தேவையான பொருட்கள்:

பாறை மீன் பெரியதாக 4
மிளகாய்தூள் - இரண்டுகரண்டி
மஞ்சள்தூள் - ஒரு கரண்டி
அரைப்பதற்கு:
பச்சைமிளகாய் -50கிராம்
பூண்டு -10பல்
மிளகு - 2 தேக்கரண்டி
மல்லி பொதினா -தலா ஒருகைப்பிடி
வினிகர் - 4 கரண்டி

செய்முறை:
மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கீறி வைக்க வேண்டும். அரைக்கச் சொல்லியுள்ள பொருள்களை அரைக்க வேண்டும். மீனில் அரைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்க வேண்டும். அவெனை 280டிகிரி சூடாக்கி அதில் மீனை வைக்க வேண்டும். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போட வேண்டும். எல்லா தண்ணீரும் வற்றி இரண்டு பக்கமும் சிவக்கும் வரை வைத்திருந்து எடுத்து சூடாக பரிமாற வேண்டும். வெங்காய சட்டினி அல்லது ஆப்சலாவுடன் பரிமாற வேண்டும்