நம்மில் சிலபேர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம். இது ஏன் என்று தெரியுமா?

நமது மூளையின் வலப்பாகம் உடம்பின் இடதுபாக உறுப்புகளையும், இடப்பாகம் உடம்பின் வலதுபக்க உறுப்புகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கட்டளை பிறப்பித்து வருகிறது. பொதுவாக மனிதர்களில் 90 சதவீதம் பேருக்கு இடப்பக்கம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. எனவே அவர்கள் வலதுகை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு மூளையின் வலப்பாகம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அவர்கள் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.