ஆண்களின் முகத்தில் எது பெண்களை அதிகம் கவருகிறது என்று பென்ஸ்டேட் பல்கலைக்கழக பெண் ஆய்வாளர் சர்வே செய்து பார்த்தார். ஆண்களின் முகத்தை இரண்டாக வெட்டி (படத்தைத்தான்), பாதிகளை கொஞ்சம் நகர்த்தி, எந்த முகம் உங்களை அதிகம் கவருகிறது என்று விசாரித்தார்.

முழு முகத்தைப் பார்த்தால் பொதுவான அழகு அவர்களைக் குழப்பிவிடும் என்பதால் படத்தை இரண்டாக வெட்டிக் காட்டியதாகச் சொல்கிறார். பிளவு பட்ட முகத்தைப் பார்க்கும்போது முகத்தின் உறுப்புகளாகிய தாடை, கன்ன எலும்பு, உதடு போன்றவற்றின் மீது அதிகம் கவனம் செலுத்துவார்கள் என்பதால் இந்த ஏற்பாடு.

பொதுவாக ஆண்களின் உதடு, தாடை போன்றவை பெண்களை வசீகரிக்கிறது என்றும்; இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம் என்றும் ஆய்வாளர் கூறுகிறார்.

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்