தேவையான பொருள்கள்:

1. பச்சை பீன்ஸ்.................1/4 கிலோ
2. பெல்லாரி.........................2
3. சின்ன வெங்காயம்........7
4. தேங்காய்..........................4 தேக்கரண்டி
5. சீரகம்.................................1/4 தேக்கரண்டி
6. பூண்டு...............................8
7. மிளகாய் பொடி...............1 தேக்கரண்டி
8. மஞ்சள் பொடி...................கொஞ்சம்
9. உப்பு...................................தேவையான அளவு
10. எண்ணெய்.......................4 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை................ ஒரு கொத்து

செய்முறை:

பீன்சை நீளவாக்கில் சாய்வாக வெட்டவும். தேங்காய், சீரகம்,பூண்டு + சின்ன வெங்காயத்தை நைசாக அரைக்கவும். தேங்காய் வேண்டாம் என நினைப்பவர்கள், அதற்குப் பதில் மசாலாவிற்கு 1 தேக்கரண்டி மல்லிப் பொடி போடலாம். பெல்லாரியை நைசாக நறுக்கி, 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும்.

நறுக்கிய பீன்சை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்த விழுது, வதக்கிய வெங்காயம், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி + உப்பு போட்டு ஒரு தேக்கரண்டி நீர் விட்டு பிசைந்து வைக்கவும். இதனை குளிர்பதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் விட்டு அதில் மசாலா ஊறிய பீன்ஸைப் போட்டு சிறு தீயில் பீன்சை வேகவிடவும். நன்கு பீன்ஸ் வெந்து மசாலா சிவந்து முறுகலான நிறம் வந்ததும் இறக்கி விடலாம். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி தூவி பரிமாறவும்.

பீன்ஸ் மசாலா வறுவல் சாம்பார் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் எல்லாவற்கும் தொட்டு சாப்பிடலாம்..! 

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It