ambedkar 220 V

கீழ்மட்ட வகுப்பினரின் ஆதரவாளன், பாதுகாவலன் என்று காங்கிரஸ் தன்னைக் கூறிக்கொள்கிறது; இந்தக் கூற்றில் வாய்மை யும் நேர்மையும் இருக்குமானால், ஆதிக்க வகுப்பினர்களின் அதி காரத்தை அழித்தொழிக்க அது என்ன நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கூறுவதற்கு காங்கிரஸ் முன்வர வேண் டும். 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் மகத் தான வெற்றி பெற்றுவிட்டதாகக் கூரை மீதேறி நின்று திரும்பத் திரும்பத் கூவப்படுகிறது. இதிலுள்ள உயர்வு நவிற்சியை ஒதுக்கி வைத்துவிட்டு எவரும் பின்வரும் கேள்வியைக் கேட்கக்கூடும்:  

காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்பது உண்மைதான், ஆனால் இந்திய மக்களில் வாகைப்பதக்கத்தைத் தட்டிச் சென்றவர்கள் எந்த வகுப்பினர்? துரதிர்ஷ்டவசமாக எந்த இந்தியப் பத்திரிகையாளரும் டோடின் நாடாளுமன்றக் கையேடு போன்ற எதையும் தயாரிக்க வில்லை. இதன் விளைவாக, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களது சாதி, தொழில், கல்வி, சமூக அந்தஸ்து போன்றவை குறித்துத் துல்லியமான விவரங்கள் கிடைக்கவில்லை. இது மிக முக்கியமான விஷயம்.

எனவே, 1937- ஆம் ஆண்டுத் தேர்தல்களில் மாகாண சட்டமன்றங்களுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் குறித்த இந்த விவரங் களைச் சேகரிக்க முற்பட்டேன். ஒவ்வொரு உறுப்பினர் குறித்த துல் லியமான விவரங்களைச் சேகரிப்பதில் நான் வெற்றி பெறவில்லை. இதனால் பல உறுப்பினர்களை வகைப்படுத்தப்படாதவர்களாக விட்டு விட நேர்ந்தது. எனினும் என்னால் திரட்ட முடிந்த தகவல்கள் காங்கிரஸ் வெற்றி பற்றி சில உண்மைகளை வெட்ட வெளிச்ச மாக்குகிறது; இந்திய மக்களின் சுதந்திரத்தையும் சுபிட்சத்தையும் பொறுத்த வரையில் இந்த வெற்றியின் பொருள் என்ன என்பதையும் காட்டுகிறது.

காங்கிரஸ் சார்பில் மாகாண சட்ட மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராமணர்கள், பிராமணரல்லாதோர், ஷெட்யூல்டு சாதியினரின் விகிதாசாரத்தை அட்டவணை 18  காட்டுகிறது.

அட்டவணை – 18

மாகாண சட்டமன்றங்களில் சாதி வாரியாக காங்கிரஸ் உறுப்பினர்களின் வகைப்பிரிவு

மாகாணம் பிராமணர்கள் பிராமண ரல்லாதோர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தகவல் அளிக்காதவர்கள் மொத்தம்

அசாம்

6 21 1 5 33

வங்காளம்

15 27 6 6 54

பீகார்

31 39 16 12 98

மத்திய மாகாணங்கள்

28 35 7 - 70

சென்னை

38 90 26 5 159

ஒரிசா

11 20 5 - 36

ஐக்கிய மாகாணங்கள்

39 54 16 24 133

இந்துக்களின் மொத்த மக்கட்தொகையில் பிராமணர்களின் விகிதாசாரம் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதை அறியாத வர்கள் காங்கிரஸ் தேர்தலில் பிராமணர்கள் பெற்றுள்ள பிரதிநிதித் துவத்தைப் புரிந்து கொள்வது சாத்தியமல்ல. ஆனால் இதை அறிந்த வர்கள் பிராமணர்கள் அவர்களுடைய எண்ணிக்கையின் விகிதாசாரத் தின் அடிப்படையில் நோக்கும்போது அபரிமிதமான பிரதிநிதித் துவத்தைப் பெற்றிருப்பதைப் புரிந்து கொள்வார்கள். 

பனியாக்கள், தொழிலதிபர்கள், நிலப்பிரபுக்கள் போன்ற செல்வளம் படைத்த வகுப்பினர்களுக்கு காங்கிரஸ் எந்த அள வுக்குப் பிரதிநிதித்துவம் அளித்திருக்கிறது? காங்கிரஸ் சார்பில் எத்தனை பனியாக்களும், வர்த்தக, தொழிலதிபர்களும், நிலப்பிரபுக் களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அட்டவணை 19 காட்டுகிறது.

அட்டவணை – 19

மாகாண சட்டமன்றங்களில் தொழில்வாரியாக காங்கிரஸ் உறுப்பினர்களின் வகைப் பிரிவு

மாகாணம் வழக்குரைஞர்கள் மருத்துவர்கள் நிலப் பிரபுக்கள் தொழிலதிபர்கள் வணிகர்கள்

தனியார் துறை அதிகாரிகள்

லேவா தேவிக் காரர்கள்

எப்பிரிவிலும் சேராதவர்கள்

தகவல் தராதவர்கள் மொத்தம்

அசாம்

16 2 2 1 - - 3 9 33

வங்காளம்

9 2 16 5 2 - 16 4 54

பீகார்

14 4 56 6 3 - 1 14 98

மத்திய மாகாணங்கள்

20

2

25

10

-

-

8

5

70

சென்னை

52 2 45 18 2 1 3 36 159

ஒரிசா

8 1 17 4 4 1 1 - 36

இங்கும் பனியாக்களும், நிலப்பிரபுக்களும், தொழிலதிபர் களும் பெற்றுள்ள பிரதிநிதித்துவம் மிகப்பெருமளவில் இருப் பதைப் பார்க்கிறோம். ஆதிக்க வகுப்பினர்களை எதிர்ப்பதற்குப் பதிலாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அந்த ஆதிக்க வகுப் பினர்களுக்கு உண்மையில் காங்கிரஸ் உதவியுள்ளது என்பதில் ஐயம் ஏதும் இருக்க முடியாது? தேர்தலில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றியில் மற்றொரு முக்கிய அம்சமும் இருக்கிறது. அதனை இங்கு அம்பலப்படுத்துவது அவசியம். காங்கிரஸ் அமைச்சரவைகளின் இயல்பு சம்பந்தப்பட்டது அந்த அம்சம்.

காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றுள்ள மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவைகளின் பிராமணர்களின் நிலை என்ன என்பதை அட்டவணைகள் 20, 21 லிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அட்டவணை – 20

காங்கிரஸ் மாகாணங்களில் அமைச்சரவைகளின் இயைபு

(இந்தியத் தகவல் ஏடு 1939 ஜூலை 15ஆம் தேதிய இதழில் பிரசுரித்தபடி 1939 மே மாதம் இருந்த நிலையை இந்த அட்டவணை காட்டுகிறது.)

 மாகாணம்

காபினட் அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை இந்துக்கள் அல்லாத அமைச்சர்களின் எண்ணிக்கை அமைச்சரவையின் இந்து அமைச்சர்கள்

 தாழ்த்தப்பட்ட வகுப்பினர்

 பிரதம மந்திரிகள்

மொத்தம் பிராமணர்கள் பிராமணர் அல்லாதவர்கள்

அசாம்

8 3 5 1 1 இல்லை பிராமணர்

பீகார்

4 1 3 1 1 1 பிராமணர்

பம்பாய்

7 2 5 3 2 இல்லை பிராமணர்

மத்திய மாகாணங்கள்

5

1

4

3

1

இல்லை

பிராமணர்

சென்னை

9 2 7 3 3 1 பிராமணர்

ஒரிசா

3 இல்லை 3 1 1 1 பிராமணர்

ஐக்கிய மாகாணங்கள்

6

2

4

4

இல்லை

இல்லை

பிராமணர்

அட்டவணை - 21

காங்கிரஸ் மாகாணங்களில் பார்லிமெண்டரி காரியதரிசிகளின் வகைப்பிரிவு

(1939 ஜூலை 15ஆம் தேதி இந்தியத் தகவல் ஏட்டிலிருந்து தொகுக்கப்பட்டது. கேள்விக்குறி பிராமணரா, பிராமணரல்லாதவரா என்பதை நிச்சயிக்க இயலாமையைக் குறிக்கிறது.)

மாகாணம் பார்லிமெண்டரி காரியதரிசிகளின் மொத்த எண்ணிக்கை இந்துவல்லாத பார்லிமெண்டரி காரியதரிசிகளின் எண்ணிக்கை இந்து பார்லிமெண்டரி காரியதரிசிகள்

மொத்தம்

பிராமணர்கள்

பிராமணர் அல்லாதவர்கள்

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்

அசாம்

இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை

பீகார்

8 இல்லை 8 2 5 1

பம்பாய்

6 இல்லை 6 1 5 இல்லை

மத்திய மாகாணங்கள்

இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை

சென்னை

8 1 7 3 4 1

ஒரிசா

3 இல்லை 3 ? ? இல்லை

ஐக்கிய மாகாணங்கள்

12 1 11 2 8 1

அனைத்து இந்து மாகாணங்களிலும் பிரதமர்களாக இருப் பவர்கள் பிராமணர்களே. எல்லா இந்து மாகாணங்களிலும் இந்துக் களல்லா அமைச்சர்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் அமைச்சரவை கள் முற்றிலும் பிராமணர்களைக் கொண்டவைகளாகவே இருப்பது தெரியவரும். பண்டித ஜவஹர்லால் நேருவின் சொந்த மாகாண மான ஐக்கிய மாகாணங்களில் முக்கியமாக இந்தக் காட்சியைக் காணலாம்.

இதற்கு மேலும், இந்தியாவில் பிராமணர்கள் ஆதிக்க வகுப்பினராக அமைந்துள்ளனர் என்பதில் ஐயம் ஏதும் உண்டா? சுதந் திரத்திற்காகப் போறாடுவதாக காங்கிரஸ் கூறுவது உண்மையில் ஆதிக்க வகுப்பின் சுதந்திரத்திற்காகப் போராடுவதையே குறிக்கிறது என்பதில் ஐயம் ஏதும் உண்டா? காங்கிரஸ்தான் ஆதிக்க வகுப்பு, ஆதிக்க வகுப்புதான் காங்கிரஸ் என்பதில் ஐயம் ஏதும் உண்டா? 1937ல் மாகாண சுயாட்சி வடிவத்தில் சுயராஜ்யம் வந்தபோது காங்கிர சானது ஆதிக்க வகுப்பினரை வெட்கக்கேடான முறையில் ஆட்சி பீடத்தினும், அதிகாரத்திலும் அமர்த்தியது என்பதில் ஐயம் ஏதும் உண்டா?

உண்மையைக் கூறுவதானால் ஆதிக்க வகுப்பினர்களை ஆட்சிபீடங்களிலும் அதிகாரத்திலும் காங்கிரஸ் அமர்த்தியது என்று கூறுவது குறைமதிப்பீட்ரையேயாகும்.உண்மையில் காங்கிரஸ் இதை விடவும் அதிகமாக செய்தது . இங்கும்கூட உண்மை விவரங்களை எடுத்துரைத்தாலன்றி காங்கிரஸ் என்ன செய்தது என்பதை மக்கள் நம்ப மாட்டார்கள். உண்மை என்னவென்றால் ஒரு வேட்பாளரைத் தெரிந்தெடுப்பதில் காங்கிரஸ் ஒரு திட்டவட்டமான கொள்கையைக் கடைப்பிடித்தது.எடுத்துக்காட்டாக, பிராமணர்கள் விஷ்யத்தில் மிக உயர்ந்த கல்வித்தகுதிகள் கொண்ட வேட்பாளருக்கு முன்னுரிமை அளித்து; அதே சமயம் பிராமணரல்லாதோர் மற்றும் ஷெட்யூல்டு வகுப்பினர் விஷயத்திலோ மிகக் குறைந்த கல்வித் தகுதிகள் கொண்ட வேட்பாளருக்கே முன்னிடம் அளித்தது. இது சம்பந்தமாக எவருக்கேனும் ஐயம் இருப்பின் அட்டவணை 22ல் இது தொகுத்துரைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

பிராமணர்கள் விஷயத்தில் பட்டதாரிகளுக்கும் பட்டதாரிகளல்லாதேருக்கும் இடையேயான விகிதாசாரம்  பிராமணரல்லாதோர் மற்றும் ஷெட்யூல்டு வகுப்பினர் விஷயத்தில் காணப்படுவதை விட மிக அதிகமாக இருப்பது தெளிவு. பட்டாதாரிகளுக்கும் பட்டதாரிகளல்லாதவர்களுக்கும் இடையேயான இந்த வேறுபாடு உண்மையில் சரியான நிலைமையை வெளிப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும், சரியாகக் கூறுவதானால், பிராமண பட்டதாரிகள் பெரிதும் புகழ்பெற்ற அனுபவமிக்க அரசியல் வாதிகள்; பிராமணால்லாத பட்டதாரிகளோ அனுபவமில்லாத பட்டதாரிகள், மேலும் இரணடாந்தர அரசியல்வாதிகள்.

மிகவும் கல்விகற்ற பிராமணர்களை தேர்தலில் தனது வேட்பாளர்களாக காங்கிரஸ் ஏன் தெரிந்தெடுக்கிறது? அதேசமயம் மிகவும் குறைந்த கல்வித் தகுதியே பெற்ற பிராமணரல்லாதோரையும் ஷெட்யூல்டு வகுப்பினரையும் தேர்தலில் தனது வேட்பாளராக ஏன் தெரிவு செய்கிறது?இந்தக் கேள்விக்கு ஓரே ஓரு பதிலைத் தான் என்னால் காணமுடிகிறது. காங்கிரஸ் உள்ள பிராமணரல்லாதோர் அமைச்சரவை அமைக்கும் வாய்ப்பைத் தடுப்பதற்கே இவ்வாறு செய்யப்படுகிறது.

கல்வி கற்ற பிராமணனைல்லாதவனை விட கல்வி கற்காத பிராமணனைல்லாதவனுக்கு இரண்டு அனுகூலங்கள் உண்டு. முதலாவதாக , கல்வி கற்ற பிராமணனை விட்டுவிட்டுத் தன்னைத் விசுவாசமாக நடந்து கொள்வான்; காங்கிரஸ் ஆட்சியிலுள்ள கல்வி கற்ற பிராமணரல்லாதோர் ஓன்று கூடி, ஆதிக்க வகுப்பினர்களது அரசாங்கத்துக்குப் பதிலாக தங்களது சொந்த அரசாங்கத்தை அமைக்க முற்படும்பட்சத்தில் ஆளும் வகுப்பினர்கள் அமைத்த காங்கிரஸ் அமைச்சரவைக்கு எதிராக இவன் இவர்களுடன் கைகோத்துக் கொண்டு கலகக்கொடி தூக்க மாட்டான். இரண்டாவதாக, பட்டப்படிப்பு படிக்காத அல்லது அத்தனை அனுபவமில்லாத பட்டதாரிகளான பிராமணரல்லாதோரை அதிக எண்ணிக்கையில தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முக்கிய நோக்கம் இருக்கிறது; அதாவது ஆதிக்க வகுப்பினர்களின் நலன்களுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் காங்கிரசிலுள்ள பிராமணரல்லாத பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து ஒரு மாற்று அமைச்சரவையை அமைத்திடாதபடி தடுப்பதே அந்த நோக்கம் .

காங்கிரஸ் எவ்வாறு தங்களை ஏமாற்றிவிட்டது என்பதையும் , காங்கிரசுக்குள் தங்களை ஈர்ப்பதன் மூலம் ஆதிக்க வகுப்பினரை ஆட்சி பீடத்திலும் அதிகாரத்திலும் நிரந்தரமாக அமர்த்த எவ்வாறு ஒரு மறைமுகமான முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டிருக்கிறது என்பதையும் காங்கிரஸ் மேற்கொண்டிருக்கிறது என்பதையும் காங்கிரசில் இருக்கும் பிராமணரல்லாதோர் அறிய மாட்டார்கள்.

("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 9)