தேவையானவை:

அரிசி...................................1 ஆழாக்கு
தயிர்...................................1 /4 கப்
பால்......................................1 /2 லி
துருவிய காரட்...................1 /4 கப்
மாதுளை............................1 /2 கப்
மாங்காய் இருந்தால்........1 /4 கப்
நறுக்கிய ஆப்பிள்..............1 /4 கப்
கருப்பு திராட்சை.................1 /2 கப்
வறுத்து, ஒடித்த முந்திரி....5
நறுக்கிய இஞ்சி...................1 தேக்கரண்டி
நறுக்கிய கறிவேப்பிலை....1 /4 தேக்கரண்டி
நறுக்கிய மல்லி தழை.......1 /4 தேக்கரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய்...2
பெருங்காயம்.........................கொஞ்சம்
கடுகு,உ.பருப்பு.......................1 /2 தேக்கரண்டி
எண்ணெய்..............................1 தேக்கரண்டி
உப்பு..........................................கொஞ்சம்

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி, குக்கரில் வைத்து குழைவாக வேகவிடவும். சாதத்தை நன்றாக கரண்டி/மத்தால் மசிக்கவும். பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உ.பருப்பு போட்டு சிவந்ததும், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். அதனை எடுத்து தயிரில் போடவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு, அதில் தாளித்த தயிர், பால் மற்றும் அனைத்துப் பொருள்களையும் போட்டு கரண்டியால் கிண்டவும். புளிப்பு அதிகம் வேண்டும் என்பவர்கள் 1 /2 கப் தயிர் விட்டுக் கொள்ளலாம். முக்கியமாக  அதிகம் உப்பு சேர்க்க கூடாது. அவ்வளவுதான்.. தயிர் சாதம்.

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It