உப்புத் தண்ணீர் படுவதால் மார்பிளில் கறை படியாது. ஹேர்டை போன்ற ராசாயனக் கலவைப்பட்டால் பிரவுன் நிற கறை படியும். உடனே தண்ணீர் ஊற்றி கழுவி இருந்தால் அது சுத்தமாகியிருக்கும். ஹார்டுவேர் கடைகளில் அம்ரி என்ற கல் கிடைக்கும். அதை அழுந்தத் தேய்த்துக் கழுவினால் கறை போய்விடும். கறை விழாவிட்டாலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அம்ரி கல்லால் சுத்தம் செய்தால் மார்பிள் பளிச்சென்று இருக்கும். மற்றவடி தினமும் குளியலறை வேலை முடிந்ததும் சுத்தமாக தண்ணீர் ஊற்றிக் கழுவினாலே போதும். குளிக்கும்போது சோப்பு உபயோகிப்பதால் தனியாக சோப்பு கரைசல் ஊற்றி கழுவ வேண்டியதில்லை. கண்டிப்பாக ஆசிட் பயன்படுத்தக் கூடாது. மார்பிள் பாலிஷ் நீங்கி சொரசொரப்பாகிவிடும்.