நாஸி பயங்கரவாதத்தின் நினைவுச் சின்னமாக வர்ணிக்கப்படும் ஆஷ்விட்ஸ் பகுதி ஜெர்மானிய இராணுவத்தின் மிகப்பெரிய கொலைக்களன்களில் ஒன்றாக விளங்கியது. 1939 இல் போலந்தை வென்ற ஜெர்மானியப் படை போலந்திலிருந்து 286 கி.மீ.தொலைவிலிருந்த ஆஷ்விட்ஸில் அந்த கொலை முகாமை துவங்கியது. 1944 இல் ஜெர்மன் ஹோலோகோஸ்ட் ஒரு முடிவுக்கு வரும்போது சுமார் 40 லட்சம் பேர் ஆஷ்விட்ஸ் முகாம்களில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.