எலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மஞ்சள் காமாலை, கண்நோய் மற்றும் ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

ஒரு தே‌க்கர‌ண்டி எலு‌மி‌ச்சை சா‌ரி‌ல் ‌சி‌றிது தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச் சருமம் வழவழப்பாக இருக்கும். எலு‌மி‌ச்சை பழ‌ச்சாறு அல்லது தயிரை முக‌த்‌தி‌ல் கருமை படர்ந்த இட‌த்‌தி‌ல் தே‌ய்‌க்கவு‌ம். உலர்ந்த பிறகு கழு‌வினா‌ல் கருமை மாறு‌ம்.

எலு‌மி‌ச்சை சாறுட‌ன் ‌வி‌னிகரையு‌ம் சே‌ர்‌த்து உட‌லி‌ல் கறு‌ப்பான இட‌ங்க‌ளி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் ‌நிற‌ம் மா‌ற்ற‌ம் தெ‌ரியு‌ம்.

எலு‌மி‌ச்சை சாறை உண‌வி‌ல் ‌தினமு‌ம் சே‌ர்‌த்து வ‌ந்தா‌ல் முக‌த்‌தி‌ற்கு ந‌ல்லது. எலு‌மி‌ச்சை சாறு, ப‌ன்‌னீ‌ர், ‌கி‌ளிச‌ரி‌ன் ஆ‌கியவ‌ற்றை ச‌ரியான விகிதத்தில் கலந்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி வரவும்.

எலு‌மி‌ச்சை சாறு பிழி‌ந்த ‌பிறகு அத‌ன் தோலை தூ‌க்‌கி எ‌றியாம‌ல், எலு‌மி‌ச்சை தோலை‌ கை, கா‌ல் ‌விர‌ல் நக‌ங்களை ந‌ன்கு தே‌ய்‌த்து ‌வி‌ட்டா‌ல் நக‌ங்க‌ளி‌ல் படி‌ந்‌திரு‌ந்த அழு‌க்குக‌ள் வெ‌ளியே‌றி நக‌ம் ப‌ளி‌ச்செ‌ன்று மாறு‌ம்.