தேவையான‌ பொருட்கள்:

ஆட்டு இறைச்சி ‍- 500 கிராம்
கரம்மசாலா ‍- அரைக்கரண்டி
மல்லி இலை - சிறிதள‌வு
சில்லி பவுடர் - அரைக்கரண்டி
வெங்காயம் - 3
தக்காளி - 2
முந்திரிபருப்பு - 5
மிளகாய் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் -‍ 2 தேக்க‌ர‌ண்டி
தயிர் - 1 தேக்க‌ர‌ண்டி
எண்ணெய் - 4 தேக்க‌ர‌ண்டி
பட்டர் - 2 தேக்க‌ர‌ண்டி
ஃப்ரெஷ் கிரீம் - 2 தேக்க‌ர‌ண்டி
உப்பு - தேவையான‌ அள‌வு

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி நன்கு தண்ணீர் வைத்துக் கழுவி வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். மட்டனில் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு, அரைஸ்பூன் சில்லி பவுடர், தயிர், தேவைக்கு உப்பு சேர்த்து சிறிது ஊறவைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, மல்லி இலை நறுக்கி, பாதி பாதியாக பிரித்து வைக்க வேண்டும்.

குக்கரில் ஊறிய மட்டனோடு பாதி வெங்காயம், தக்காளி, மல்லி இலை சேர்த்து 3 விசில் வைத்து எடுக்க வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மீதி இருக்கும் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, கரம்மசாலா, மிளகாய், முந்திரிபருப்பு வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். அரைத்ததை வேக வைத்த மட்டனில் சேர்க்க வேண்டும். மட்டனும் குழம்புமாக‌ சேர்ந்து கொதி வரும். இறுதியாக 2 ஸ்பூன் பட்டர், ஃப்ரெஷ் கிரீம், மல்லி இலை தூவி பரிமாற வேண்டும்.

(நன்றி: அறுசுவை.காம்)