக் களாகிய நாம் அவர் களை இந்துஸ்தான் என்ற அகண்ட இந்து சமுதாயத்தின் அங்க மாக ஏற்றுக் கொள் வோம். இந்தியா என் பது இந்துக்களின் தேசம். இதை மறுப்ப வர்கள் அந்நியர்கள். அவர்கள் பதிவுகளின் மூலம் மட்டுமே இந் தியர்களாக அறியப்படுபவர்கள். அவர்கள் இந்தியாவில் இருக்க லாம். ஆனால் அவர்களுக்கு ஓட் டுரிமை இருக்கக் கூடாது. அதா வது அவர்கள் தங்களது பிரதி களை தேர்ந்தெடுக்கக் கூடாது.

இரண்டாவதாக நாம் கற்றுக் கொண்ட பாடம் தீவிரவாதத்தை எதிர்கொள்கிறபோது அல்லது தீவிரவாதத்திற்கு எதிரான போரின் போது - எவ்வித நிபந்தனைகளை யும் ஏற்கக் கூடாது. கோரிக்கைக ளையும் ஒப்புக் கொள்ளக் கூடாது. நாம் 1989ல் செய்த தவ றைப்போல! காஷ்மீரின் முஃப்தி முஹம்மது சையதின் மகள் ருபை யாவிற்காக 5 தீவிரவாதிகளை விடுவித்தோம். 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐ.சி 814 கடத்தப்பட்டதைத் தொடர்ந்து 3 தீவிரவாதிகளை விடுதலை செய் தோம். இதை மீண்டும் செய்யக் கூடாது

மூன்றாவதாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அல்லது தெரிந்து கொண்ட விஷயம் பயங்கரவாதச் சம்பவம் சிறிய அளவிலிருந்தாலும் அதற்கு பெரிய அளவில் பதிலடி தர வேண்டும். உதாரணத்திற்கு அயோத்தி(?) கோவில் தாக்கப்ப டும் என்றால் நாம் அங்கு ராம் கோவிலை கட்டுவதன் மூலம் பதி லடி தர வேண்டும்...'' இப்படி யெல்லாம் சொல்லி இந்து சமய மக்களின் மனதில் மதவெறியை யூட்டும் சுப்பிரமணியன் சுவாமி, தொடர்ந்து “கவுண்ட்டர் டெர்ர ரிஸ்ட் ஆக்ஷன் (பதில் தீவிரவா தத் தாக்குதல்) மூலமாக இஸ்லா மியர்க ளின் இலக்குகளை முறியடிக்க முடியும். அவ ற்றை முறியடிக்க எடுக்க வேண்டிய சில முறையான நடவடிக்கைகளை நான் பரிந்துரைக்கிறேன்...'' என வெறியூட்டுகிறார்.

முஸ்லிம்களின் இலக்கு என்று சுவாமி கற்பனை செய்து கொண்டிருக்கும் விஷயங்களையும் அதற்கு அவர் செயற்படுத்த சொல்லும் அறிவு கெட்டத்தனமான திட்டங்களை யும், ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரங் களையே மிஞ்சிவிட்ட அவரது மதவெறி சிந்தனைகளையும் கீழே பாருங்கள்.

முஸ்லிம்களின் இலக்கு 1 :

இந்தியாவை காஷ்மீரோடு இணைக்க வேண்டும் (காஷ்மீரை இந்தியாவோடு அல்ல!)

சு.சாமியின் திட்டம் :

370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற இரா ணுவ வீரர்களை பள்ளத்தாக்கு பகுதியில் நியமிக்க வேண்டும். இந்து பண்டிட் சமுதாயத்திற்காக பனூன் காஷ்மீரை உருவாக்க வேண்டும். முடிந்தால் பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். பாகிஸ்தான், தீவிரவா திகளை அனுப்பினால் - பாகிஸ் தான் பழங்குடி இனத்தவரான பலூச்சிகள், சிந்திகளை துணை யாகக் கொண்டு அவர்களுக்கு சுதந்திர பூமியைப் பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும்.

முஸ்லிம்களின் இலக்கு 2 :

கோவில்களில் குண்டு வெடிப்பை நடத்தி இந்து பக்தர் களை கொல்ல வேண்டும்.

சுவாமியின் செயல் திட்டம் :

காசி விஸ்வநாதர் கோவிலருகி லுள்ள மஸ்ஜிதை (கியான் வாபி மஸ்ஜித்) அகற்ற வேண்டும். ஏனைய பகுதிகளில் கோவிலுக்கு அருகே இருக்கும் 300க்கும் மேறப்பட்ட பள்ளிகளை அப்பு றப்படுத்த வேண்டும்.

முஸ்லிம்களின் இலக்கு 3 :

இந்தியாவை தாருல் இஸ்லா மாக (இஸ்லாமிய நாடாக) மாற்ற வேண்டும்.

சுவாமியின் செயல்திட்டம் :

பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும். முஸ் லிம்களை சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளவும், வந்தே மாதரம் பாடவும் கட்டாயப்படுத்த வேண் டும். இந்தியா இந்துக்களின் நாடு என்று அறிவிக்க வேண்டும்.

இந்து அல்லாதவர்கள் அவர்க ளுடைய முன்னோர்கள் இந்துக் கள்தான் என்று பெருமையோடு ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்களுக்கு வாக்களிக்க உரிமை வழங்க வேண்டும். இந் துக்களின் தேசம் என்று பொருள் படும்படி இந்தியாவின் பெயரை இந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும்.

முஸ்லிம்களின் இலக்கு 4:

சட்டவிரோத குடியேற்றம், மதமாற்றம், குடும்ப கட்டுப் பாட்டை மறுப்பது ஆகியவற் றின் மூலம் இந்தியாவில் (முஸ்லிம்) மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும்.

சுவாமியின் செயல்திட்டம் :

இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மதம் மாறுவதை தேசிய அளவில் சட்டமியற்றி தடை செய்ய வேண்டும். வேறு மதத்திலிருந்து மீண்டும் இந்து மதத்திற்கு மாறுவதை தடை செய்யக் கூடாது. சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல; ஒழுக்கம் மற்றும் கொள்கை சிந் தாந்தங்களின் அடிப்படையில் தான் என்று அறிவிக்க வேண்டும்.

இந்து அல்லாதவர்கள் மீண் டும் இந்து மதத்திற்கு திரும்பி னால் அவர்கள் விரும்பும் சாதி யில் அவர்களது ஒழுக்கம், கொள்கை சித்தாந்தங்களின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். (சுவாமி ஐயர் ரொம்ப விவரமாக பிரா மண சமூகத்தில் சேர்த்துக் கொள்ள தவிர்ப்பதைப் பாருங் கள்.) பங்களாதேஷிலிருந்து சட்ட விரோதமாக எல்லைப்புறத் தில் குடியேறியுள்ள முஸ்லிம் களை, பங்களாதேஷிலிருந்து குறிப்பிட்ட நிலப் பரப்பை கைய கப்படுத்தி அங்கு அவர்களை குடியேற்றவேண்டும்.

(அகண்ட பாரதத்திற்கு அடி போடுகிறார் ஐயர்) பங்களாதே ஷின் சில்ஹெட் முதல் குல்னா வரையிலான வடக்குப் பிரதே சத்தை ஆக்கிரமித்து தற்காலிக மாக சட்ட விரோத குடியேறி களை அங்கு வைக்க வேண்டும்.

முஸ்லிம்களின் இலக்கு 5 :

மோசமான எழுத்துக்கள் மூலம் இந்துயிசத்தை கொச்சைப் படுத்த வேண்டும். மசூதிகளில் பிரச்சாரம், மதரஸôக்கள், சர்ச்சுக ளின் ஆகியவற்றை பயன்படுத்தி இந்துக்களின் சுய மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்த வேண்டும். அவர்களை சரணாகதிக்கு தயார் படுத்த வேண்டும்.

சுவாமியின் செயல் திட்டம் :

இந்து மனநிலையை ஊக்கப்ப டுத்த வேண்டும். மேற்கண்ட செயல்திட்டங்கள் மூலம் 5 வரு டத்திற்குள் பயங்கரவாதப் பிரச்சி னையை தீர்த்து விட முடியும். நாம் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஹிட்லரின் தாக்குதலுக் குப்பின் 10 வருடங்களில் யூதர்களால் கம்பீரமாக எழுந்து நிற்க - எதையும் எதிர்கொள்ள முடிகிற தென்றால் இந்துக்களுக்கு அது கடினமல்ல. இந்தியா வில் இந்துக்கள் 83 சதவீதம் இருக்கின்றன. 5 வருடத்தில் சரிக்கட்டி விடலாம்.

எதற்கும் அஞ்சாத வெறும் ஐந்து பேரை ஆன்மீகத்தின் துணையைக் கொண்டு சமுதாயத் தையே மாற்றிக் காட்டிய குரு கோவிந்த் சிங் நமக்கு பாடமாக இருக்கிறார். இந்துக்களில் பாதி பேராவது ஒன்றுபட்டு இந்து பிரதிநிதிக்கு வாக்களித்தால், இந்து கட்சிகள் இந்துத்துவ அஜண்டாவை தூக்கிப் பிடித் தால் மாற்றத்தை ஏற்படுத்த முடி யும்...'' இப்படியெல்லாம் மனம் போனபடி பிதற்றியிருக்கிறார் சுப்பிர மணிய சுவாமி.

இந்துக்களை தூண்டிவிட்டு, தேசிய ஒற்றுமைக்கும் தேசப் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளை விக்கும் வகையில் கட்டுரை எழு தியுள்ள சுப்பிரமணிய சுவாமி மீது இந்திய அரசு தேசப் பாது காப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

இந்தியாவில் எந்த முஸ்லிமுக் கும் - எந்த இஸ்லாமிய அமைப் புகளுக்கும் - இவர்கள் தீவிரவாத அமைப்புகளாக சித்தரிக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் கூட சுப்பிரமணிய சுவாமி கூறு வதைப் போன்ற எந்தவித இலக் கும் இல்லை என்பது யதார்த்த உண்மை.

கனவு கண்டு விட்ட இப்படி எழுதியிருக்கிறாரோ - அல்லது சுவாமிக்கு மனநிலை பாதிக்கப் பட்டு விட்டதோ என்று எண் ணத் தோன்றுகிறது.

75 சதவீத இந்துக்களைக் கொண்ட நாட்டில் 800 வருடங் கள் இஸ்லாமியர்கள் கொடுங் கோல் ஆட்சி நடத்தினார்களாம்.

சுப்பிரமணிய சுவாமிக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என் பதை நிரூபிக்க அவரது இந்தக் குற்றச்சாட்டே போதுமானது.

800 ஆண்டுகள் என்பது சாதாரண காலகட்டமல்ல. மிக நீண்ட நெடிய காலகட்டம் அது. 800 ஆண்டுகள் வரை - அதுவும் பெரும்பான்மை கொண்ட ஒரு சமுதாயத்தை எண்ணிக்கையில் மிகச் சிறிய அளவிலிருந்த முகலா யர்கள் ஆண்டார்கள் என்பது - அவர்களது நீதியான ஆட்சிக்கு சான்றல்லவா? இந்துக்களை அவர்கள் துன்புறுத்தவில்லை; இந்துக்கள் மீது கொடுமை புரிய வில்லை; அவர்களை கட்டாய மத மாற்றத்திற்கு உட்படுத்த வில்லை என்பதை இதிலிருந்தே விளங்க முடியவில்லையா?

முகலாயர்களுக்குப் பின் வந்த பிரிட்டிஷார் 150 வருடங்கள் ஆட்சி செய்தனர். அதற்குள் அவர் களை விரட்டியடிக்க சுதந்திரத் தாகத்தோடு போராட்டம் நடத் திய பெரும்பான்மை இந்துக்கள் 800 ஆண்டு கால ஆட்சி கொடுமைக்குரியதாக இருந்தி ருந்தால் அதை சகித்துக் கொண் டிருந்திருப்பார்களா? ஏன் மவுன மாக இருந்தார்கள் முகலாயர் ஆட்சியில்?

அவர்களுக்கே தெரிந்திருந்தது இந்து மன்னர்களின் ஆட்சியை விட முஸ்லிம்களின் ஆட்சி நிர்வாகம் சீரானது, நீதியானது, கொடுங்கோலற்றது, சகிப்புத் தன்மை மிக்கது என்று!

இன்றுவரை பழமை வாய்ந்த பல்லாயிரம் கோவில்கள் கம்பீர மாக நின்று கொண்டிருப்பது- முஸ்லிம் ஆட்சியாளர்கள் மத வெறி கொண்டவர்களல்ல; அவர் கள் அப்படி நினைத்திருந்தால் 800 ஆண்டுக ளில் பல்லாயிரம் கோயில்களை இடித்து தரைமட்ட மாக்கி இருப்பார்கள் என்பதற்கு சாட்சிதானே!

வரலாற்றைப் பற்றிய அறிவோ, பகுத்தறிவோ இல்லாத சு.சாமி ஹாவர்டு பல்கலைக் கழ கத்தில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கி றார் என்பது கேவலமல்லவா?

இவரது இந்த கட்டுரையைப் பார்த்த ஹாவர்டு பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் சு.சாமி மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வருகிறது. மும்பாய் சிறுபான்மை கமிஷனும் சு. சாமியை கண்டித்திருக்கிறது. தமிழக இஸ் லாமிய அமைப்புகளும் இவரது கயமைத்தனத்தை கண்டித்து கள மிறங்கியுள்ளன.

சு. சாமி எழுதிய அயோக்கியத் தனமான கட்டுரையை முன்னணி ஏடுகள் பிரசுரிக்கவில்லை என் பது ஆறுதலான விஷயம்தான். அதே சமயம், மதவெறி தலைக் கேறியுள்ள சு. சாமியை மீடியாக் கள் அலட்சியப்படுத்த வேண்டும். இதுவே தேச நலனுக்கு மீடியாக் கள் செய்யும் அரும்பணியாக இருக்கும்.

ஜனநாயக சக்திகளும், அறிவு ஜீவிகளும், பத்திரிகையாளர்க ளும் சு. சாமியின் இந்த அயோக் கியத்தனத்தை கண்டிக்க முன் வர வேண்டும். இந்தியாவின் ஒற்று மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர் சுப்பிரமணிய சாமி என்பதை மத் திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

- பைஸ்

Pin It