முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், இந்தியக் கிறித்தவர்கள், ஆங்கிலோ – இந்தியர்கள், ஐரோப்பியர்கள் முன்வைத்த வகுப்புப் பிரச்சினைக்கான தீர்வின் ஷரத்துக்கள் சிறுபான்மை வகுப்பினரின் கோரிக்கைகள்

ambedhkar 4001. எந்த ஒரு நபருக்கும் அவரின் பிறப்பு, மதம் சாதி அல்லது சமயக்கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அரசாங்கப் பணி, அதிகார அல்லது கௌரவப் பதவி வகித்தல் அல்லது அவர்தம் குடி யியல் உரிமைகளை அனுபவித்தல் அல்லது ஏதேனும் வணிகம் அல்லது வாழ்க்கைத் தொழில் மேற்கொள்ளுதல் குறித்து எவ்விதத் திலும் பாரபட்சம் காட்டப்படக்கூடாது.

2. எந்த ஒரு வகுப்பாரையும் பாதிக்கத்தக்க வகையில் சட்ட மன்றத்தால் இயற்றப்படும் பாகுபாட்டுச் சட்டங்களுக்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான சட்டரீதியான காப்பு விதிகள் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

3. பொதுமக்களின் அமைதி மற்றும் ஒழுக்கப் பண்பு ஆகிய வற்றின் பராமரிப்புக்குட்பட்டு அனைத்து வகுப்பாருக்கும் முழுமை யான சமய சுதந்திரத்திற்கு அதாவது முழுமையான நம்பிக்கை, வழி பாட்டுச் சுதந்திரத்திற்கும், சடங்குகளைக் கடைப்பிடித்தல், பிரச் சாரம், ஒன்றாகக் கூடுதல், மற்றும் கல்வி ஆகியவற்றிற்கான சுதந் திரத்திற்கும் உத்திரவாதமளிக்க வேண்டும். 

சமய மாற்றத்தினாலேயே ஒருவர் யாதொரு குடியியல் உரிமையை அல்லது சலுகையை இழக்கவோ அல்லது தண்டனைக் குள்ளாகவோ கூடாது.

4. சிறுபான்மையினர் தங்களின் சொந்தச் செலவிலேயே அறநிலையங்கள், சமய மற்றும் சமூக நிலையங்கள், பள்ளிகள் மற்றும் இதரக் கல்வி நிறுவனங்கள் நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற் கும், கட்டுப்படுத்துவதற்கும், அவற்றில் தங்களின் சமய உரிமையை மேற்கொள்வதற்குமான உரிமை.

5. சிறுபான்மை வகுப்பாரின் மதம், பண்பாடு இனமுறைச் சட்டம் ஆகியவற்றின் பாதுகாப்பிற்காகவும், கல்வி, மொழி, அற நிலையங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகவும் அர சாங்கமும், தன்னாட்சி உறுப்புகளும் அளிக்கும் மான்யங்களில் அரசியல் நிர்ணய வகுப்பினர்க்குரிய பங்கினைப் பெறுவதற்காகவும் அரசியல் நிர்ணய சட்டத்தில் போதுமான அளவுக்குக் காப்பு விதிகள் உருவமைக்கப் பட வேண்டும்.

6. எல்லாக் குடிமக்களும் குடியியல் உரிமைகளை முழுமை யாக அனுபவிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதைத் தடுத்திடும் நோக்குடன் செயல்படும் எந்தச் செயலையும் அல்லது கடமைப் புறக்கணிப்பினையும் சட்டத்தினால் தண்டிக்கப்படக் கூடிய குற்ற மாக்க வேண்டும்.

7. மத்திய, மாகாண அரசுகளில் அமைச்சரவைகளை அமைக் கும்போது முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர்களையும் கணிச மான எண்ணிக்கையில் உள்ள இதர சிறுபான்மை வகுப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும் இயன்ற அளவுக்கு அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது ஒரு மரபாக்கப்பட வேண்டும்.

8. சிறுபான்மையினர்களின் பாதுகாப்பிற்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் மத்திய மற்றும் மாகாண அரசுகளில் சட்ட முறையான துறைகள் அமைக்கப்பட வேண்டும்.

9. எந்த ஒரு சட்டமன்றத்திலும் நியமனம் அல்லது தேர்தல் மூலமாகத் தற்போது பிரதிநிதித்துவத்தினை அனுபவித்துக் கொண் டுள்ள அனைத்து வகுப்பாரும் தனி வாக்காளர் தொகுதிகள் மூல மாக அனைத்துச் சட்டமன்றங்களிலும் பிரதிநிதித்துவம் பின் னிணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தைக் காட்டிலும் குறை வாக இருத்தல் கூடாது. ஆனால் எந்தப் பெரும்பான்மையினரும்

ஒரு சிறுபான்மையினராகக் குறைக்கப்படவோ அல்லது சமநிலைக் குக் கூடக் கொண்டு வரப்படவோ கூடாது. ஆயினும் பத்து ஆண்டு கள் முடிவுற்ற பிறகு பஞ்சாபிலும் வங்காளத்திலும் உள்ள முஸ்லீம் களும் வேறெந்த மாகாணங்களிலும் உள்ள சிறுபான்மை யினரும் கூட்டு வாக்காளர் தொகுதிகளையோ அல்லது இட ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டு வாக்காளர்களையோ ஏற்பது அவர்களின் விருப்பத் திற்குட்பட்டது. அதே போன்று பத்தாண்டுகள் முடிவுற்ற பிறகு மத்திய சட்டமன்றத்தில் யாதொரு சிறுபான்மையினரும் சம்பந்தப்பட்ட ஒப்புதலோடு இடஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டு வாக்காளர் தொகுதி களையோ ஏற்பது அவர்களின் விருப்பத்திற்குட்பட்டதாக ஆக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட வகுப்பினரைப் பொறுத்த வரையில் தனி வாக் காளர் தொகுதி முறையினைக் கையாண்டு இருபது ஆண்டுக் கால அனுபவத்திற்கு முன்பும், அதுவும் அந்த வகுப்பாரின் வயது வந்தோர் அனைவருக்கும் நேரிடையான வாக்குரிமை நிறுவப்படும் வரையில் கூட்டவாக்காளர் தொகுதிகளுக்கும் இட ஒதுக்கீட்டு முறைக்கும் மாற்றமேதும் செய்யப்படக்கூடாது.

10. ஒவ்வொரு மாகாணத்திலும் மத்திய அரசைப் பொறுத் தும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட வேண்டும். தலைமை ஆளுநர் அல்லது ஆளுநர்களால் நியமனம் மூலமாக நிரப்பட்ட வேண்டிய ஒதுக்கப்பட்ட இடங்கள் ஏதேனும் இருக்கு மாயின் அந்த இடங்களின் விகிதத்தைத் தவிர்த்து, எஞ்சியுள்ள அரசுப் பணிகளுக்கான ஆள் எடுப்புப் பணி, அந்தந்தத் தேர்வாணை யத்தால்தான் செய்யப்பட வேண்டும். திறமை மற்றும் தேவையான தகுதிகளின் முக்கியத்துவத்திற்கு ஒத்த முறையில் பல்வேறு வகுப்பார் நியாயமான அளவு பிரதிநிதித்துவம் பெற்றிடும் விதத்தில் அத்தகைய தேர்வு செய்யப்பட வேண்டும். தலைமை ஆளுநருக்கும் மற்றும் ஆளுநர்களுக்கும் வழங்கப்படும் அறிவுறுத்தல் பத்திரத்தில் இக் கொள்கைகளை நிறைவேற்றுதற்குரிய அறிவுறுத்தல்கள் சேர்க்கப்பட வேண்டும். அக்காரணத்திற்காக பணிகளின் கூட்டமைவினை அவ் வப்போது மறுசீராய்வு செய்திட வேண்டும்.

 

_____

சபையின் பலம்

இந்துக்கள்

முஸ்லீம் கிறித்தவர் சீக்கியர் ஆங்கிலோ- இந்தியர்

மலை வாழினத்தார்

ஐரோப்பியர்
சாதி இந்து ஒடுக்கப் பட்டோர் மொத்தம்
இந்தியா முழுமையாக (1931) மேலவை…

200

(47.5)

(19)

(66.5)

(21.5)

1

6

1

4

101 20 121 67

கீழ்சபை…

 

300

123

45

168

100

7

10

3

12

அசாம்…

 

100

(48.9) (13.4) (62.3) (34.8)

3

1

10

38 13 51

35

வங்காளம்…

 

200

(18.3) (24.7) (43) (54.9)

2

3

20

38 35 73 12

பீகாரும் ஒரிசாவும்….

 

100

(67.8) (14.5) (82.3) (11.3)

1

1

3

5

51 14 65 25

பம்பாய் …

 

200

(68) (8) (76) (20) 2 3 13
88 28 116 66

மத்திய மாகாணங்கள்

 

100

(63.1) (23.7) (86.8) (44) 1 2 2

2

58 20 78 15

சென்னை…

 

200

102 40 142 30 14   4 2 8
(71.3) (15.4) (86.7) (7.1) (3.7)

பஞ்சாப்…

 

100 (15.1) (13.5) (28.6) (56.5) (13) 20 1.5 2
14 10 24 51 1.5

ஐக்கிய மாகாணங்கள்…

 

100

(58.1) (26.4) (84.5) (14.8)   2 3
44 20 64 30 1

11. சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்படும் ஒரு மசோதா எந்தச் சட்டமன்றத்திலாவது ஒரு குறிப்பிட்ட வகுப்பாரைப் பிரதி நிதித்துவம் செய்யும் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கினர் கருத்துப்படி அந்த வகுப்பாரின் சமயத்தையோ அல்லது சமயத்தின் அடிப்படையிலான சமூகப்பழக்கத்தையோ பாதிக்கத்தக்க அல்லது அடிப்படை (ஜீவாதார) உரிமைகளை பாதிக்கத்தக்க மசோதாவாக இருக்குமானால், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அதற்கு ஆட் சேபம் தெரிவிப்பதாயின் சட்டமன்ற்றத்தினால் அம்மசோதா நிறை வேற்றப்பட்ட நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள்ளாக அவைத் தலைவருக்குத் தங்களின் ஆட்சேபங்களை சமர்ப்பிக்கும் உரிமை உண்டு.

அவைத்தலைவர் அந்த ஆட்சேபங்களில் தன்மைக்கேற்ற வாறு அவற்றை தலைமை ஆளுநருக்கோ அல்லது ஆளுநருக்கோ அனுப்பி வைக்க வேண்டும். அதன்பின் தலைமை ஆளுநர் அல்லது ஆளுநர் அம்மசோதாவின் செயற்பாட்டினை ஓராண்டுக் காலத்திற்கு நிறுத்தி வைத்து அந்த ஓராண்டு முடிவுற்ற பிறகு அம் மசோதாவை அச்சட்டமன்றம் மேலும் கவனிக்க வேண்டியதற்காகத் திருப்பி அனுப்ப வேண்டும்.

அம்மசோதா சட்டமன்றத்தினால் மேலும் கவனிக்கப்பட்டு ஆட்சேபங்களுக்கான குறைகளை நீக்கிடவோ, திருத்தியமைக்கவோ சட்டமன்றம் மறுத்தால் ஆளுநர் அல்லது தலைமை ஆளுநர் தமது சம்மதத்தை அளிக்கும் விருப்புரிமையைப் பயன்படுத்தி மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது மறுக் கவோ செய்யலாம். மேலும் தங்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றினை அம்மசோதா மீறுவதாக உள்ளது என்ற காரணத்தினடிப் படையில் அதன் மூலம் பாதிக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த இரண்டு உறுப்பினர்கள் அச்சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மையை உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கலாம்.

முஸ்லீம்களின் சிறப்புரிமைக் கோரிக்கைகள்

அ. வடமேற்கு எல்லை மாகாணம் மற்றா மாகாணங்களைப் போல், ஆனால் அது ஒரு எல்லை மாகாணமாய் இருப்பதால் அதற்கு வேண்டிய பாதுகாப்புகளுடன், ஒரு ஆளுநரின் மாகாணமாக அமைக்கப்பட வேண்டும். மாகாணச் சட்டமன்ற அமைப்பில் நியமனம் மொத்தத்தில் 10 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாகக் கூடாது.

ஆ. பம்பாய் மாநிலத்திலிருந்து சிந்து பிரிக்கப்பட்டுப் பிரிட் டீஷ் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே மற்றும் அவைகளின் அடிப்படையிலேயே ஒரு ஆளுநரின் கீழான மாகாண மாக்கப்பட வேண்டும்.

இ. மத்திய சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் மூன்றில் ஒரு பங்காக இருக்க வேண்டும். மத்தியச் சட்டமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் பின்னிணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தை விடக் குறைவாக இருக்கக் கூடாது.

ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் சிறப்புரிமைக் கோரிக்கைகள்

அ. நாட்டின் எந்தக் குடிமகனும் குடியியல் உரிமையை அனுபவிப்பதில் தீண்டாமையின் காரணமாக வழக்காறு அல்லது பழக்கமரபு ஆகியவற்றால் திணிக்கப்படும் எவ்விதமான தண்ட்த் தொகையோ, தீங்கோ அல்லது குறைபாடோ அல்லது குடிமகனுக்கு எதிரான பாகுபாடோ இருக்குமாயின் அது சட்டப்படிச் செல்லாதது என அரசியலமைப்புச் சட்டம் உறுதியாக அறிவிக்க வேண்டும்.

ஆ. ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து அரசுப் பணிகளுக்கு ஆள் எடுப்பதிலும், காவல் மற்றும் படைத்துறை பணிகளில் சேர்த்துக் கொள்ளும் நல்வாய்ப்பினை நல்குவதிலும் தாராளமான கவனிப்பு வேண்டும்.

இ. பஞ்சாப் நில உடைமை மாற்றச் சட்டத்தின் பலன் பஞ்சாபிலுள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும்.

ஈ. எந்த ஒரு நிர்வாக அதிகாரியின் காழ்ப்புணர்வு நடவடிக்கை யினாலோ அல்லது நலப்புறக்கணிப்புச் செயலினாலோ பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தம் குறைகள் களையப்படுவதற்காக ஆளுநருக்கோ அல்லது தலைமை ஆளுநருக்கோ மேல்முறையீடு செய்யும் உரிமை வேண்டும்.

உ. ஒடுக்கப்பட்ட வகுப்பினர் பின்னிணைப்பில் குறிப்பிடப் பட்டுள்ள அளவுக்குக் குறையாத பிரதிநிதித்துவத்தினைப் பெற வேண்டும்.

ஆங்கிலோ – இந்திய வகுப்பினரின் சிறப்புரிமைக் கோரிக்கைகள்

அ. ஆங்கிலோ – இந்திய வகுப்பினரின் தனி இயல்பான தன்மையைக்  கருதி அவர்கள் போதுமான வாழ்க்கைத் தரத்தை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு அரசு உத்தியோகத்தில் பிரத்தி யேக முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் துணைக் குழு எண் – 8 (பணிகள்) ஏற்றுக் கொண்ட உரிமைக் கோரிக்கைகளுக்குத் தாராள மான விளக்கம் அளிக்க வேண்டும்.

ஆ. தமது சொந்தக் கல்வி நிறுவனங்கள் (அதாவது, ஐரோப் பியக் கல்வி முறை) அமைச்சரின் கட்டுப்பாட்டிற்குட்பட்டு தாங்களே நிர்வகிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான உரிமை. 

தற்போதுள்ள மான்யங்களில் அடிப்படையில் தாராளமான மற்றும் போதுமான மான்ய உதவிக்கும் உதவித் தொகைக்கும் உரிய ஏற்பாடுகள்.

இ. சட்டப்படியான நிலை மற்றும் பரம்பரைக்கான நிரூபணம் தேவையெனும் நிபந்தனையின்றி இந்தியாவிலுள்ள மற்ற வகுப் பினர் அனுபவிக்கும் முறைகாண் ஆயத்திற்கு (வழக்கின் சான்றுகளை ஆராய்ந்து தங்களின் தீர்ப்பினை அளிப்பவர்கள், சமமான உரிமை யும், குற்றம் சாட்டப்படும் நபர்கள் ஒரு ஐரோப்பிய அல்லது இந்திய முறை காண் ஆயத்தால் விசாரிக்கப்படுவதற்குமான உரிமையும்.

ஐரோப்பிய இனத்தவரின் சிறப்புரிமைக் கோரிக்கைகள்

அ. தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளில் (செயல்களில்) இந்தியர்களாகப் பிறந்திட்ட குடிமக்களைப் போலவே உரிமைகளையும் உரிமைப் பேறுகளையும் சம்மாக அனுபவிக்கும் உரிமை.

ஆ. தற்போது நடைமுறையில் உள்ள குற்றவிசாரணை முறை யில் உள்ள உரிமைகளைத் தொடர்வது, அத்தகைய நடைமுறை யினைத் திருத்தம் செய்வதற்கோ மாற்றியமைப்பதற்கோ அல்லது சிறுமாற்றம் செய்வதற்கோ ஏதேனும் நடவடிக்கையை அல்லது மசோதாவை தலைமை ஆளுநரின் முன்கூட்டிய ஒப்புதலின்றிச் சட்டமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கூடாது.

மேதகு ஆகா கான் (முஸ்லீம்கள்)

டாக்டர் அம்பேத்கர் (தாழ்த்தப்பட்ட வகுப்பினர்)

ராவ் பகதூர் பன்னீர் செல்வம் (இந்தியக் கிறித்தவர்கள்)

சர் ஹென்றி கித்னே (ஆங்கிலோ- இந்தியர்கள்)

சர் ரோபர்ட்கார் (ஐரோப்பியர்கள்) 

("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, பின்னிணைப்பு 3)