தேவையான பொருட்கள்
இறால் - 1/4 கி
மிளகாய்தூள் - 11/2 தேக்கரண்டி
மல்லிதூள் - 3 தேக்கரண்டி
பெரிய வாழைக்காய் - 1
தாளிப்பு வடகம் - பாதி உருண்டை
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
இறாலின் தலையையும் வால் நுனியையும் கிள்ளி எடுத்துவிட்டு கழுவி வைக்க வேண்டும். சிறிய இறாலாக இருந்தால் தோலைத் தேவையில்லை.
வாழைக்காயை வட்டமான துண்டங்களாக நறுக்க வேண்டும். ஒரு வாணலியில் 6 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வடகம் தாளிக்க வேண்டும். வடகம் பொரிந்ததும் இறால், வாழைக்காய், இரண்டையும் போட வேண்டும். மிளகாய்தூள், மல்லித்தூள், உப்பு சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். வறுவல் மிதமான ரோஸ்டானதும் இறக்கி பரிமாற வேண்டும்.