Fear

தேவைக்கு அதிகமா யாராவது பயந்தால் அதை பீதி என்பார்கள். உயரம், நீர்நிலைகள், கத்தி, ஊசி இப்படி சாதரண காட்சிகள்கூட சிலருக்கு பீதி கிளப்பிவிடும். மனப்பதற்றம்கூட ஒருவகையில் இதுபோன்றதுதான். சில்லரை விஷயத்திற்குக்கூட மிகுந்த பதற்றம் அடைவார்கள் சிலர். இவையன்றி விபத்து, சண்டை போன்ற சம்பவங்களில் சிக்கியவர்களுக்கும் அவற்றை மறக்க முடியாமல் திணறுவார்கள்.

மூளையில் மேடபோ ட்ரோபிக் குளுடாமேட் ரிசப்டார் 5 (mGlu5)என்று ஒரு புரதம் இருக்கிறது. இதில் பொருந்தி செயல்படும் பொருளுக்கு குளுட்டாமேட் என்று பெயர். இந்த ரிசப்டார் புரதத்தின் வேலை மறக்கடிக்கச் செய்வது. குறிப்பாக பயம் சம்மந்தமானவற்றை மறக்க ஏற்கனவே மூளை இந்த சாதனத்தை வைத்திருக்கிறது. சால்க் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஸ்டீபன் ஹெய்னிமேன் என்பவர் இந்த ரிசப்டார் புரதத்தை தக்க மருந்தால் தூண்டினால் பயத்தை எளிதில் போக்கிவிடலாம் என்று எலிகளிடம் நடத்திய சோதனை மூலம் கண்டுபிடித்துள்ளார்.

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்