1.     கைக் கடிகாரம் வாங்கிய தேதியிலிருந்து அதன் பாட்டரி ஆயுளைக் கணக்கிடக்கூடாது. க‌டையிலிருந்த‌ நாட்க‌ளிலும் பாட்ட‌ரி ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கும் என்ப‌தை ம‌ற‌ந்துவிட‌ வேண்டாம்.

2.     பாட்டரியின் ஆயுட்காலம் முடிந்தவுடன் கைக் கடிகாரத்திலிருந்து உடனே அதை அப்புறப்படுத்த வேண்டும்.

3.     இரசாயனப் பொருட்களோ, வாயுக்களோ அதிகம் வெளிப்படும் இடங்களில் கைக் கடிகாரத்தைக் கட்டிக் கொண்டு வேலை செய்யக் கூடாது.

4.     கைக் கடிகாரத்திற்குள் நீர்க்கசிவு இருப்பது போல் தெரிந்தால் உடனடியாகச் சரி பார்க்க வேண்டும்.

5.     கைக் கடிகாரத்தை வோல்டேஜ் ஸ்டெபிலைசர் போன்ற காந்த சக்தி அதிகமுள்ள பொருள்களின் அருகில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.