இமயமலைப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகளில் ஒரு பகுதியினரிடம் விசித்திரமான வகையில் புகைப்பிடிக்கும் பழக்கம் காணப்படுகிறது. பாத்திரங்களுக்கு ஈயம் பூசுகிறவன் பூமியில் வளையிட்டுக் கொள்வது போல் மண்தரையில் இரண்டு துளைகள் போடப்படுகிறது. அந்த இரண்டு துளைகளும் ஒரு குழாயினால் இணைக்கப்படும். முதல் துளையில் புகையிலை எரியும்போது தரையில் படுத்தவாறு இரண்டாம் துவாரத்தில் வாயை வைத்து உறிஞ்சிப் புகையை உள்ளே இழுக்கிறார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு புகைப்பிடிக்கும் இந்த ஊரிலும் ‘செயின் ஸ்மோக்கர்கள்’ இருக்கிறார்கள் என்பது தான் இன்னும் ஆச்சர்யம்.