விலங்கென்றும் பயிர்கள் என்றும் நாம் பிரித்தாலும், பைலுரூபின் போன்ற சில பொருள்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. பைலுரூபின், கல்லீரலில் ஹீமோகுளோபின் கெட்டு சிதையும்போது உருவாகும் ஆரஞ்சு நிறப் பொருள். இது மிருகங்களிடம் மட்டும்தான் காணப்படும்.

Bilirubin

சில குழந்தைகள் பிறக்கும்போதே இரத்தத்தில் நிறைய பைலுரூபினுடன் பிறக்கின்றன. ஜான்டிஸ் என்றுகூட இதைக் குறிப்பிடுவார்கள். ஃபோட்டோ தெராப்பி என்று சொல்லி லைட்டுக்குக் கீழே படுக்க வைத்து சிகிச்சை தருவார்கள்.  

இது பொதுவாக மிருகங்களிடம் காணப்படுவதால், யாரும் பைலுரூபினை செடிகளில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கேரி பைரோன் என்பவர் (ஃப்ளோரிடா மாகாணம்) பாரடைஸ் பறவை மரம் என்ற மரத்தின் விதைகளில் முளைத்துள்ள ரோமங்களில் இந்தப் பொருளைக் கண்டு வியந்தார். ஒரு பொருள் பயிரினங்கள் மிருக இனங்கள் இரண்டிலும் காணப்பட்டால் அப்பொருள் இரண்டு இனங்களும் தோன்றுவதற்கு முன்பே தோன்றியதாகக் கொள்ள வேண்டும். அப்படியானால் மிருகம், பயிரினம் என்று பிரிவதற்கு முன்பே இந்தப் பொருள் உலகில் உருவாகியிருக்க வேண்டும்.

- முனைவர் க.மணி