மறவன் என்று வாயாற சொல்லிச் சொல்லி - தமிழன்
மரம் இணையாய் ஆகி விட்டான், ஐயோ பாவம்!
Tamilபழம் பெருமை ஒன்றுதானே இவன் சொத்து - இவன்
பகுத்தறிவைவெறுக்க பழகிக் கொண்ட வித்து.

ஒற்றுமையாய் வாழ நீங்கஓடிவாங்க - என்று
உளமாற அழைத்தாலும் உணர நினையான்
பித்தராய் மேடையில் பிதற்றுபவனை - உடனே
பெருமைப்படுத்த சிரமப்பட்டு உபசரிப்பான்.

எத்தர்களை பகைத்துக்கொள்ள விழையான் - மேலும்
எத்தனைதான் பட்டாலும் ஏற்றமுற நினையான்
கத்துவான் கால்பிடிப்பான் கதிஎன்பான் - ஆனால்
கனப்பொழுதும் தனை உணர கருதமாட்டான்.

பிள்ளை பெண் பெருமைதனைப் பேசமாட்டான் - ஆனால்
பிறராயின் புகழ்பாட தயங்க மாட்டான்
கல்லுக்கும் கட்டைக்கும் உடல்வறுப்பான் - ஆனால்
கனப்பொழுதும் இனஏற்றம் விழையமாட்டான்.

பிரிந்துவாழும் மனப்பாங்கே இவன் பண்பு - மேலும்
பிரிப்பவனைத் துதிப்பாடல் இவன் செய்யும் தொண்டு
தான்உயர நேரம்வரின் தயக்கம் காட்டுவான் - ஆனால்
தளராமல் உயர்த்திவிட தன்உடலை வளைப்பான்.

சாக்கடைதான் இவனுடலில் பாய்கின்றதோ!-அல்லது
சவத்திலேதான் செந்நீரும் தவிக்கின்றதோ!
பகுத்தறிவே! நீ நுழைய வழியில்லையோ! - அல்லது
இந்தப் பாழ் இனத்தைக் காப்பாற்ற மனமில்லையோ!

பொன்பரப்பியான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It