தேசபந்து தாசர் காலஞ் சென்றதும் ஸ்ரீ பாபு அரவிந்தரை, தாசரின் தலைமைப்பதவி யேற்றுக்கொண்டு தேசத்தை நடத்தும்படி பலர் வேண்டுவதாய்த் தெரிகின்றது. அரவிந்த கோஷர் தலைமை வகித்து தேசத்தை நடத்துவதற்கு மிகவும் தகுதியுள்ளவர் என்பதை எவரும் மறுக்கமாட்டார். ஆனால் காந்தியடிகள் உழுது செய்னேத்தி செய்து வைத்திருக்கும் நிலத்தில் அரவிந்தரின் விளை முளைப்பது கடினம். அரவிந்தர் வருவாராயின் இந்தியா முழுவதும் மறுபடியும் ஓர் முறை உழுது அவரது விதைக்கேற்றவாறு பண்படுத்தவேண்டும். காந்தியடிகளின் திட்டம் முற்றிலும் பயனற்றதாகி காந்தியடிகளே இந்தத் திட்டத்திற்கு இந்தியா ஏற்றதல்ல என விலகிவிட்டால் மாத்திரம், அரவிந்தர் முதலியோர் தாராளமாக வரலாம். வந்துதான் ஆக வேண்டும். இப்பொழுது அரவிந்தர், காந்தியடிகள் இருவரும் தேசத்தை நடத்துவார்களாயின், பசுவையும், புலியையும் ஓர் வண்டியில் கட்டி ஓட்டுவது போல் தான் ஆகும். காந்தியடிகளே அரவிந்தரை அழைக்கிறாரெனின் அது ஒரு கோமாளி வேடமன்றி வேறல்ல.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.06.1925

Pin It